இளையர் மனநலம் காக்க இளையர் உதவிக்கரம்

கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சு வழங்கும் விளம்பரச் செய்தி

அண்மையில் இளையரிடையே அதிகரித்துவரும் மனநலப் பிரச்சினைகளை மனதில் கொண்டு இளையர் மனநல வலையமைப்புக் கூட்டணி அமைக்கப்பட்டது. அது சமூகத்துடன் ஒன்றிணைந்து இளையரின் மனநலத்தை மேம்படுத்த இன்னும் என்னென்ன செய்யலாம் எனும் வழிகளை ஆராய்கிறது.
இதற்காக இளையரின் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொள்ள இளையர் மனநல வலையமைப்புக் கூட்டணி நிதி அமைச்சு, சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சு ஆகியவற்றின் ஆதரவுடன் இளையர் மனநல வலையமைப்புக் கூட்டணி அமைக்கப்பட்டது.

இது தவிர நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் முறையாகப் பள்ளிக்குச் செல்வதை ஊக்குவிக்கவும் சமூகத் திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது. கல்வி அமைச்சின் தலைமையில் சென்ற 2018ம் ஆண்டில் ஒருங்கிணைக்கப்பட்ட பல அமைப்புச் செயல்குழுவுடன் இணைந்து, செயல்படும் குழு அப்லிஃப்ட் ஆகும். வாய்ப்புகள் குறைந்த குடும்பங்களில் இருந்து வரக்கூடிய மாணவர்களுக்கான ஆதரவை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இளையருக்கு உதவி வரும் இருவர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கின்றனர்.

இளையர் மனநலம் காக்க இளையர் உதவிக்கரம்

ஒரே வீடமைப்பு வட்டாரத்தில்தான் வசித்தனர், தேசிய சேவையையும் ஒன்றாகவே செய்து முடித்தனர். ஆனால் இப்போது அந்த நண்பர், அண்மையில் உலகைவிட்டுப் பிரிந்துவிட்டார். தம் நண்பர், இவ்வாண்டின் தொடக்கத்தில் தமது உயிரை மாய்த்துக் கொண்டதன் நினைவுகள் அவரது மனதை இன்னும் உறுத்திக்கொண்டே இருக்கின்றது என்று நினைவுகூர்ந்தார் ஷோன் திலகன் (படம்).


“தினமும் வேலைக்கு எம்ஆர்டி நிலையத்துக்குப் போகும்போதெல்லாம் மறைந்த நண்பனின் ஞாபகம் வந்துவிடுகின்றது. மெதுவாக அந்த நிலையைக் கடந்து வருகிறேன்,” என்று 27 வயதான அவர் கூறினார். தாம் அனுபவிக்கும் வேதனைகளை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாமல் சிலர் மனதிலேயே பூட்டிவைத்துவிடுவதால், அது விபரீத முடிவுகளுக்கு வழிவகுத்துவிடுகின்றது என்று கருதுவதாக அவர் மேலும் கூறினார்.


இளையர்கள் தங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் வெளிப்படையாகப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன் அது சரியாகிவிடும் என்ற அர்த்தம் கொண்ட ‘Project It’ll Be Alright’ என்ற செயல்திட்டத்தை இளையர் மனநல கட்டமைப்பு (Youth Mental Well-being Network) தொடங்கியுள்ளது.
தற்போது, குற்றவியல் ஆய்வு நிபுணராக பணியாற்றிவரும் திரு ஷோன், இத்திட்டத்திலும் கட்டமைப்பிலும், தன் நண்பர்களுடன் இணைந்து தொண்டூழியம் புரிகிறார். ஏற்கெனவே சிரமங்களுக்கு உள்ளாகிக் கொண்டிருக்கும் அல்லது உள்ளாகி அதிலிருந்து மீண்டவர்கள் தங்கள் கதைகளாலும் ஆக்ககரமான மேற்கோள்களும் மனநல பிரச்சினைகளால் பாதிக்கப்பட்ட சக இளையர்களுக்கு உதவுவதற்காக இளையர்களை ஒன்றிணைப்பதே இத்திட்டத்தின் நோக்கம்.
இவை கதைகள் வழியாக ஒரு மின்புத்தக வடிவில் தொகுத்து வழங்கப்படும். இதுவரையில் சுமார் 200 கதைகளை தொண்டூழியக் குழுவினர் சேகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இம்மாத இறுதிக்குள் இந்த மின்புத்தகம் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தயாரானதும் விவரங்கள் சமூக வலைத்தளங்களில் அறிவிக்கப்படும்.

