உட்லண்ட்ஸில் புதிய சமூக மளிகைக் கடை

உட்­லண்ட்ஸ் வட்­டா­ரத்­தில் புதிய சமூக மளி­கைக் கடை ஒன்று திறக்­கப்­பட்­டுள்­ளது.

ஸ்டோர்@உட்­லண்ட்ஸ் எனப் பெய­ரி­டப்­பட்­டுள்ள அந்­தச் சமூக மளி­கைக் கடைக்கு இது­வரை 120 குடி­யி­ருப்­பா­ளர்­கள் சென்­றுள்­ள­னர்.

அந்த மளி­கைக் கடை புளோக் 852 உட்­லண்ட்ஸ் ஸ்தி­ரீட் 83ல் உள்­ளது.

குறைந்த வரு­மா­னக் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு உதவ இந்த மளி­கைக் கடை திறக்­கப்­பட்­டுள்­ளது.

மக்­கள் செயல் கட்சி சமூக அற­நி­று­வ­னத்­தின் உட்­லண்ட்ஸ் கிளை, உட்­லண்­ட்ஸ் குடி­யி­ருப்­பா­ளர்­கள் ஆலோ­ச­னைக் குழு ஆகி­ய­வற்­றின் கூட்டு முயற்­சி­யின்­கீழ் ஒவ்­வொரு மாத­மும் அதி­க­பட்­சம் ஒன்­பது மளி­கைப் பொருட்­க­ளைக் குறைந்த வரு­மா­னக் குடி­யி­ருப்­பா­ளர்­கள் தேர்ந்தெடுத்து இலவசமாக பெற்றுக்கொள்ளலாம். 150க்கும் மேற்பட்ட குறைந்த வருமானக் குடும்பங்களுக்கு உதவுவதே புதிய சமூக மளிகைக் கடையின் இலக்கு என்று செம்பவாங் குழுத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மரியாம் ஜஃபார் தெரிவித்தார்.

சமூக மளிகைக் கடைக்கு நேற்று சென்றிருந்த திருவாட்டி மரியாம், செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசினார்.

"பல்வேறு பங்காளிகள் வழங்கிய நன்கொடையைப் பயன்படுத்தி கடந்த பல ஆண்டுகளாக வசதி குறைந்த குடியிருப்பாளர்களுக்கு நாங்கள் உணவுப் பொருட்களை விநியோகித்தோம்.

"ஆனால் வழங்­கப்­பட்ட சில உண­வுப் பொருட்­கள் தங்­க­ளுக்கு ஏற்­பு­டை­ய­தல்ல என்று குடி­யி­ருப்­பா­ளர்­களில் சிலர் தெரி­வித்­த­னர். உடல்­ந­லம் கார­ண­மாக அல்­லது தனிப்­பட்ட விருப்­பத்­தால் அவர்க­ளால் விநி­யோ­கிக்­கப்­பட்ட உண­வுப் பொருட்­க­ளைச் சாப்­பிட முடி­யா­மல் போனது. குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் வீடு­க­ளுக்­குச் செல்­லும்­போது பயன்­ப­டுத்­தப்­ப­டாத உண­வுப் பெருட்­கள் இருப்­பதை நாங்­கள் கண்­டோம். காலா­வ­தி­யான உண­வுப் பொருட்­கள் குவிந்­து­கி­டப்­ப­தை­யும் பார்த்­தோம்.

"அத­னால்­தான் தங்­க­ளுக்­குத் தேவை­யான உண­வுப் பொருட்­க­ளைக் குடி­யி­ருப்­பா­ளர்­கள் தேர்ந்­தெ­டுக்­கும் அணு­கு­மு­றையை நாங்­கள் தொடங்­கி­யுள்­ளோம். சமூக மளி­கைக் கடை­யில் உள்ள பொருட்­களில் தங்­க­ளுக்கு வேண்­டிய, பிடித்­த­மான பொருட்­களை அவர்­கள் தேர்ந்­தெ­டுக்­க­லாம். ஆரோக்­கி­ய­மான உண­வுப் பொருட்­க­ளைக் கொண்டு சமைக்­க­லாம்," என்று திரு­வாட்டி மரி­யாம் தெரி­வித்­தார்.

சமூ­கத்­தி­ட­மி­ருந்தும் பிரைம் பேரங்­காடி, லியோங் ஹப் போன்ற ஆத­ர­வா­ளர்­க­ளி­ட­மி­ருந்­தும் கிடைத்த நன்­கொ­டை­யை­ப் பயன்

­ப­டுத்தி கடந்த மாதத்­தி­லி­ருந்து புதிய சமூக மளி­கைக் கடை­யில் 3,000க்கும் மேற்­பட்ட மளி­கைப் பொருட்­கள் அடுக்கி வைக்­கப்­பட்­டுள்­ள­தாக திரு­வாட்டி மரி­யாம் கூறி­னார்.

"எதிர்­கா­லத்­தில் இந்­தச் சமூக மளி­கைக் கடை சமூக இட­மாக மாற வேண்­டும் என விரும்­புகி­றோம்.

"குடி­யி­ருப்­பா­ளர்­க­ளி­டம் ஆரோக்­கி­ய­மான உண­வு­வ­கை­களை அறி­மு­கப்­ப­டுத்த சமை­யல் நிகழ்ச்­சி­களை நடத்த விரும்­பு­கி­றோம். இருக்­கும் பணத்தை வைத்­துக்­கொண்டு கடை­களில் பொருட்­களை வாங்கும் திற­னைப் பிள்­ளை­க­ளுக்­குக் கற்­பிக்­கும் நிகழ்ச்சி ­க­ளுக்கு ஏற்­பாடு செய்யத் திட்­ட­மிட்­டுள்­ளோம்," என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!