தொழில் பாதைகள் குறித்து தெளிவுபெற உதவிய நிகழ்ச்சி

ஆர்த்தி சிவ­ரா­ஜன்

 

புதிய பட்­ட­தா­ரி­க­ளுக்­கும் உயர்­கல்விப் பட்­டம் பெறப்போகும் இறுதி ஆண்டு மாண­வர்­க­ளுக்­கும் தங்­கள் தொழில் குறிக்­கோள்­க­ளை­யும் ஆசை­க­ளை­யும் அடைய உதவி செய்­யும் விதத்­தில் சிண்டா இளை­யர் மன்­ற­மும் சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக்­க­ழ­க மாணவர்களின் தமிழா அமைப்­பும் ஒன்­றி­ணைந்து 'கனெக்டிங் டிரெ­யில்ப்­ளே­ஸர்ஸ்' (Connecting Trailblazers) எ­னும் கலந்­து­ரை­யா­டல் நிகழ்ச்­சியை நடத்தின.

கடந்த ஜூலை 17ஆம் தேதி பிற்­ப­கல் 2 மணி முதல் 4 மணி வரை 'ஸூம்' செயலி மூலம் நடை­பெற்ற இந்த நிகழ்ச்­சி­யில் 40 இளை­யர்­கள் கலந்­து­கொண்­ட­னர்.

தொழில்­மு­னைப்பு, காட்­சிக்­கலை மற்­றும் மேடைக்­கலை, அர­சாங்­கச் சேவை, பொதுச் சேவை, பொறி­யி­யல், ஊட­கம், தக­வல் தொடர்பு, கணக்­கி­யல், நிதி, கணினி மற்­றும் தரவு பகுப்­பாய்வு, வணி­கம், சுகா­தா­ரம், சமூ­கத் துறை உள்­ளிட்ட பல்­வேறு துறை­களில் பணி­யாற்­றும் 15 தொழில்­ துறை நி­பு­ணர்­கள் இந்த நிகழ்ச்சி­யில் பங்­கேற்று தங்­க­ள் அனு­ப­வங்­க­ளைப் பகிர்ந்­து­கொண்­ட­து­டன் இளை­யர்­க­ளுக்கு ஆலோ­ச­னை­க­ளை­யும் வழங்­கி­னர்.

பேச்­சா­ளர்­களாக, வேலையில் சேர்ந்துள்ள புதிய பட்­ட­தாரி­களும் மூன்று முதல் ஐந்து ஆண்டு­கள் வேலை அனு­ப­வம் பெற்­ற­வர்­களும் இடம்பெற்றனர்.

புதி­தாகப் பணி­ய­மர்த்­தப்­பட்ட ஊழி­ய­ராக இருப்­ப­து குறித்­தும் கிருமித்தொற்­று சமயத்தில் ஓர் அமைப்­பில் வேலைக்­குச் சேரும் அனு­ப­வம் குறித்­தும் புதிய பட்­ட­தா­ரி­கள் பகிர்ந்துகொண்­ட­னர்.

சில ஆண்­டு­க­ள் வேலை அனு­ப­வம் பெற்­ற­வர்­கள், தொழில்­து­றைப் போக்­கு­கள், அதன் வளர்ச்சி ஆகி­யவை பற்­றி­யும் அதிக செயல்­தி­றன் கொண்ட பணி­யா­ள­ராவது எப்­படி என்­ப­தைப் பற்­றி­யும் பகிர்ந்து கொண்டனர்.

மூன்று சுற்­று­களில் முழு­மை­யான

தக­வல்­கள்

நிகழ்­வில் கலந்­து­கொண்ட இளை­யர்­களும் தொழில்­து­றைப் பேச்­சா­ளர்­களும் ஒரு­வ­ரு­டன் ஒரு­வர் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­காக மூன்று சுற்­று­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்­டன.

முதல் சுற்­றில், பங்­கேற்­பா­ளர்­ க­ளுக்கு விருப்­ப­மான தொழில்­ துறை­க­ளைப் பற்றி மேலும் அறிந்து ­கொள்­வ­தற்­கும் அந்­தக் குறிப்­

பிட்­ட துறை­யைச் சார்ந்த பேச்­சா­ளர்­க­ளி­டம் மட்­டும் கலந்­து­ரை­யா­டு­வ­தற்­கும் வச­தி­யாக 'பிரேக் அவுட் ரூம்ஸ்' எனும் தனித்­தனி மெய்­நி­கர் அறை­களில் பிரிக்­கப்­பட்­ட­னர்.

இரண்­டா­வது சுற்று, பங்­கேற்­பா­ளர்­கள் அதி­கம் அறிந்­தி­ராத மற்ற தொழில் துறை­க­ளைப் பற்றி அறிந்­து­கொள்­ள ஒரு வாய்ப்­பாக அமைந்­தது. அதில் தாங்கள் அதிக ஆர்வம் காட்டாத மற்ற துறை நிபுணர்கள் பேசக் கேட்டனர் பங்கேற்பாளர்கள்.

இறுதிச் சுற்­றில், அழைக்­கப்­பட்ட அனைத்து தொழில் துறை பேச்­சா­ளர்­க­ளி­ட­மி­ருந்­தும் பங்­கேற்­பா­ளர்­கள் நுணுக்­க­மான உத­விக்குறிப்­புகளைக் கேட்­ட­றிந்த, திறந்த கலந்து­ரை­யா­டல் நடை­பெற்­றது.

