முன்னாள் மருத்துவ தாதி, இந்நாள் ராணுவ அதிகாரி

இந்து இளங்கோவன்

­

தாதியாக முதல் பரி­மா­ணம். இப்போது சிங்­கப்­பூர் ஆயு­தப்­படை அதி­காரி. 2014ஆம் ஆண்டு தொடங்கி ஆறு ஆண்டு­க­ள் சிங்­கப்­பூர் பொது மருத்து­வ­ ம­னை­யில் தாதி­யாக வேலை செய்து வந்­த­ 30 வயது ஐஸ்­வர்யா நேத்­தாஜிக்கு சிங்­கப்­பூர் ராணு­வத்­தில் சேர வேண்­டும் என்ற ஆசை கடந்த ஆண்டு ஏற்­பட்­டது.

தாதி­யா­கப் பிற­ருக்­கு சேவை செய்­கி­றோம் என்ற மகிழ்ச்சி இருந்­தா­லும் செய்­யும் பணி­யில் அவருக்கு மன­நிறை­வில்­லா­மல் இருந்­த­து.

தாதி­யா­க தான் கற்­றுக்­கொண்ட திறன்­களை­யும் நாட்­டின் மீதான பற்­றை­யும் ஒன்­றி­ணைக்க சிங்கப்பூர் ராணு­வத்­தில் சேர முடி­வெ­டுத்­தார் ஐஸ்­வர்யா.

ராணு­வத்­தில் பணியாற்றிய கடந்த ஓராண்டு, தன் வாழ்க்­கைக்கு ஒரு புது அர்த்­தத்­தைக் கொடுத்­துள்­ள­தாக பகிர்ந்­து­கொண்­டார். 48வது நிபு­ணத்­துவ ஆயு­தப்­படை பயிற்சி அதி­கா­ரி­களுக்­கான பட்­ட­ம­ளிப்பு அணி­வகுப்பு இம்­மா­தம் 19ஆம் தேதி வரை நடை­பெற்று வரு­கிறது.

அதில் 1,139 நிபு­ணத்­து­வப் பயிற்சி அதி­கா­ரி­களும் ராணுவ நிபு­ணர்­களும் பயிற்­சியை முடித்து பட்­டம் பெறு­கின்­றனர். அவர்­களில் சிங்­கப்­பூர் ஆயு­தப் படை­யில் மருத்­துவ நிபு­ண­ராக சேர்ந்­தி­ருக்­கும் ஐஸ்­வர்யாவும் ஒரு­வர்.

அவர் செயலாற்றும் படைப்­பிரி­வில் அவர் மட்­டுமே பெண். அது­வும் அப்பிரிவில் இவர்­தான் வய­தில் மூத்­த­வர்.

இருப்­பி­னும் தனிப்­பட்ட உடற்­தகு­திச் சோத­னை­யில் சிறந்து விளங்கி தங்­க விருதைப் பெற்­ற­தோடு தம்­மை­விட வய­தில் குறைந்த ஆண்­க­ளை­விட சிறந்த தேர்ச்சி பெற்றதை பெரு­மை­யு­டன் குறிப்பிட்டார் ஐஸ்­வர்யா.

படையில் இடம்பெற்றிருக்கும் ஒரே பெண், அதிலும் மற்றவர்களைவிட வயதில் மூத்தவர் என்ற தயக்­க­மும் பதற்­ற­மும் ஐஸ்­வர்­யா­விற்கு இருந்­தது. ஆனா­லும் படையி­னர் அதை­ப் பொருட்­படுத்­தா­மல் பயிற்­சி­களின்­போது தொடர்ந்து தமக்கு ஊக்­கம் தந்­த­தாக அவர் கூறி­னார்.

பல உடல் வலி­மைப் பயிற்­சி­களில் ஆண், பெண் என்று வேறு­ப­டுத்த முடி­யாத அள­விற்கு ராணு­வத்­தில் ஆண்­களுக்கு நிக­ராக பெண்­கள் சாதனை புரி­கி­றார்­கள் என்பதையும் ஐஸ்வர்யா குறிப்பிட்டார்.

ஒருமுறை காட்­டுப்­ப­கு­தி­யில் பயிற்சி செய்து கொண்­டி­ருந்­த­போது கன­மழை பெய்யத் தொடங்­கி­யது. ஐஸ்­வர்­யா­வும் அவரது பிரி­வி­ன­ரும் மழைக்­காக ஒதுங்கி நின்ற சமயத்தில் அவரவர்கள் தங்கள் அனுபவங்­க­ளைப் பகிர்ந்­து­கொண்­டது ஐஸ்வர்யா­வின் ராணு­வப் பய­ணத்­தில் மறக்­க­மு­டி­யாது ஒரு நிகழ்­வாக உள்­ளது.

சோர்­வாக இருந்­த­போ­தும் பிரி­வி­ன­ருக்கு இடையே ஒரு நெருக்­க­மான பிணைப்பை அந்­நாள் உரு­வாக்­கி­ய­தாக கூறி­னார் ஐஸ்வர்யா.

"முத­லில் ராணு­வத்­தில் சேர வேண்­டும் என்ற விருப்­பத்தை உற­வி­ன­ரு­டன் பகிர்ந்து­கொண்­ட­போது, 'ஏன் உன்­னத துறை­யான தாதி­மைத் துறை­யைக் கைவி­டு­கி­றாய், 30 வய­தில் உடலை வருத்­தும் பயிற்­சி­கள் கடி­ன­மாக இருக்­கும்' போன்ற பல கேள்­வி­களை எழுப்­பி­னர்.

"இவர்­க­ளுக்கு நான் அளித்த ஒரே பதில், ராணு­வத்­தில் சேர்ந்து எனது முழு­மை­யான திற­மை­யைக் காட்­டு­கி­றேன் என்­ப­து­தான். என்­னு­டைய பெற்­றோர் இன்­று­வரை இந்­தப் பய­ணத்­தில் எனக்கு ஆத­ர­வாக இருந்து வந்­த­தால்­தான் என்னால் இந்த அள­விற்கு முன்­னேற்­றம் காண முடிந்­தது," என்­றார்.

இதற்­கு­முன் அதிகம் உடற்­ப­யிற்­சி செய்து பழக்­கம் இல்­லாத ஐஸ்­வர்­யா­விற்கு, உடல் ரீதியான ராணு­வப் பயிற்­சி­கள் மிக­வும் கடி­ன­மாக இருந்­தன. குறிப்­பாக ஓட்­டப் பயிற்சி அவருக்கு சவா­லாக இருந்­தது. ஆனால் கிடைக்­கும் ஓய்வு நேர­த்திலெல்­லாம் ஓட்­டப் பயிற்சி மேற்­கொண்டு இறு­தி­யில் தனிப்­பட்ட உடற்­த­கு­தி சோத­னை­யில் தனது இலக்கை எட்­டி­னார்.

பயிற்­சி­கள் முடிந்து மிக­வும் சோர்­வ­டைந்து இருக்­கும்­போதெல்லாம் தனது அம்­மா­விற்கு குறுந்­த­க­வல் அனுப்­பு­வார் ஐஸ்­வர்யா.

அம்­மா­வி­ட­மி­ருந்து, "உன்­னால் முடி­யும். நீ அடை­ய­ வேண்­டி­யது இன்­னும் நிறைய உள்­ளது," என்ற பதில் வந்­த­பின்பு தனக்­குள் தைரி­யம் மீண்­டும் பிறக்­கும் என்­றார் இளை­யர் ஐஸ்­வர்யா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!