ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயிலில் கட்டுப்பாடுகளுடன் புரட்டாசித் திருவிழா

குலந்­த­ரும் செல்­வம் தந்­தி­டும் அடி­யார்

படு­துய ராயின வெல்­லாம்

நிலந்­த­ரஞ் செய்­யும் நீள்­வி­சும் பரு­ளும்

அரு­ளொடு பெரு­நில மளிக்­கும்

வலந்­த­ரும் மற்­றும் தந்­தி­டும் பெற்ற

தாயினு மாயின செய்­யும்

நலம்­த­ரும் சொல்லை நான்­கண்டு

கொண்­டேன்

நாராய ணாவென்­னும் நாமம்”

என திரு­மங்­கை­யாழ்­வார், நாரா­யணா எனும் நாமத்தை உரைப்­ப­வர்­க­ளுக்கு உயர்ந்த பண்புகள், செல்­வம், வளம், வாழ்க்­கைக்குத் தேவை­யான அனைத்து நலன்­க­ளை­யும் பெற்ற தாயி­னைப் போன்­ற பரி­வு­டன் பெரு­மாள் கொடுப்­பார் என்­கி­றார். நாலா­யி­ரத் திவ்­யப்­பி­ர­பந்­தத்­தில் ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட பாசு­ரங்­க­ளைப் பாடி­யுள்ள திரு­மங்­கை­யாழ்­வா­ரின் இந்த பாசு­ரம் நாரா­யண நாமத்தின் பெரு­மையை எடுத்­து­ரைக்கிறது.

ஸ்ரீ நாரா­ய­ணன் சிங்கப்பூரில் ஸ்ரீ ஸ்ரீநிவா­சப் பெரு­மா­ளாக எழுந்­த­ருளி பக்­தர்­களுக்கு அருள்புரி­கி­றார். கடந்த 1978ஆம் ஆண்டு சிங்கப்பூரின் தேசிய நினை­வுச்­சின்­ன­மாக அறி­விக்­கப்­பட்ட ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப் பெரு­மாள் கோயில் பத்­தொன்­ப­தாம் நூற்­றாண்­டின் பிற்­ப­கு­தி­யில் கட்­டப்­பட்டது.

சிங்கப்பூரின் இரு­பெ­ரும் ஆன்­மீக நிகழ்வு ­க­ளான தீமி­தித் திரு­வி­ழா­வும் தைப்­பூ­சத் திரு­வி­ழா­வும் இந்த ஆலயத்தில் இருந்து தொடங்­கு­வது வழக்கம்.

பெரு­மாள் கோயி­லில் வைணவ திருவிழாக்­கள் அனைத்­தும் மிக­வும் விமரி­சை­யா­கக் கொண்­டா­டப்­ப­டு­கின்­றன. இதில் முக்­கி­ய­மா­னவை, புரட்­டாசி மஹோட்­ச­வம், வைகுண்ட ஏகா­தசி, கிருஷ்ண ஜெயந்தி, ஆஞ்சநேயர் ஜெயந்தி, நர­சிம்ம ஜெயந்தி, பவித்ர உற்­ச­வம், வசந்த உற்­ச­வம், அஷ்­ட­லஷ்மி மகா­யா­கம், மார்­க­ழி­யில் ஆண்­டாள் வழி­பாடு முதலியவையாகும்.

இவற்றில் மிக­வும் சிறப்பு வாய்ந்­த­தும் பக்­தர்­கள் எதிர்­பார்த்துக் காத்­தி­ருப்­ப­தும் புரட்­டாசி மாத வழி­பா­டு­. இம்மாதத்தில் ஒவ்­வொரு சனிக்­கி­ழமை பல்லாயிரக்கணக் கான பக்­தர்­களும் பெரு­மாளை வணங்கி அன்­ன­தா­னத்­தில் பங்­கேற்று செல்­வார்­கள்.

கொவிட்-19 கிருமித்­தொற்­றுப் பர­வல் கார­ண­மா­க கடந்­த ஆண்டு, இதில் 50 விழுக்­காட்டு பக்­தர்­களே பெரு­மாளை வழி­பட்டனர். இந்­தாண்டு சுமார் 16,000 பேர் பெரு­மாளை வழி­பட வரு­வார்­கள் என எதிர்ப்­பார்க்­கப்­படு­கி­றது.

