நாடகத் துறை நிபுணராக முனையும் சிந்தூரா

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

மேடை­நா­ட­கத் துறை­யில் நடிப்­புக் கலை­ஞர், பின்­ன­ணி­யில் இயங்­கும் வடி­வ­மைப்பு, தொழில்­நுட்­பக் கலை­ஞர்­கள், இயக்­கு­நர் என பல வேறு­பட்ட பொறுப்­பு­கள் உண்டு.

இவர்களுடன் ஒரு நாட­கம் முழு­மை­ அ­டைந்து உயிர்ப்­பு­டன் மேடை­யேற்­றப்­ப­டு­வ­தற்கு, இன்­னொ­ரு­வ­ரும் பங்­க­ளிக்­கி­றார். அவரை 'டிரா­மாட்­டர்ஜிஸ்ட்' என்று ஆங்­கி­லத்­தில் அழைப்­பார்­கள். மிக­வும் நுணுக்­க­மான அந்த வேலை­யில் திறன் பெற அடி­யெ­டுத்து வைக்­க­வுள்­ளார் காளி­தாஸ் சிந்தூரா, 32.

'டிரா­மாட்­டர்­ஜிஸ்ட்' எனும் நாட­கத் துறை ஆய்­வு­ நி­பு­ணர்­கள், ஒரு நாட­கத்­தின் எழுத்து, தயா­ரிப்­பு­முறை, சமூக வர­லாற்­றுப் பின்­னணி, தொழில்­நுட்­பம் பற்றி ஆய்வு செய்து நாடக ஆசி­ரி­ய­ருக்­கும் குழு­வுக்­கும் ஆலோ­சனை வழங்­கு­ப­வர்­கள். அதா­வது நாட­கத்­தின் எல்லா அம்­சங்­க­ளை ஆய்­வு செய்து நுட்­ப­மா­கத் தெரிந்­து­வைத்து நாட­கத்­தைச் செழு­மைப்­ப­டுத்த உத­வும் ஆலோ­ச­கர்­கள் அவர்கள்.

இத்­து­றை­யில் நிபு­ண­ராக வேண்­டும் என்ற இலக்கு கொண்ட குமாரி சிந்­தூரா, இதன்­பொ­ருட்டு லண்­டன் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் புகழ்­பெற்ற கோல்ட்ஸ்­மித் கல்­லூ­ரி­யில் 'நாட­கத் துறை ஆய்வு நிபு­ணத்­து­வம், அரங்ற்­கேற்­று­த­லுக்­கான எழுத்து' (Dramaturgy & Writing for Performance) எனும் துறை­யில் ஓராண்­டு­கால முது­க­லைப் படிப்பை இவர் அடுத்த மாதம் தொடங்­க­வுள்­ளார்.

இதற்­காக, தேசிய கலை­கள் மன்­றத்­தின் உப­கா­ரச் சம்­ப­ளம் சிந்­தூ­ரா­வுக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது. கலை­கள் மன்­றத்­தின் உப­கா­ரச் சம்­ப­ளத்தை இவ்­வாண்டு பெற்ற எட்டு பேரில் இவ­ரும் ஒரு­வர்.

"வள­ரும் பரு­வத்­தில் நாட­கம், பேலே நட­னம், பியானோ என வெவ்­வேறு கலை­களில் ஈடு­பட்டு எனது ஆர்­வத்தை வளர்த்து கொண்­ட­போது என் பெற்­றோர் அதற்கு ஆதரவு தெரிவித்தனர்," என்­றார் சிந்­தூரா.

ஹேக் பெண்­கள் பள்­ளியி லிருந்து ராஃபிள்ஸ் தொடக்­கக் கல்­லூரி வரை­யில் நாடக இணைப்­பா­டமே இவ­ரது மூச்­சாக இருந்­தது.

மேல்­நிலை தேர்­வுக்­கும் அரங்­கக் கலை தொடர்­பான பாடத்­தையே இவர் பயின்­றார். பிறகு சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் நாட­கத் துறை­யு­டன் கூடிய ஆங்­கில இலக்­கி­யப் பட்­டப்­ப­டிப்பை விரும்பி இவர் மேற்­கொண்­டார்.

தனி­யார் துணைப்­பாட நிலை­யம் ஒன்­றில் ஆங்­கில ஆசி­ரி­ய­ராக கடந்த 8 ஆண்­டு­க­ளாக பணி­யாற்றி வரும் குமாரி சிந்­தூரா ஒரு­போ­தும் அவ­ரது பேரார்­வத்தை விட்டு வில­க­வில்லை. நாட­கமே இவ­ரது உல­க­மாய் உள்­ளது.

பல்­க­லைக்­க­ழக நாட்­கள் முதல் 'தி நெசசரி ஸ்டேஜ்', 'தி ஃபிங்கர் பிளே­யர்ஸ்' என சில உள்­ளூர் நாடக அமைப்­பு­களில் நடிப்பு, எழுத்து, ஒருங்­கி­ணைப்பு, இயக்­கம் என பல்­வேறு பரி­மா­ணங்­களில் நாட­கப் படைப்­பின் பல்­வேறு அம்­சங்­களை இவர் கற்று வரு­கி­றார்.