இளையர்கள் வெளிப்படையாக பேசி தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வது முக்கியம். அவர்கள் அவ்வாறு அனுபவங்களைப் பகிரும்போது, அவர்களைப் பற்றி ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்திக் கொள்ளாமல், இடையே தடை செய்யாமல், சொல்ல விரும்புவதை செவிமடுத்து பேசவிட வேண்டும்.
ஷோன் திலகன்,27


பள்ளி, வேலையிடம், உறவுகள், தன்னம்பிக்கை, அடையாளம் என வெவ்வேறு சூழல்களில் இளையர்கள் சந்தித்த மனநலப் பிரச்சினைகள் இந்த மின்புத்தகத்தில் பகிரப்படும்.
பகிரப்பட்ட கதைகளில் ஒன்று திரு ஷோனைக் கவர்ந்துள்ளது. மூளையில் ஏற்படும் அதிர்வுகளால் சரிவர எழுத்துகளைப் படிக்க முடியாத டிஸ்லெக்சியா (Dyslexia) என்ற கற்றல் குறைபாட்டைக் கொண்டிருந்த இளையர் ஒருவர் இளம் பருவத்தில் பள்ளியில் தாம் வாசிக்கும்போது எதிர்கொண்ட கிண்டல்களையும் கேலிகளையும் நினைவுகூர்ந்திருந்தார்.
அத்தகு டிஸ்லெக்சியா நாளடைவில் எதிர்கொள்ளக்கூடியது என்பதை அறிந்துகொண்டு, அந்த இளையர், எழுத்து வரிகளுடன் கூடிய பாடல்களைப் கேட்டும் பாடியும் தம் மொழி வளத்தைப் பெருக்கிக்கொண்டார். இன்று, அந்த இளையர், கலை ஆசிரியராக ஒரு உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வருவதுடன் மற்ற மாணவர்களுக்கும் ஊக்கம் தந்து வருகிறார்.
“இளையர்கள் வெளிப்படையாக பேசி தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்துகொள்வது முக்கியம். அவர்கள் அவ்வாறு அனுபவங்களைப் பகிரும்போது, அவர்களைப் பற்றி ஒரு அபிப்பிராயத்தை ஏற்படுத்திக்கொள்ளாமல், இடையே தடை செய்யாமல், சொல்ல விரும்பவதை செவிமடுத்துக் பேசவிடவேண்டும்,” என்று எதிர்காலத்தில் மனோவியல் தொடர்பான பட்டப்படிப்பை மேற்கொள்ள விரும்பும் திரு ஷோன்.
எக்காலத்திலும் இளையருக்கு உதவி செய்ய, 24 மணிநேரமும் இயங்கும் சிங்கப்பூர் அபய ஆலோசனை மன்றம் (SOS Samaritans of Singapore) உள்ளதை நாம் தெரிந்துவைத்துக்கொள்ளவேண்டும்.
இடர்ப்பாடுகளில் உள்ள அனைவருக்கும் அந்த அமைப்பின் உதவி கிடைக்கும். தனது நண்பர்களுக்குத் தேவைப்படும்போது குறிப்பாக அவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டு இருக்கும்போது தாம் எப்போதும் தொடர்பில் இருக்க வேண்டும் என விரும்புகிறார்.

குடும்பங்களை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல உதவும் அஞ்சலி

இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்டிருக்கும் திருமதி அஞ்சலியும் (படம்) அவரது குடும்பத்தாரும் சிங்கப்பூருக்கு வந்து 6 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது.
நல்ல எதிர்காலத்துக்கு வழிவகுத்திருக்கும் சிங்கப்பூருக்கு தங்களது பங்கினை ஆற்றும் கடப்பாட்டுடன் இதர சமூகப் பங்காளிகளுடன் சேர்ந்து முதியோர்களுக்கு உணவு விநியோகம் செய்தல், அவர்களை மருத்துவச் சந்திப்புகளுக்கு அழைத்துச் செல்லுதல், போன்ற நடவடிக்கைகளில் 44 வயதாகும் திருமதி அஞ்சலி குமார் ஈடுபட்டு வந்தார்.


