சிறுவயதிலிருந்தே சுகாதாரத் துறையில் ஆர்வம்

இந்து இளங்­கோ­வன்

புற்­று­நோ­யால் அவ­திப்­பட்ட பாட்­டி­யு­டன் ஒன்­பது வய­தி­லி­ருந்தே மருத்­து­வ­ம­னைக்­குப் பல­முறை சென்று வரு­வார் ஸ்ரீ துர்க்கா, 19. அங்கு இருந்த தாதி­யர், பாட்­டி­யைக் கனி­வு­ட­னும் பொறு­மை­யு­ட­னும் கவ­னித்­துக்­கொண்­டது இன்­றும் தன் நினை­வில் நிற்­ப­தா­கக் கூறும் துர்க்கா, அடுத்த மாதம் சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் தாதி­மைத் துறை­யில் தன் படிப்­பைத் துவங்­க­வுள்­ளார்.

சிறு­வ­ய­தில் வார இறுதி நாட்­க­ளெல்­லாம் பாட்­டி­யு­டன் மருத்­து­வ­ம­னை­யில் இருந்­த­வாறு வீட்­டுப்பா­டங்­கள் செய்த துர்க்கா, தாதி­யர் என்­னென்ன செய்­கி­றார்­கள், எப்­படி நடந்­து­கொள்­கி­றார்­கள், அவர்­க­ளின் வேலைப்­பளு என்ன, இவற்றை எல்லாம் கவ­னித்­துத் தெரிந்­து­கொண்­ட­தாக கூறி­னார்.

பாட்­டிக்கு மட்­டும் அல்ல தன் தாத்­தா­விற்கு ஏதே­னும் அவ­சர மருத்­து­வத் தேவை ஏற்­பட்­டா­லும் துர்க்கா அவ­ரு­டன் செல்­வா­ராம். இப்­படிப் பல முறை மருத்­து­வ­ம­னைக்­குச் சென்று வந்த இவர், எதிர்­கா­லத்­தில் மீண்­டும் அந்த ம­ருத்­து­வ­ம­னை­யி­லேயே தாதி­யா­கப் பணி­யாற்ற விரும்­பு­கி­றார்.

குடும்­பத்­தி­னர், உற­வி­னர்­கள் பலர் தம்மை மருத்­து­வர் கல்வி கற்கச் சொல்லி ஊக்­கு­வித்­தா­லும் தாதி­மைத் துறையே தனக்கு ஏற்­றது என்ற உறு­தி­யு­டன் இருக்­கும் துர்க்­கா­விற்­குக் கடந்த ஜூலை 28ஆம் தேதி­யன்று தாதி­மைத் துறைக்­கான சுகா­தா­ரப் பரா­மரிப்பு உப­கா­ரச்­ சம்­ப­ளத்தை வழங்­கி­யது சுகா­தார அமைச்சு.

விருது வழங்கும் விழா­வில் சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் கலந்­து­கொண்டு உப­கா­ரச் சம்­ப­ளம் பெற்ற 164 எதிர்­கா­லச் சுகா­தா­ரத் துறை­யி­ன­ருக்­கும் உற்­சாக வார்த்­தை­கள் கூறி­னார். கொவிட்-19 கிரு­மித்­தொற்­றுச் சூழல், சுகா­தா­ரத் துறைக்­குப் பல சவால்­களை விடுத்து வந்­தா­லும் தொடர்ந்து தங்­க­ளின் கட­மையை ஆற்­றி­வ­ரும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­யி­ன­ருக்­குத் தமது நன்­றி­யைத் தெரி­வித்து உப­கா­ரச் சம்­ப­ளம் பெற்ற மாண­வர்­க­ளைப் பெரி­தும் பாராட்­டி­னார் திரு ஓங். இந்த ஆண்டு, எட்டு பிரி­வு­க­ளைக் கொண்ட சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு துறை­யின் உப­கா­ரச் சம்­ப­ளத்­தைப் பெற்­ற­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் கடந்த ஆண்­டை­விட 30% அதி­க­மா­கும்.

தொழில் தொடர்பு சிகிச்­சை­ மு­றைக்­கான உப­கா­ரச் சம்­ப­ளம் பெற்­ற­வர்­களில் நூர் ஹசிகா சலீ­மு­தீ­னும் (19) ஒரு­வர்.

சிறு­வ­யது முதல் இன்று வரை தமது பாட்டி, தாத்­தா­வைக் கவ­னித்து வரும் இவ­ருக்கு, மருத்­து­வத் துறை­யில் ஆர்­வம் வளர்ந்­தது. 69 வய­தா­கும் பாட்டி ஒரு முறை அறுவை சிகிச்சை செய்­யும் கால­கட்­டத்­தில் உடல் அள­வி­லும் மன­த­ள­வி­லும் சில பாதிப்­பு­க­ளை­யும் விளை­வு­க­ளை­யும் சந்­தித்­ததை நினைவுகூர்ந்­தார் ஹசிகா.

பாட்டி படிப்­ப­டி­யாக குண­ம­டைந்து வரு­வ­தைப் பார்த்து மன­நி­றை­வு ­கொண்­ட­தாக கூறி­னார். கூடிய விரை­வில் சிங்­கப்­பூர் தொழில்­நுட்ப கழ­கத்­தில் (SIT) தொழில் தொடர்பு சிகிச்­சைத் துறை­யில் தமது பட்­டப்­ப­டிப்பை ஹசிகா தொடங்­க­வி­ருக்­கி­றார்.

"நான் தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் வேலைப்­ ப­யிற்சி பெற்­றேன். ஒரு முறை வய­தான தம்­ப­தி­யர் என்­னி­டம் வந்து நன்றி தெரி­வித்து, 'நீ செய்­யும் இந்தப் பணி மகத்­து­வம் வாய்ந்த, மரி­யா­தைக்­கு­ரிய பணி. சேவை­யையே முழு­நே­ர­மாக புரி­யும் இந்த வேலை கடி­ன­மா­னது. ஆனால் மிக அவ­சி­ய­மா­னது' என்று கூறிச் சென்­ற­னர். இந்­தத் துறையை நான் தேர்வு செய்ய அந்த வார்த்­தை­கள் மேலும் எனக்கு உற்­சா­க­ம­ளித்­தன," என்­றார் ஹசிகா.

தொடக்­கக் கல்­லூ­ரி­யில் பயின்ற துர்க்கா, ஹசிகா இரு­வ­ரும் சிறு­வ­ய­தி­லேயே சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் துறை­யில் ஆர்­வம் கொண்டு தங்­க­ளின் தொழில் பாதையை அத்­து­றை­யி­லேயே செதுக்­கத் தொடங்­கி­யுள்­ள­னர். அவர்­க­ளுக்கு நமது வாழ்த்­து­கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!