மாறுபட்ட பற்றுறுதிச் சடங்கு

இந்த ஆண்­டின் தேசிய தினப் பற்­று­று­திச் சடங்­கில் அதி­பர் ஹலிமா யாக்­கோப், பிர­த­மர் லீ சியன் லூங் ஆகி­யோ­ரு­டன் 300க்கும் அதி­க­மான அர­சாங்க ஊழி­யர்­கள் மெய்­நி­கர் தளத்தில் கலந்­து­கொண்­ட­னர். நேற்று இஸ்தானா வளாகத்தில் நடை­பெற்ற சடங்­கிற்கு அதி­பர் ஹலிமா, பிர­த­மர் லீயை வரவேற்றார்.

ஆண்­டு­தோ­றும் தேசிய தினத்தை­யொட்டி நடை­பெற்­று­வ­ரும் சடங்­கில் சிங்­கப்­பூர் நாணய ஆணை­யம், லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு உள்­ளிட்ட அமைப்­பு­க­ளைச் சேர்ந்த அர­சாங்க ஊழி­யர்­கள் ஸூம் தளத்தின்வழி மெய்­நி­கர் வடி­வில் பங்­கேற்­ற­னர். கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சூழல் கார­ண­மாக அனை­வ­ரின் பாது­காப்­பை­யும் கருத்­தில்­கொண்டு சடங்கு நேர­டி­யா­க­வும் மெய்­நி­கர் வடி­வி­லும் நடத்­தப்­பட்­டது. மூத்த அமைச்­சர் தர்­மன் சண்­மு­க­ரத்­னம், துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் ஆகி­யோ­ரும் மெய்­நி­கர் தளத்தில் பங்கேற்­ற­னர்.

சிங்­கப்­பூ­ரின் தேசிய நிறங்களான சிவப்பு மற்­றும் வெள்­ளை­யில் உள்ள ஆடை­களை அணிந்­தி­ருந்த பங்கேற்­பா­ளர்­கள், தேசி­யப் பற்றுறுதியைச் சொல்லி தேசிய கீதத்­தைப் பாடி­னர். இந்த ஆண்டின் தேசிய தினப் பாட­லான 'தி ரோட் அஹெட்', சடங்­கின் இறு­திக் கட்டத்தில் ஒலி­ப­ரப்­பப்­பட்­டது.

பாட­லா­சி­ரி­ய­ரும் பாட­க­ரு­மான லின்­யிங், இசைத் தயா­ரிப்­பா­ளர் எவன் லோ ஆகி­யோ­ரால் இயற்றப்பட்ட அந்­தப் பாடல் பொதுமக்­க­ளி­டம் நல்ல வரவேற்பைப் பெற்­றுள்­ளது. யூ­டி­யூப், ஸ்பொட்­டிஃபை, ஆப்­பிள் மியூ­சிக் ஆகிய தளங்­களில் பாடல் இடம்பெற்றுள்ளது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வ­லுக்கு எதி­ரான போராட்­டம் தொட­ரும் இவ்­வே­ளை­யில், ஒன்­று­பட்டு நிற்குமாறு அதி­பர் ஹலிமா நேற்று மதி­யம் ஃபேஸ்புக் பதி­வில் சிங்கப்பூரர்­க­ளைக் கேட்­டுக்­கொண்டார்.

"கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சூழல் நமது தின­சரி வாழ்க்கை முறையை மாற்­றி­யி­ருக்­க­லாம். இருந்தா­லும் பல கால­மாக நடைபெற்­று­வ­ரும் தேசிய தினப் பற்­று­று­திச் சடங்கு போன்ற நிகழ்வு­க­ளைச் சூழ்­நி­லைக்கு ஏற்றவாறு மாற்­றி­ய­மைத்து நடத்த முடிந்­த­வரை முயற்சி செய்­வோம்," என்­றார் அதி­பர் ஹலிமா.

சென்ற ஆண்­டும் பற்­று­று­திச் சடங்கு நேர­டி­யா­க­வும் மெய்­நி­கர் வடி­வி­லும் நடை­பெற்­றது.

கொவிட்-19 கிரு­மிப் பர­வல் சூழல் கார­ண­மாக இந்த ஆண்டின் தேசிய தின அணி­வ­குப்பு இம்­மாதம் 21ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்கப்பட்டுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!