மேலும் ஆக்கப்பூர்வமான வழிகளில் தாம் உதவ வேண்டும் என்ற நோக்கத்துடன் அப்லிஃப்ட் எனப்படும் குடும்ப மேம்பாட்டு செயல்திட்டங்களில் ஒன்றான குடும்ப நண்பர், முன்னோடித் திட்டத்தில் (Family Befriender) இணைந்துகொண்டார். நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு உதவும் திட்டம் அது. அதற்குறிய பயற்சிகளும் அவருக்கு முறையாக வழங்கப்பட்டுள்ளது.
8 வயது முதல் 21 வயது வரை உள்ள 6 பிள்ளைகளைக் கொண்ட ஒரு குடும்பத்தினருடன் இத்திட்டத்தின் வழி திருமதி அஞ்சலி அறிமுகம் ஆனார்.
அக்குடும்பத்தின் இல்லத்தரசியான தாயாருக்கு அண்மையில் புற்றுநோய் உள்ளது தெரியவந்தது. அத்துடன் ஒரு கிடங்கு ஊழியராக அவரது கணவர் பணியாற்றிவந்தார். கடந்த ஆண்டு, செரிமானப் பிரச்சினைகளால் பாதிப்படைந்த கணவர், அறுவை சிகிச்சை செய்துகொள்ள நேர்ந்ததால், தற்பொழுது அவர் உடல்நலம் தேரி வருகிறார். அதனால் அவர் வெகு நேரம் பணியாற்ற முடியாமல் போனது.


குடும்பத்தின் மூத்த மகன் முழு நேர தேசிய சேவை புரிந்துகொண்டிருக்கிறார். வெவ்வேறு மருத்துவப் பிரச்சினைகளை எதிர்நோக்கும் மற்ற மூன்று பிள்ளைகள், தற்போது தொடக்கப் பள்ளியில் பயில்கின்றனர்.மாதத்தில் ஒரு முறையாவது இந்தக் குடும்பத்தை திருமதி அஞ்சலி சந்திக்கச் செல்கிறார். மற்ற சந்தர்ப்பங்களில் அத்தாயாரை தொலைபேசி வழி அழைத்து நலம் விசாரித்து திருமதி அஞ்சலி உரையாடுவார்.
நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கியுள்ள இந்தக் குடுபத்துக்கு சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சின் சமூக சேவை அலுவலகம் உதவிவருகின்றது.
கூடுதலாக மற்ற சமூகப் பங்காளிகளைத் தொடர்புகொண்டு, மளிகைப் பொருட்களை அக்குடும்பத்துக்குக் கிடைக்க திருமதி அஞ்சலி உதவி வருகின்றார்.
“தொடக்கத்தில் அப்லிப்ஃட் குடும்ப நண்பர் திட்டத்தில் சேர்ந்தபோது, நான் உதவப்போகும் குடும்பத்தின் நம்பிக்கையை எப்படி பெறப்போகிறேன் என்ற ஐயம் இருந்தது. ஆனால் என்னை ஏற்றுக்கொண்டு குடும்ப பிரச்சினைகளை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டதில் ஒரு இயல்பான உறவை என்னால் நிலைநாட்ட முடிந்தது” என்று கூறினார் திருமதி அஞ்சலி.

தொடக்கத்தில் அப்லிப்ஃட் குடும்ப நண்பர் திட்டத்தில் சேர்ந்தபோது, நான் உதவப்போகும் குடும்பத்தின் நம்பிக்கையை எப்படி பெறப்போகிறேன் என்ற ஐயம் இருந்தது. ஆனால் என்னை ஏற்றுக்கொண்டு குடும்ப பிரச்சினைகளை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்டதில் ஒரு இயல்பான உறவை என்னால் நிலைநாட்ட முடிந்தது.
திருமதி அஞ்சலி, 44


