விடாமுயற்சி தந்த உன்னதத் தேர்ச்சி

இர்­‌‌‌ஷாத் முஹம்­மது

ஒற்­றைப் பெற்­றோர் குடும்­பத்­தில் வளர்ந்த எட்­வர்ட் தாசன் ராஜேந்­தி­ரன், 26, படிக்­கும்­போதே தமது செல­வு­க­ளைத் தாமே பார்த்­துக் கொள்ள வேண்­டி­யி­ருந்­தது. பகு­தி­நேர வேலை­க­ளைச் செய்­து­தான் அவர் தமது பல­து­றைத் தொழிற்­கல்­லூரி, பல்­க­லைக்­க­ழ­கக் காலங்­களில் தேவைப்­பட்ட போக்கு வரத்து, உணவு ஆகியவற்றுக்கான செல­வு­க­ளைப் பார்த்­து­கொண்­டார்.

அந்நேரத்தில் இவ­ரது இரண்டு சகோ­த­ரர்­களும் இவ­ருக்கு உறு­து­ணை­யாக இருந்­த­னர். சகோ­த­ரர்­க­ளின் அர­வ­ணைப்­பா­லும் வலு­வான குடும்­பப் பிணைப்­பா­லும் சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தில் பொறி­யி­யல் பட்­டம் பெற்­றார் எட்­வர்ட்.

சிண்டா எனப்­படும் சிங்­கப்­பூர் இந்­தி­யர் மேம்­பாட்­டுச் சங்­கம் கடந்த முப்­பது ஆண்­டு­க­ளாக ஆண்­டு­தோ­றும் வழங்­கும் சிண்டா உன்­னத விருதுகளை நேற்று முன்­தி­னம் பெற்ற 749 பேரில் எட்­வர்ட் ஒரு­வர்.

பகுதி மின்­க­டத்தி நிறு­வ­னத்­தில் உற்­பத்தி பொறி­யா­ள­ரா­கத் தற்­போது இவர் பணி­யாற்­று­கி­றார்.

கல்வி, விளை­யாட்டு, கலை­கள் எனப் பல தளங்­களில் தேர்ச்­சி பெற்ற, தொடக்­க­நிலை முதல் பல்­ க­லைக்­க­ழ­கம் வரை­யில் பயி­லும் மாண­வர்­க­ளுக்கு சிண்டா உன்­னத விரு­து­கள் வழங்­கப்­ப­டு­கின்றன.

விடா­மு­யற்­சி­யு­டன் தடை­க­ளைக் கடந்து வெற்­றிப் பாதை­யில் நடை போடும் இளை­யர்­கள் விழா­வில் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­ட­னர்.

கடின உழைப்பைக் கல்­வி­யில் செலுத்­தியபோதும் 'ஜிசிஇ' சாதா­ரண நிலைத் தேர்­வில் தேர்ச்­சி பெறா­த­தால் வருத்­தப்­பட்­டிருக்கிறார் முனாஸ்ஸா ஐன், 19.

ஆனால், முயற்­சி­யைக் கைவி­ட­வில்லை அவர். மனம் தள­ரா­மல் கடி­ன­மாக உழைத்­தார். குடும்­பத்­தி­ன­ரின் ஆத­ரவும் இருந்­தது.

சுகா­தார நிர்­வா­கம், மேம்­பாட்டுத் துறை­யில் ரிபப்­ளிக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் பட்­ட­யக் கல்வி பயி­லும் வாய்ப்­பைப் பெற்­றுள்ள முனாஸ்ஸா, சிண்­டா­வின் உன்­னத விரு­தைப் பெற்­ற­தில் பெருமகிழ்ச்சி அடைந்தார்.

ஆசி­ரி­யர்­கள், குடும்­பத்­தி­ன­ரின் ஊக்­கு­விப்பு, தமது கடி­ன­மான உழைப்பு முத­லி­யவை பல­ன­ளித்­த­தா­கக் கூறும் இவர், சிண்­டா­வின் 'ஸ்டெப்' துணைப்­பாட வகுப்­பு­களில் பயின்றதாகவும் கூறுகிறார்.

