புதியவர்கள் அக்கம்பக்கம் பற்றி புரிந்துகொள்ள அறிமுக உலா

குடியிருப்புப் பேட்டையில் குடியேறும் புதியவர்கள் தங்களுடைய அக்கம்பக்கங்களை இப்போது எளிதாக தெரிந்துகொள்ள முடியும்.

‘நகர்ப்புற அறிமுக உலா செயல்திட்டமும்’ ‘உங்கள் அக்கம்பக்க வரவேற்பு வழிகாட்டி’ என்ற கை யேடும் ஒருவர், தான் வசிக்கும் பகுதியின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் அறிந்துகொள்ள உதவும். சமூக மன்றங்கள், வழிபாட்டு இடங்கள் போன்றவை இருக்கும் இடங்களை புதியவர்கள் எளிதில் தெரிந்துகொள்ளலாம்.

மரீன் பரேட் குழுத்தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகரும் தென்கிழக்கு மாவட்ட மேயருமான முகம்மது ஃபாமி அலிமான் நேற்று கேலாங் சிராய் சமூக மன்றத்தில் அந்த இரண்டு திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

தாங்கள் வசிக்கும் அக்கம்பக்கங்களின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் புதியவர்கள் தெரிந்துகொள்ள உதவுவதோடு, சமூகத்தில் தங்கள் சக குடியிருப்பாளர்களிடம் அவர்கள் தோழமையை வளர்த்துக்கொள்ளவும் புதிய திட்டங்கள் உதவும் என்று அவர் தெரிவித்தார்.

கேலாங் சிராய் சமூக மன்றத்தில் இருந்து உலா தொடங்கும்.

ஜூ சியாட் சமூக மன்றம், 85 ஃபெங்ஷான் சந்தை வழியாக அது செல்லும். விளக்கங்களுடன் கூடிய அந்த உலா இலவசமானது. அதற்கு ஒரு மணி நேரம் பிடிக்கும்.

உலாவில் கலந்துகொள் வோருக்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேலாங் சிராய் பாரம்பரிய கலைக்கூடம், சீன மேம்பாட்டுச் சங்க மன்றக் கட்டடம், பெலிலாய் பௌத்தக் கோயில் போன்ற இடங்களில் விளக்கமளிக்கப்படும்.

கொவிட்-19 கட்டுப்பாடுகள் நடப்பில் இருப்பதால் ஒவ்வொரு தடவையும் உலாவில் 10 பேர் மட்டுமே கலந்துகொள்ளலாம். அவர்கள் இரண்டு இரண்டு பேராக நடந்து கட்டுப்பாடுகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

அவர்களுக்கு வட்டார வரவேற்பு வழிகாட்டி ஏடு கொடுக்கப்படும். அந்த ஏட்டை, மக்கள் கழக இணையத் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உலாவில் ஆர்வமுள்ளவர்கள் சமூக மன்றத்தில் பதியலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!