 

அனைவருக்கும் வாய்ப்புகள்

தேவை

சிண்டா இளை­யர் மன்றத்­தின் தலை­வ­ரும் மேலாண்மைத் துறை ஆலோ­ச­க­ருமான துர்கா ராஜேந்­தி­ரன், 29, "தொழில்துறைப் பற்றி அறிந்­து­கொள்ள பள்­ளி­களில் போது­மான வாய்ப்­பு­கள் அமை­வ­தில்லை என்று பலர் கூறுவதுண்டு. இக்குறையை நீக்க இதுபோன்ற கூடுதல் நிகழ்வுகள் தேவை. இத்தகைய வாய்ப்புகள் பொதுவாக சிறந்த செயல்­தி­றன் கொண்ட இளை­யர்­களுக்கு அதிகமாகக் கிடைக்கின்றன. ஆனால் மற்­ற­வர்­ க­ளுக்கும் அதே அளவிலான வாய்ப்புகள் தேவை," என்றார்.

"இது போன்ற சில ஏற்­றத்­தாழ்வு­ கள் கார­ண­மாக நம் இந்­திய இளை­யர்­க­ளுக்கு மற்­ற­வர்­க­ளு­ட­னான தொழில் சார்ந்­தத் தொடர்­பு­கள் கிடைக்­கா­மல் போக­லாம். ஆகை­யால் சமூக அள­வி­லான இத்­த­கைய திட்­டங்­கள், நம் இளை­யர்­க­ளுக்கு கூடு­தல் வாய்ப்­பு­களை உரு­வாக்­கு­வ­து­டன் அவர்­க­ளுக்கு நம்­பிக்­கை­யும் ஊக்­க­மும் அளிக்­கின்­றன," என்று குமாரி துர்கா கூறி­னார்.

இத்­த­கைய நிகழ்ச்­சி­யில் பேச்­சா­ளர்­க­ளின் தேர்வு மிக முக்­கி­யம் என்­ற­னர் ஏற்­பாட்­டா­ளர்­கள்.

தமிழா அமைப்­பின் தலை­வ­ரும் சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக் கழ­க உள­வி­யல், தொடர்­புத் துறை மாண­வி­யு­மான தேவி­யானி, 22, "நிகழ்ச்­சி­யில் பேசு­வ­தற்கு பல்­வேறு துறை­க­ளைச் சேர்ந்த, வேலை­களில் நன்கு தேர்ந்த நிபு­ணர்­களை அழைத்­தோம்," என்று கூறி­னார்.

பயன்­பெற்ற பங்­கேற்­பா­ளர்­கள்

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக் கழ­கத்­தில் அர­சி­யல் ஆய்­வுத் துறை படிக்­கும் பிர­பு­தேவா, 24, ஆலோ­சனைத் துறை­யில் தம்மை எவ்­வாறு சிறப்­பாக நிலை­நி­றுத்­திக் கொள்வது என்­று அறிய விரும்பி நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

"எனது தொழில் குறிக்­கோள்­களை அடை­வ­தற்­கான வாய்ப்­பு­களை எவ்­வாறு பயன்­படுத்திக் கொள்ள முடி­யும் என்­ப­தைப் ­பற்றி தெளிவு பெற்­றேன்.

"பேச்­சா­ளர்­களில் ஒரு­வ­ரான திரு­மதி பர்­ணிகா திரி­பாத்தி 'நாம் தகு­தி­யும் திற­மை­யும் உடை­ய­வர்­கள்' என்ற கருத்தை முன்­வைத்­தார். அவர் கூறிய வார்த்தைகள் என்னைச் சிறப்­பா­கச் செயல்­ப­ட­வும் மேம்­ப­டுத்­திக் கொள்­ள­வும் தூண்­டின," என்று பகிர்ந்­தார்.

சிங்­கப்­பூர் நிர்­வா­கப் பல்­க­லைக் கழ­கத்­தில் பொரு­ளா­தா­ரம் படிக்­கும் கெள­சல்யா கணே­சன், 22, பட்­டப்­ப­டிப்­புக்­குப் பின்­னர் கணினி, தர­வுப் பகுப்­பாய்வு துறை­யில் சேர விரும்­பு­கி­றார்.

ஆனால், அந்தச் சம­யத்­தில் வேலைவாய்ப்­பு­கள் எவ்­வாறு இருக்­கும் என்று சற்று அச்­சப்­பட்­ட­தாக கௌசல்யா கூறி­னார்.

"தொழில் வல்­லு­நர்­க­ளி­ட­மி­ருந்து தொழில் நுண்­ண­றி­வைப் பெற­வும் பணி­யி­டச் சூழலை ஆராய்ந்­து­ புரிந்துகொள்­ளும் வழி­கள் பற்றி ஆலோ­ச­னை­யைப் பெற­வும் நான் விரும்­பி­னேன்," என்­றார் அவர்.

கணிணி, தர­வுப் பகுப்­பாய்­வுத் துறை பெரும்­பா­லும் இளை­யர்­கள் பணி­பு­ரி­யும் ஒரு வளர்ந்து வரும் துறை.

"அத­னால், இத்துறை­யில் நுழை­யும்­போது எந்த வகை­யான தளங்­க­ளைப் பயன்­ப­டுத்த வேண்­டும் என்­ப­தை­யும் எந்த வகை­யான அணு­கு­மு­றையைக் கையாள வேண்­டும் என்­பதைப் பற்­றி­யும் பேச்­சா­ளர்­கள் பகிர்ந்த அனு­ப­வங்­கள் எனக்கு மிக­வும் பய­ன­ளித்­தன," என்று கூறி­னார் கெள­சல்யா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!