கடைக்காரர்கள், உதவியாளர்களுக்குப் பரவும் தொற்று; மக்களைக் கவ்விய அச்சம் ஆள் அரவமற்ற ஈரச்சந்தைகள்

சந்­தைக் கடைக்­கா­ரர்­கள், கடை உத­வி­யா­ளர்­க­ளி­டையே கிருமித் தொற்று கண்­டு­பி­டிக்­கப்­பட்­ட­தைத் தொடர்ந்து இங்­குள்ள பல சந்­தை­க­ளி­லும் உண­வங்­காடி நிலை­யங்­க­ளி­லும் நேற்று கூட்­டம் குறைந்து காணப்­பட்­டது.

சில சந்­தை­கள் தங்­கள் வழக்­கத்­தின்­படி திங்­கட்­கி­ழமை மூடி­யி­ருந்­த­தாக ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரி­வித்­தது. நேற்று திறந்­தி­ருந்த வேறு சில சந்­தை­களில் மீன் மற்­றும் கட­லு­ணவு வகை­களை விற்­கும் கடை­கள் மூடப்­பட்­டி­ருந்­தன.

உண­வங்­காடி நிலை­யங்­களில் வாடிக்­கை­யா­ளர்­கள் பெரும்­பா­லும் தனி­யாக அல்­லது இரு­வர் இரு­வ­ராக அமர்ந்து சிலர் மட்­டுமே உண்­ட­னர்.

தேசிய சுற்­றுப்­புற வாரி­யத்­தின் பாது­காப்பு இடை­வெளித் தூதர்­கள் சில உண­வங்­காடி நிலை­யங்­களில் காணப்­பட்­ட­னர்.

பெருந்­தொற்­றால் ஏற்­க­னவே வர்த்­த­கம் அடி வாங்­கி­யுள்­ளது. இப்­போது கூட்­டம் மேலும் குறைந்­த­தால் விற்­ப­னை­யும் சரிந்­து­விட்­ட­தாக சந்­தை­கள், உண­வங்­காடி நிலை­யங்­களில் கடை வைத்­தி­ருப்­ப­வர்­கள் கவ­லைப்­பட்­ட­னர்.

செங் சான் சந்தை, உண­வங்­காடி நிலை­யத்­தில் கோழி, ஆட்­டி­றைச்சி விற்­கும் திரு நூர் அப்­துல் அஸீஸ், 74, நேற்று அதி­காலை 6 மணிக்­குக் கடை திறந்­த­தார். ஆனால் , சொற்ப விற்­பனை மட்­டுமே நடை­பெற்­ற­தா­கக் கூறி­னார்.

சில வாடிக்­கை­யா­ளர்­கள் சந்­தைக்­குச் செல்ல வேண்­டாம் என்று தங்­கள் பிள்­ளை­கள் கேட்­டுக்­கொண்­ட­தா­க­வும் இணையத்­தில் பொருட்­களை வாங்­கித் தரு­வ­தா­க­கூறி­ய­தா­கச் சொன்­னார் வெஸ்ட் கோஸ்ட் சந்தை, உண­வங்­காடி நிலை­யத்­தில் முட்டை கடை நடத்­தும் திரு சியூ கியன் ஹூன், 55.

எனி­னும் இன்று ஹஜ்­ஜுப் பெரு­நாள் என்­ப­தால் சிலர் சந்­தைக்­குச் செல்­வ­தைத் தவிர்க்­க­வில்லை. ஹவ்­காங் வில்­லேஜ் சந்தை மூடப்­பட்­டி­ருக்­கும் என்ற பயத்­தில் அங்கு சென்­றார் திரு­வாட்டி நோய்­லிஸா, 52. ஆனால் சந்தை திறந்­தி­ருந்­த­தால் அவ­ருக்­குத் தேவை­யான பொருட்­கள் கிடைத்­தன.

ஜூரோங் மீன்­பி­டித் துறை­ முகத்­தில் கிரு­மிப் பர­வல் ஏற்­பட்­ட­தைத் தொடர்ந்து, கடந்த வார­ இறுதி­யில் ஹோங் லிம், சொங் பூன் சந்­தை­களில் தொற்­றுக் குழு­மங்­கள் ஏற்­பட்­ட­தாக அறி­விக்­கப்­பட்­டது. மேலும் 14 சந்­தை­களில் கிரு­மித் தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

அவற்­றில் ஹேக் ரோடு சந்தை மற்­றும் உண­வங்­காடி நிலை­யம், ஜூரோங் சென்ட்­ரல் பிளாஸா, ஷுன்ஃபூ மார்ட் குறித்து கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு சுகா­தார அமைச்சு அறி­வித்­தது. சந்­தை­ களைத் தவிர்த்து மேலும் 3 கேடிவி கூடங்­களில் தொற்று கண்­ட­றி­யப்­பட்­ட­தா­க­வும் அது கூறி­யது. நிலை­மையை அணுக்­க­மா­கக் கண்­கா­ணித்து விரைந்து நட­வ­டிக்கை எடுத்து வரு­வ­தாக அது கூறி­யது.

நேற்று மாலை நிலவரப்படி தொற்று ஏற்பட்ட சந்தைகளின் விவரம்:

ஹோங் லிம் சந்தை, உணவங்காடி நிலையம், சொங் பூன் சந்தை, உணவங்காடி நிலையம், அமோய் ஸ்திரீட் உணவு நிலையம் சொங் பாங் சந்தை, உணவங்காடி நிலையம், வாம்போ ஈரச்சந்தை, தெலுக் பிளாங்கா கிரசென்ட், தாமான் ஜூரோங் சந்தை, ரெட்ஹில் சந்தை, கேலாங் சிராய் மலாய் சந்தை கேலாங் பாரு சந்தை, அங் மோ கியோ புளோக் 527 சந்தை, வெஸ்ட் கோஸ்ட் புளோக் 726 ஈரச்சந்தை, புக்கிட் தீமா ஈரச்சந்தை, ஹேக் ரோடு சந்தை, உணவங்காடி நிலையம், ஜூரோங் சென்ட்ரல் பிளாஸா, ஷுன்ஃபூ மார்ட்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!