தொடக்­கக் கல்­லூரி பிரி­வில் விரு­துபெற்ற மாணிக்­க­வா­ச­கன் அ‌ஷ்­மிதா, 17, பிறப்­பி­லேயே மர­பணு தொடர்­பான ரத்­தக் கசிவு குறை­பாடு கார­ண­மாக பல ஆண்­டு­களாக பல முறை மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளார்.

எனினும் ஆசி­ரி­யர்­கள், சக மாண­வர்­க­ளின் உத­வி­யு­டனும் தன்­னம்­பிக்­கை­யு­டனும் செயல்பட்டு இவர் வெற்றியும் அடைந்துள்ளார்.

எதிர்­கா­லத்­தில் கிரு­மி தொடர்­பான நிபு­ண­ராக ஆக­வேண்­டும் என்ற பேரார்வம் கொண்டுள்ளார் ராஃபிள்ஸ் கல்­விக் கழ­கத்­தில் பயி­லும் அ‌ஷ்­மிதா.

நிர­லி­டு­தல் திட்­டம் உட்­பட சிண்­டா­வின் பல திட்­டங்­களில் பங்­கு­பெற்­றுள்ள அ‌ஷ்­மிதா, துடிப்­பு­மிக்க தொண்­டூ­ழி­ய­ரும் கூட.

உதவி தேவைப்­படும் பிள்­ளை ­க­ளுக்குத் துணைப்­பாட வகுப்­பு­கள் நடத்­து­வது, 'லயன்ஸ் பிஃபிரெண்­டர்ஸ்' திட்­டத்­தின் மூலம் மூத்­தோ­ருடன் நட்­பு­ற­வா­டு­வது போன்­ற­வற்­றில் இவர் சேவை­யாற்­றி­ வ­ரு­கி­றார்.

இவ்­வாண்­டின் சிண்டா உன்­னத விருது பெற்ற தலை­மைத் தேர்ச்­சி­யா­ளர் யார்­ள­கட்டா சாய் சூர்யா, 26, மூன்­றா­வது முறையாக இந்த விருதைப் பெற்றுள்ளார்.

இதற்கு முன்­னர் இவர் 'ஜிசிஇ' சாதாரண நிலை, மேல்நிலைத் தேர்­வு­களில் பெற்ற தேர்ச்­சி­க­ளுக்­காக இந்த விரு­தை பெற்­றார்.

நீடித்த நிலைத்­தன்மை முயற்­சி ­க­ளின் மீது அதீத ஆர்­வம் கொண்ட சூர்யா, அத்துறையில் இரண்டு புத்தம் புதிய நிறு­வ­னங்­க­ளை­த் தொடங்­கி­யுள்­ளார்.

நீடித்த நிலைத்­தன்மை முயற்சி களில் புத்­தாக்­கத்­தைத் தழுவ சிங்­கப்­பூ­ரில் மட்­டு­மல்­லா­மல் தென்­

கி­ழக்­கா­சியாவிலும் சமூ­கத் தொழில்­மு­னை­வர்­களை ஊக்­கு­விப்பது தமது நோக்கம் என்கிறார் சூர்யா. தலை­சி­றந்த தேர்ச்­சிக்­காக அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட இவர், சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பொரு­ளி­யல், பொறி­யி­யல் துறை­களில் இரட்டை இளங்­க­லைப் பட்­டத்தைப் பெற்­றுள்­ளார்.

"நமது தலை­முறை சந்­திக்­கும் நிச்­ச­ய­மற்ற நிலையே ஆக்க பூர்வமான மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த நமக்கு கிடைத்துள்ள மாபெ­ரும் வாய்ப்­பு," என்று தமது உரை­யில் சூர்யா குறிப்­பிட்­டார்.

மொத்­தம் 19 பிரி­வு­களில் வழங்­கப்­பட்ட விரு­து­களை கலா­சார, சமூக, இளை­யர் துறை அமைச்­சர் எட்­வின் டோங் வழங்­கி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!