‘நெட்ஃபிளிக்ஸ்’ பாணியில் காப்புறுதி வழங்கும் புதிய சந்தாத் திட்டம்

காப்­பு­றுதி நிறு­வ­னங்­கள் பல்­வேறு வர்த்­தக முறை­க­ளைப் பயன்­படுத்தி வாடிக்­கை­யா­ளர்­களை ஈர்த்­து­வ­ரும் நிலை­யில், ‘என்­டி­யுசி இன்­கம்’ மக்­க­ளுக்கு நன்கு பரிச்­ச­ய­மான ஓர் உத்­தி­யைப் பயன்­படுத்­தி­யுள்­ளது.

‘நெட்­ஃபி­ளிக்ஸ்’ சேவை­யைப் பயன்­ப­டுத்­திப் படங்­கள், தொடர்­கள் ஆகி­ய­வற்றை நாடும் வாடிக்­கை­யா­ளர்­கள், மாதம் தலா 10 வெள்ளி சந்தா செலுத்­து­வர். அந்­தத் திட்­டத்­தில் அவர்­கள் எந்­நேரத்­தி­லும் மாற்­றம் செய்­யும் வச­தி­யும் உண்டு. அதே வர்த்­தக முறையை காப்­பு­றுதி நிறு­வ­னம், ‘ட்ரைப்’ என்ற சேவையை வழங்­கப் பயன்­ப­டுத்து­கிறது.

சிங்­கப்­பூ­ரி­லேயே இத்­த­கைய சந்தா திட்­டம் அடிப்­ப­டை­யில் வாடிக்­கை­யா­ளர் தேவைக்கு ஏற்ப மாற்­றம் செய்­யும் முதல் காப்­பு­று­தித் திட்­டத்தை நிறு­வ­னம் வடி­வமைத்­துள்­ளது.

ஐந்தே வெள்­ளியை மாதச் சந்­தா­வாக செலுத்­தும் திட்­டத்­தின் கீழ் வெவ்­வேறு அம்­சங்­க­ளி­லி­ருந்து வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­க­ளின் மாறி­வ­ரும் நிதித் தேவை அடிப்­படை­யில் தேர்ந்­தெ­டுத்­துக்­கொள்­ள­லாம்.

தற்­கா­லிக வேலை­யில் உள்­ள­வர்­கள், புதி­தாக பெற்­றோர் ஆன­வர்­கள், தங்­க­ளின் முதல் வேலை­யில் சேர்ந்­த­வர்­கள் போன்­றோருக்கு இது­போன்ற திட்­டம் பேரு­த­வி­யாக இருக்­கும் என்­றார் நிறு­வ­னத்­தின் தலைமை மின்­னி­லக்க அதி­காரி பீட்­டர் டே.

ஒரு சில காப்­பு­று­தித் திட்­டங்­களின்கீழ் வாடிக்­கை­யா­ள­ருக்­குத் தேவைப்­ப­டாத அம்­சங்­கள் இருக்­கக்­கூ­டும் என்று குறிப்­பிட்ட அவர், இது­போன்ற திட்­டத்தை வழங்­கு­வ­தால் வாடிக்­கை­யா­ளர் தம் விருப்­பத்­திற்கு ஏற்ற அம்­சங்­க­ளைத் தேர்ந்­தெ­டுத்­துத் திருப்­தி­ய­டைய முடி­வ­தா­கக் கூறி­னார்.

வாடிக்­கை­யா­ள­ருக்கு மட்­டு­மன்றி அவ­ரின் குடும்­பச் சூழ­லுக்கு ஏற்ப இத்­த­கைய சந்தா முறை அமைந்­தி­டும் என்­றும் திரு டே விளக்­கி­னார்.

சந்தா அடிப்­ப­டை­யி­லான வர்த்­த­கங்­கள் பாரம்­ப­ரிய முறை­யில் செயல்­படும் வர்த்­த­கங்­க­ளைக் காட்­டி­லும் ஐந்­தி­லி­ருந்து எட்டு மடங்கு வேக­மாக வளர்ச்சி கண்­டுள்­ளன என்ற தக­வ­லை­யும் அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!