புரட்­டாசி மாத சிறப்­புப் பூசை­கள்

தமிழ் மாதங்­களில் ஆறா­வது மாதமாக புரட்­டாசி மாதம், தெய்­வீ­கத் தன்மை நிறைந்த மாத­மா­க­வும் பெரு­மா­ளுக்கு உகந்த மாத­மா­க­வும் கரு­தப்­ப­டு­கின்­றது.

இவ்­வாண்­டின் புரட்­டாசி மாதத்­தில் ஐந்து சனிக்­கி­ழ­மை­களும், மூன்று ஏகா­தசியும் வரு­வது மிகச் சிறப்­பா­ன­தா­கும்.

இவ்­வாண்டு நவ­ராத்­திரி விழா­வின் ஒன்பது நாட்­களும் இந்த மாதத்­தில்­தான் கொண்­டா­டப்­ப­டு­கின்­றன.

இம்மாதம் முழுவதும், வழக்­க­மான நித்­திய பூசை­க­ளு­டன் சுப்­ர­பா­தம் தொடங்கி, தோமாலை சேவை, மூன்று கால விஷ்ணு ஹோமம், ஏகாந்­த சேவை என பல சிறப்­புச் சேவை­களும் நடை­பெ­றும்.

சனிக்­கி­ழமை தவிர்த்த மற்ற நாட்­களில் பெரு­மாள் திரு­மஞ்­ச­ன­மும் திருக்­கல்­யாண உற்­ச­வ­மும் நடை­பெ­றும்.

வியா­ழக்­கி­ழ­மை­களில் கூடு­த­லாக நேத்ர சேவை, பூலங்கி சேவை­யு­டன் இந்­தாண்டு புதி­தாக முத்தங்கி சேவை­யும் நடை­பெ­ற­வுள்­ளது. ஆண்­டின் ஓரி­ரண்டு முக்­கிய நாட்­களில் மட்­டும் நடக்­கும் கோ பூஜை புரட்­டா­சி­யில் எல்லா சனிக்­கி­ழ­மை­க­ளி­லும் நடை­பெ­றும். அன்­றைய நாளில் நடை­பெ­றும் மகேஸ்­வர பூஜை சிறப்பு வாய்ந்­தது.

சனிக்­கி­ழ­மை­களில் காலை­யும் மாலை­யும் புரட்­டாசி உபய பூஜை­யும் காலை­யில் முத்­தங்கி சேவை­யும் உண்டு.

மேலும் கடைசி சனிக்­கி­ழ­மை­யன்று விஷ்ணு சஹஸ்­ர­நாம அர்ச்­ச­னை­யும், 1,008 தாமரை சமர்ப்­ப­ண பூஜை­யும் நடை­பெ­றும்.

புரட்­டாசி சனிக்­கி­ழ­மை­களில் காலை­யில் நடை­பெ­றும் சுப்­ர­பாத வழி­பாட்­டில் கலந்­து­கொள்ள பக்­தர்­கள் கண்­டிப்­பாக https://bit.ly/subrapathamslots என்ற இணையத்­தளத்­தில் முன்­ப­திவு செய்ய வேண்­டும்.

முன்­ப­திவு செய்­த­வர்­கள் மட்­டுமே சுப்­ர­பாத வழி­பாட்­டில் கலந்­து­கொள்ள அனுமதிக்­கப்­ப­டு­வர். அடுத்த சனிக்­கி­ழ­மைக்­கான முன்பதிவு முந்­தைய ஞாயிற்­றுக்­கி­ழ­மையே தொடங்­கி­வி­டும். வரை­ய­றுக்­கப்­பட்ட எண்ணிக்­கையே இருப்­ப­தால் விரைந்து முன்­பதிவு செய்­து­கொள்­ளு­மாறு பக்தர்கள் கேட்­டுக்கொள்­ளப்­ப­டு­கி­றார்­கள்.

