தற்செயலாகக் கிடைத்த இரண்டாம் உலகப் போர் ஆவணம்

காணா­மற்­போ­ன­தா­கக் கரு­தப்­பட்ட இரண்­டாம் உல­கப் போரின் சர­ண­டை­தல் ஆவ­ணம் ஒன்று மீண்­டும் கண்­டெ­டுக்­கப்­பட்­டுள்­ளது.

ஸ்காட்­லாந்­தின் தேசி­யப் பொருட்­க­ளின் மத்­தி­யில் தற்­செயலா­கக் கண்டெடுக்கப்பட்ட இந்த ஆவ­ணம், அண்­மை­யில் மீண்­டும் திறக்­கப்­பட்ட சாங்கி வழிபாட்டுக் கூடம், அரும்­பொ­ரு­ளகத்­தில் தற்போது வைக்­கப்­பட்டுள்ளது.

தாங்­கள் சர­ண­டை­வ­தாக ஒப்புக்­கொண்டு ஜப்­பா­னி­யப் படை­யி­னர் கெப்­பல் துறை­மு­கத்­தில் ஹெச் எம் எஸ் சசெக்ஸ் என்ற கப்­ப­லில் அந்த ஆவ­ணத்­தில் கையெ­ழுத்­திட்­ட­னர். 1945ஆம் ஆண்டு செப்­டம்­பர் நான்­காம் தேதி­யன்று இது கையெ­ழுத்­தா­னது.

ஆவ­ணம் கையெ­ழுத்­தான பிறகு சிங்­கப்­பூ­ரி­லும் மலே­யா­வி­லும் அப்­போ­தி­ருந்த ஜப்­பா­னிய ஆக்­கி­ர­மிப்பு அதி­கா­ர­பூர்­வ­மாக முடி­வுக்கு வந்­தது.

குழப்­பம் நிறைந்த போரின் கடைசி நாட்­களில் ஆவ­ணம் தொலைந்­து­போ­ன­தா­கக் கரு­தப்­பட்­டது.

ஆனால் இப்­போது அது சிங்­கப்­பூ­ரில் காட்­சிக்கு வைக்­கப்­பட்டுள்ளது. ஆவ­ணம், ஸ்காட்­லாந்­தின் தேசிய அரும்­பொ­ரு­ள­கக் குழு­மத்­தி­ட­மி­ருந்து ஆறு மாதங்­களுக்கு இர­வல் வாங்­கப்­பட்டுள்ளது. நாளை, சிங்­கப்­பூ­ரில் ஜப்­பா­னி­யப் படை­யி­னர் சர­ண­டைந்த நிகழ்­வின் 76ஆம் ஆண்டு நிறைவு நாள். அதைச் சித்திரிக்கும் வகையில் தக்க வேளை­யில் ஆவ­ணம் சிங்­கப்­பூ­ரின் அரும்­பொ­ரு­ளகத்­தில் இடம்­பெ­று­கிறது.

சிங்கப்பூரின் தேசிய அரும்­பொரு­ள­கத்­தின் துணைப் பொறுப்­பா­ள­ராக இருக்­கும் 26 வயது ரேச்­சல் எங் கண்­டு­பி­டித்­த­தாக சாங்கி கூட்­டுப் பிரார்த்­தனை, அரும்­பொரு­ள­கம் தெரி­வித்­தது.

சிங்­கப்­பூ­ரின் வர­லாற்­றுக் கல்­வெட்­டு­க­ளைச் சேக­ரிக்க அரும்­பொ­ரு­ளக பொறுப்­பா­ளர்­கள் மேற்­கொள்­ளும் ஆய்­விற்கு இந்­தக் கண்­டு­பி­டிப்பு சான்று என்று அது குறிப்­பிட்­டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!