சென்ற ஆண்­டில் 'தி பிஃங்­கர் பிளேயர்ஸ்' அமைப்­பின் ஓராண்டு கால 'ஃபெலோ‌ஷிப்' திட்­டத்­திற்கு இவர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு பொம்­ம­லாட்­டக் கலைப் படைப்­பின் நுணுக்­கங்­களை உள்­வாங்­கிக்­கொண்­டார்.

நாடக ஈடு­பாட்­டுக்கு அப்­பால், 'விமன் ஆஃப் சக்தி' எனும் தெற்­கா­சி­யப் பணிப்­பெண் நல்­வாழ்­வுக் குழு­வில் தொண்­டூ­ழி­ய­ராக ஆங்­கி­லம் சொல்­லித்­ த­ருகிறார். கவி­தைப் போட்­டி­க­ளி­லும் பணிப்­பெண்­களை ஈடு­ப­டுத்த உத­வு­கி­றார்.

"உள்­ளூர் ஆங்­கில மேடை நாட­கப் படைப்­பு­களில் இந்­தி­யக் கலை­ஞர்­களை அவ்­வ­ள­வா­கப் பார்க்க முடி­வதில்லை," என்று குறிப்­பிட்­டார் குமாரி சிந்­தூரா.

எனி­னும் இந்­த ­நிலை மாறி­ வரு­வதாகவும் நாடக நிறு­வ­னங்­க­ளு­ட­னும் சமூ­கப் பங்­கா­ளி­க­ளு­ட­னும் இணைந்து இக்கலைஞர்களுக்கான வாய்ப்­பு­களை உரு­வாக்­கித் தரு­வதில் கவ­னம் செலுத்­தப் போவ­தா­கவும் அவர் சொன்­னார்.

"ஆங்­கில மேடை நாட­கங்­களில் தெற்­கா­சிய நாட­கத் திற­னா­ளர்­களை ஈடு­ப­டுத்தி, தெற்­கா­சிய மரபு களை­யும் கதாப்­பாத்­தி­ரங்­க­ளை­யும் யதார்த்­த­மாக மேடை நாட­கங்­களில் சித்­தி­ரிப்­பது எனது நீண்ட நாள் ஆசை," என்று தெரி­வித்­தார் இளை­யர் சிந்­தூரா.

இதன் தொடர்­பில் கடந்­தாண்டு ஓய்­வு­பெற்ற போலிஸ் அதி­கா­ரி­யான தமது 83 வயது தந்தை, இரண்­டாம் உல­கப் போர் காலகட்­டத்­தில் பெற்ற அனு­ப­வத்தை இவர் தமது கலைப் படைப்­பின் வழி வெளிக்­கொண்டு வந்­தார்.

"சிங்­கப்­பூர் சுதந்­தி­ரம் அடைந்த காலகட்­டத்­தில் பல முக்­கி­ய­மான நிகழ்­வு­க­ளின்­போது ஒரு போலிஸ் அதி­கா­ரி­யாக அவர் பணி­யாற்­றி­யது சுவா­ர­சி­ய­மான வி‌‌ஷ­யம். இது­போன்று சமூ­கத்­தில் நாம் அதி­கம் அறி­யாத மற்­ற­வர்­க­ளின் உண்­மைக் கதை­களை வெளிக்­கொ­ண்டுவர கடப்­பாடு கொண்­டுள்­ளேன்," என்­றார் குமாரி சிந்­தூரா.

"சிக்­க­லான விவ­கா­ரங்­க­ளைப் பற்றி இளை­யர்­கள் ஆக்­க­பூர்­வ ­மா­கப் பேசு­வ­தற்கு மேடை நாட­கங்­ க­ளால் நல்ல அடித்­த­ளத்தை உரு­வாக்க முடி­யும்.

சிறு­வர்­க­ளுக்கு எதி­ரான பாலி­யல் குற்­றங்­கள், மன­ந­லன், இனப்­பா­கு­பாடு போன்ற விவ­கா­ரங்­ களைப் பற்றி மாண­வர்­க­ளி­டம் கலந்­து­ரை­யா­ட­ ஆசி­ரி­யர்க­ளுக்குக் கலைப் படைப்­பு­கள் உத­வும்" என்­றார் கல்­வி­யாள­ரான சிந்­தூரா.

சிக்­கலான விவ­கா­ரங்­களை முழு­மை­யாக தவிர்த்­து­வி­டு­வது ஏற்ற தீர்­வாக இருக்­காது; ஏனெ­னில் பெரி­ய­வர் ஆன­தும் அவற்றை எதிர்ச்கொள்ளும்போது ஆக்க பூர்வமாகக் கையாளத் தெரிய வேண்டும் என்று சிந்­தூரா விளக்­கினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!