புரட்­டாசி வெள்­ளிக்­கி­ழ­மை­களில் காலை மணி 6:45 முதல் திரு­மஞ்­ச­னச் சேவை­யை­யும் புரட்­டாசி சனிக்­கி­ழ­மை­களில் காலை மணி 6:00 முதல் சுப்­ர­பா­தச் சேவை­யை­யும் https://www.facebook.com/hinduendowmentsboard மற்­றும் https://m.youtube.com/c/HinduEndowmentsBoard என்ற ஃபேஸ்புக், யூடி­யூப் சமூக வலைத்­தளங்­களில் நேர­லை­யில் காணலாம்.

இம்மாதம் முழு­வ­தும் பெரு­மா­ளின் மகிமை­களைக் கூறும் காணொளி நாள்­தோ­றும் காலை மேலே உள்ள இந்து அறக்­கட்­டளை வாரிய சமூக வலைத்தளங்களில் பதி­வேற்­றம் செய்­யப்­பட்டு வாட்­ஸ்அப் செயலி மூல­மும் பக்­தர்­க­ளுக்கு அனுப்­பப்­படும்.

மகேஸ்­வர பூஜை

புரட்­டாசி மாதத்­தின் சிறப்­பம்­சம், சனிக்­கி­ழ­மை­யன்று நடைபெறும் ‘மகேஸ்­வர பூஜை’ ஆகும். அன்று சுமார் 25,000 பக்­தர்­களுக்கு சிறப்பு பிர­சா­தம் வழங்­கப்­படும். பக்­தர்­களின் வடி­வில் பெரு­மாளே பிர­சா­தத்­தைப் பெற்று உட்­கொள்­கி­றார் என்­பது நம்­பிக்கை.

கிரு­மித்­தொற்­றுப் பர­வ­லுக்கு முன்பு மதியம் சுமார் 12,000 பக்­தர்­க­ளுக்கு வாழை இலை­யில் அறு­சுவை உணவு பரி மா­றப்­படும். பிறகு இர­வும் சுமார் 13,000 பக்­தர்­க­ளுக்கு பிர­சா­தம் வழங்­கப்­படும்.

கிரு­மித்­தொற்­றுப் பர­வ­லுக்­கு இடையேயும் கடந்­தாண்டு சனிக்­கி­ழ­மை­களில் சுமார் 12,000 பக்­தர்­க­ளுக்கு உணவளிக்கப்­பட்­டது. இந்­தாண்டு மதி­யம் 8,000 உண­வுப் பொட்­ட­லங்­களும் இரவு 8,000 உண­வுப் பொட்­ட­லங்­களும் பக்­தர்­க­ளுக்கு வழங்­கப்­படும்.

சனிக்­கி­ழ­மை­களில் காலை மணி 8:30 முதல் மதி­யம் மணி 1:00 வரை உண­வுப் பொட்­ட­லங்­கள் வழங்­கப்­படும். மாலை மணி 6:00 முதல் இரவு மணி 9:30 வரை உணவுப் பொட்­ட­லங்­கள் வழங்­கப்­படும். பக்­தர்­கள் அனை­வ­ருக்­கும் இறை­வ­னின் பிர­சா­தம் கிடைக்­கும் வகை­யில் விரி­வான ஏற்­பா­டு­கள் செய்­யப்­பட்­டுள்­ளன.

எனவே கொவிட்-19 பாது­காப்பு நிர்­வாக நடை­முறை கார­ண­மாக பக்­தர்­கள் உணவைப் பெற்­று வீட்­டிற்கு எடுத்­துச்­சென்று உட்­கொள்­ளு­மாறு கேட்டுக்­கொள்­ளப்­ப­டு­கி­றார்­கள்.

பக்­தர்­க­ளின் அன்­பான ஆத­ர­வை­யும் புரி­த­லை­யும் நல்­கு­கி­றோம். மேலும் விவ­ரங்­க­ளுக்கு 62985771 என்ற எண்­ணில் கோயி­லைத் தொடர்பு கொள்­ள­லாம்.

பின் குறிப்பு: கொவிட்-19 கிரு­மித்­தொற்று எண்­ணிக்கை அதிகரித்துவரும் சூழ­லில் அர­சின் அறி­விப்­பு­க­ளுக்கு ஏற்ப நிகழ்­வு­களில் மாற்­றங்­கள் ஏற்­ப­ட­லாம்.

