சான் சுன் சிங்: பள்ளிகளில் ‘தடுப்பூசி அல்லது பரிசோதனை’ நடைமுறை; குறிப்பிட்ட மாணவர்களுக்கு மட்டும் தனிமைப்படுத்துதல் தடுப்பூசி போடாத பள்ளி ஊழியர்க்கு பரிசோதனை

கொவிட்-19 தடுப்­பூ­சி­யைப் போட்­டுக்­கொள்­ளாத பள்ளி ஆசி­ரி­யர் களுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் வரும் அக்­டோ­பர் 1ஆம் தேதி­யி­லி­ருந்து வாரத்­துக்கு இரண்டு முறை கிருமி விரை­வுப் பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­ளப்­படும். புதிய 'தடுப்­பூசி அல்­லது அடிக்­கடி பரி­சோ­தனை' திட்­டத்­தின் கீழ் அந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.

அத்­து­டன், பள்­ளி­யில் தொற்று ஏற்­ப­டும்­போது, அந்த வகுப்­பு­நி­லை­யில் உள்ள எல்லா மாண­வர்­க­ளை­யும் வீட்­டில் இருந்து கற்­கும் முறைக்கு மாற்­றா­மல், அதே வகுப்­பு­கள், இணைப்­பாட நட­வ­டிக்­கை­கள் ஆகி­ய­வற்­றில் உள்ள சக மாண­வர்­க­ளுக்கு மட்­டும் விடுப்பு அல்­லது தனிமை உத்­த­ரவு வழங்­கப்­படும். கல்வி அமைச்­சர் திரு சான் சுன் சிங் நேற்று தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் இத­னைத் தெரி­வித்­தார்.

அத்­து­டன், துணைப்­பாட அல்­லது செறி­வூட்டு நிலை­யங்­களில் பணி­யாற்­று­வோர் உட்­பட, 12 வயது அல்­லது அதற்­கும் குறை­வான வய­துள்ள சிறு­வர்­க­ளு­டன் அடிக்­கடி தொடர்­பில் உள்ள அர­சாங்­கம் சாரா ஊழி­யர்­க­ளுக்­கும் இந்த விதி­முறை பொருந்­தும்.

மேலும், 12 வயது அல்­லது அதற்­கும் குறை­வான வய­துள்ள பிள்­ளை­கள் பயி­லும் துணைப்­பாட, செறி­வூட்டு நிலை­யங்­களில் பணி­யாற்­றும் துப்­பு­ரவுத் தொழி­லா­ளர்­கள் வரும் செப்­டம்­பர் 3ஆம் தேதி­யி­லி­ருந்து அடிக்­கடி விரை­வுக் கிரு­மிப் பரி­சோ­த­னைக்­குச் செல்ல வேண்­டும்.

சிங்­கப்­பூர் கொவிட்-19 கிரு­மித் தொற்­று­டன் வாழப் பழகும் சூழலை நோக்­கிச் செல்­லும் வேளை­யில் கல்வி அமைச்சு பள்­ளி­களில் ஏற்­படும் தொற்றை நீடித்த, தாக்குப் பிடிக்கக் கூடிய அணுகுமுறை­யைக் கொண்டு கையா­ளும் என்று திரு சான் கூறி­னார்.

தடுப்­பூசி அல்­லது அடிக்­கடி பரி­சோ­தனை எனும் விதி­முறை பல பணி­யி­டச் சூழல்­களில் நடப்­புக்கு வரும் என்று சுகா­தார அமைச்சு ஏற்­கெ­னவே கூறி­யி­ருந்­தது.

முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக் கொள்­ளா­த­வர்­கள், தடுப்­பூ­சியை அறவே போட்­டுக் கொள்­ளா­த­வர்­கள், மருத்­து­வக் கார­ணங்­க­ளால் அதற்கு தகுதி பெறா­த­வர்­கள் அடிக்­கடி விரை­வுப் பரி­சோ­த­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வார்­கள்.

மேலும், ஆகஸ்ட் மாதத்­தி­லி­ருந்து வகுப்­பு­க­ளுக்கு குறைந்­த­பட்ச இடை­யூறு ஏற்­படும் வகை­யில் பள்­ளி­களில் கிரு­மித் தொற்­றுச் சம்­ப­வங்­கள் குறிப்­பிட்ட அள­வில் கையா­ளப்­பட்டு வரு­வ­தாக திரு சான் கூறி­னார்.

கடந்த மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை சிங்­கப்­பூ­ரின் 600,000 மாண­வர்­களில் 216 பேருக்கு கிரு­மித் தொற்று ஏற்­பட்­டது. அவர்­களில் 103 பேர் தொடக்­கப்­பள்ளி மாண­வர்­கள். பாதிக்­கப்­பட்ட மாண­வர்­களில் பாதி பேருக்கு மேல், தொற்று ஏற்­படும் முன்­னரே தனி­மைப் படுத்­தப்­பட்­டு­விட்­ட­னர். அதா­வது, அவர் களால் சக பள்ளி மாண­வர்­க­ளுக்கு ஆபத்து ஏதும் இல்லை என்­றும் அத­னால் அவர்­க­ளு­டன் தொடர்­புள்­ள­வர்­க­ளைக் கண்டறிய தேவை இல்லை என்­று திரு சான் கூறினார்.

மே முதல் ஜூலை வரை 50 பள்­ளி­க­ளைச் சேர்ந்த 20,000க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள் வீட்­டி­லி­ருந்து கற்­கும் முறைக்கு மாறி­னர். இவர்­களில் யாருக்­கும் தொற்று ஏற்­ப­ட­வில்லை என்று அவர் சுட்­டிக்­காட்­டி­னார்.

அத்­து­டன், தொற்று ஏற்­படும் போது மாண­வர்­க­ளுக்­கும் அவர் ­க­ளின் குடும்­பங்­க­ளுக்­கும் உண்­டா­கும் இடை­யூ­றைக் குறைக்க, அதிக ஊடு­று­வல் இல்­லாத பரி­சோ­தனை முறை­களை கல்வி அமைச்சு ஆராய்ந்து வரு­வ­தாக திரு சான் குறிப்­பிட்­டார்.

யார் யார் எல்­லாம், எவ்­வ­ளவு காலத்­துக்­குப் பள்­ளிக்கு வரா­மல் இருப்­பது என்­ப­தைத் தீர்­மா­னிக்க வும் குறிப்பிட்ட சம்பவங்களை அணுகுமுறைக்கும் அது உத­வும் என்றார் திரு சான்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!