தமக்கும் இரு பிள்ளைகள் இருப்பதால், குழந்தைகளின், குடும்பத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்ய எதிர்நோக்கும் சவால்களைத் தாம் உணர்வதாகவும், அது குறித்த உதவிகளை அக்குடும்பத்துக்கு வழங்க தாம் தயாராக இருப்பதாகவும் திருமதி அஞ்சலி குறிப்பிட்டார்.
உதாரணமாக குடும்பத்தின் மூத்த மகனுக்கு அடிப்படை நிரலிடும் திறன்களை இலவசமாக கற்றுக்கொடுக்கத் தயாராக இருப்பதை குடும்பத்தினரிடம் திருமதி அஞ்சலி தெரிவித்துள்ளார். “அவர்களால் சுயமாக முயற்சி செய்து வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்ள முடியும் என்ற ஊக்கம் தருவது முக்கியம். அந்த வகையில் கல்வி அதற்கு இன்றியமையாத பங்காற்ற முடியும் என்று நம்புகின்றேன்” என்றார் திருமதி அஞ்சலி.
இவரின் அர்த்தமுள்ள சமூகப் பங்களிப்பைப் பார்த்து உற்சாகம் அடைந்துள்ள அவரது கணவர் திரு. பங்கஜ் குமார், 45, கூடிய விரைவில் அப்லிஃப்ட் சமூக முன்னோடி, குடும்ப நண்பர் திட்டத்தில் இணையவுள்ளார்.
சிங்கப்பூர் குடும்பங்களுக்கு ஒரு நேர்மறையான தாக்கத்தை உண்டாக்க முடிவதில் மகிழ்ச்சி அடையும் இத்தம்பதியினர் தொடர்ந்து வெவ்வேறு சமூகத் தொண்டுகளில் ஈடுபட்டு நற்சேவையாற்ற கடப்பாடு கொண்டுள்ளனர்.

சிங்கப்பூரை ஒன்றாக மேம்படுத்துதல்

மாணவர் வாழ்க்கை மேம்பாடு, குடும்ப ஊக்குவிப்புப் பணிக்குழு (அப்லிஃப்ட்) மாணவர் வாழ்க்கை மேம்பாடு, குடும்ப ஊக்குவிப்புப் பணிக்குழு (அப்லிஃப்ட் - Uplifting Pupils in Life and Inspiring Families Taskforce (UPLIFT)) எனும் செயல்குழு, ஒன்றிணைந்த சிங்கப்பூர் செயல் கூட்டணியின் 26 செயல்குழுக்களில் ஒன்றாகும். சிங்கப்பூரர்களுடன் அரசும், சிங்கப்பூரர்கள் அவர்களுக்கு இடையே ஒன்றாக செயல்பட்டு இனும் அதிக பரிவான, ஒற்றுமையான, நியாயமான சமூகத்தை உருவாக்குவதே இக்குழுவின் நோக்கம்.


கல்வி அமைச்சின் தலைமையில் சென்ற 2018ம் ஆண்டில் ஒருங்கிணைக்கப்பட்ட பல அமைப்புச் செயல்குழுவுடன் இணைந்து, செயல்படும் குழு அப்லிஃப்ட் ஆகும். வாய்ப்புகள் குறைந்த குடும்பங்களில் இருந்து வரக்கூடிய மாணவர்களுக்கான ஆதரவை வலுப்படுத்தும் நோக்கத்துடன் இக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அப்லிஃப்ட் கட்டமைப்புக்குக் கீழ் பல திட்டங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று அப்லிஃப்ட் சமூக முன்னோடித் திட்டம். முறையாக பள்ளிக்குச் செல்ல கூடுதல் உதவி தேவைப்படும் நலிந்த குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு முழுமையாக ஆதரவு வழங்குவது திட்டத்தின் நோக்கம். இந்த முன்னோடித் திட்டத்தில் நகர நிலை ஒருங்கிணைப்பாளர், பள்ளிகளுடன் இணைந்து சமூக வளங்கள் மூலம் இத்தகைய மாணவர்களுக்கும் குடும்பங்களுக்கும் உதவிகள் கிடைக்க வகை செய்யப்படும். உட்லண்ட்ஸ், கிரேத்தா ஆயர், பூன் லே வட்டாரங்களில் தொடங்கிய இத்திடம் 2021ஆம் ஆண்டு இறுதிக்குள் மெலும் 300 மாணவர்களைச் சென்றடையும்.

அப்லிஃப்ட் முயற்சிகளுக்கு உதவ விரும்பும் தனிநபர்களும் அமைப்புகளும் MOE_UPLIFT@moe.gov.sg மின்னஞ்சல் முகவரிக்கு எழுதலாம்.

அப்லிஃப்ட் குடும்ப நண்பர் திட்டத்தில் தொண்டூழியர் வாய்ப்புகள் பெற volunteer.gov.sg இணையத்தளத்தை நாடுங்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!