புரட்­டாசி விழா குறித்த அண்­மைய தக­வ­லுக்கு https://heb.org.sg/sspt/ என்ற இணை­ய­த்த­ளத்தைப் பார்க்­க­வும்

கோயில் திறந்­தி­ருக்­கும் நேரம்

 புரட்­டாசி மாதம் முழுவதும்

காலை 8.30 மணி முதல் பகல் 11.45 மணி வரையும்; மாலை 6.00 மணி முதல் இரவு 8.45 மணி வரையும் கோயில் திறந்­தி­ருக்­கும்.

 கூடுதலாக, சனிக்­கி­ழமைகளில் பகல் 12.45 மணி வரை­யும் இரவு 9.15 மணி வரை­யும் திறந்­தி­ருக்­கும்.

 கூட்ட நெரி­ச­லைத் தவிர்க்­க, உச்ச நேர­மான சனிக்­கி­ழமை காலை 11.30க்குப் பிறகும் மாலை 7.30க்குப் பிறகும் வரு­வதை முடிந்­த­வரை தவிர்க்குமாறு பக்­தர்­கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

 வெள்­ளி பகல் 1.00 மணி முதல் ஞாயி­று காலை 8.30 மணி வரை கோயில் வளாக வாகன நிறுத்­து­மிடம் மூடப்­பட்­டி­ருக்­கும்.

 வெய்யில், மழை­யி­னால் பாதிப்பு ஏற்­ப­டாத வகை­யில் கூடா­ரம் போடப்­பட்டு பக்­தர்­க­ளின் வழி­பாட்­டிற்­குச் சிறப்பு ஏற்­பா­டு செய்­யப்­பட்டுள்ளது.

 இவ்வாண்டு, கண்­ணைக் கவ­ரும் வண்­ண­த் தோர­ணங்­கள், வெல்வெட் துணி­க­ளா­லான அழகு வளை­வு­கள், வாயில்­கள், பூக்­கள், தூண்­க­ள் முதலியவை சன்­ன­தி­களை­யும் அலங்­க­ரிக்­கின்­றன.

கோயி­லின் உட்­பு­ற­மும் வெளிப்புற மும் மின்­னொ­ளி­யில் மிளி­ரும்­ வண்­ணம் பல­வண்ண மின்விளக்கு களால் ஒளி­யூட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன.

கொவிட்-19 கட்­டுப்­பா­டு­கள்

 பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­கார­ண­மா­கக் குறிப்­பிட்ட நேரத்­தில் வரை­ய­றுக்­கப்­பட்ட எண்­ணிக்­கை­யி­லான பக்­தர்­கள் மட்­டுமே கோயி­லுக்­குள்ளே செல்ல அனு­ம­திக்­கப்­ப­டு­வர்.

 சனிக்­கி­ழ­மை­களில் முழு­மை­யாகத் தடுப்­பூசி போடப்­பட்­ட­வர்­கள், நிகழ்ச்­சிக்கு முன்பே பரி­சோ­தனை மூலம் கிரு­மித்­தொற்று இல்லை என்று உறுதி­செய்­தி­ருப்போருக்கு மட்­டுமே அனு­ம­தி உண்டு.

 கிரு­மித்­தொற்று கார­ண­மாக எடுக்­கப்­ப­டும் பாது­காப்பு நட­வடிக்­கை­க­ளைப் பக்­தர்­கள் கண்­டிப்­பா­கப் பின்­பற்­ற­வேண்­டும் என அறிவு­றுத்­தப்­ப­டு­கி­றார்­கள்.

 இந்து அறக்­கட்­டளை வாரி­ய­மும் ஸ்ரீ ஸ்ரீநி­வா­சப் பெரு­மாள் கோயில் மேலாண்­மைக் குழு­வும் 300க்கும் மேற்­பட்ட தொண்­டூ­ழி­யர்­க­ளின் உதவி­யு­டன் பு­ரட்­டாசி விழா ஏற்பா­டு களை விம­ரி­சை­யா­கச் செய்­துள்­ளன.

செய்தி: தாம் சண்­மு­கம்

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!