யூசுப் ராவுத்தர் ரஜித்தின் மூன்று நூல்கள் வெளியீடு

தமிழ்ப் பட்­டி­மன்­றக் கலைக் கழ­கத்­தின் நிறு­வ­ன­ரும், அடித்­த­ளத் தலை­வ­ரு­மான திரு யூசுப் ராவுத்­தர் ரஜித்­தின் மூன்று நூல்­கள் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளி­யி­டப்­பட்­டன. நிகழ்ச்சி பெக்­கியோ சமூக மன்ற இந்­திய நற்­ப­ணிச் செயற்­குழு ஏற்­பாட்­டி­லும், தமிழ்ப் பட்­டி­மன்­றக் கலைக் கழக ஆத­ர­வு­ட­னும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

'பிதா' என்­கிற சிங்­கப்­பூர் சூழ்­நி­லை­யில் எழு­தப்­பட்ட நாவல், 'சுண்­ட­வத்­தல்' என்ற சிறு­க­தைத் தொகுப்பு, 'ஒரு சொல்­லால் உயிர் நீவு' என்ற கவி­தைத்­தொ­குப்­பும் நிகழ்ச்­சி­யில் வெளி­யீடு கண்­டன.

நிகழ்ச்­சிக்கு சிறப்பு விருந்­தின ராக தஞ்­சோங் பகார் குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், கலாசார, சமூக, இளை­யர்­துறை மற்­றும் வர்த்­தக தொழில் துணை அமைச்­ச­ரு­மான திரு எல்­வின் டான் கலந்­து­கொண்டு நூல்­களை வெளி­யிட்­டார்.

திரு டான், நூலா­சி­ரி­ய­ரின் சமூ­கத்­தொண்டடையும்

எழுத்­துப்­ப­ணி­யை யும் பாராட்­டி­ய­து­டன், ஆத­ரவு தேவைப்­படு­வோ­ருக்கு ஆத­ரவு வழங்­கும் வகை­யில் நடத்­தப்­படும் இது­போன்ற நிகழ்­வு­களுக்கு ஆதரவு வழங்க வேண்­டும் என்­றும் கேட்­டுக்­கொண்­டார்.

இந்த நிகழ்­வின் மூலம் திரட்­டப்­பட்ட நன்­கொடை அனைத்­தும், வெளி­நாட்டு ஊழி­யர்­க­ளின் நல­னுக்­காக அளிக்­கப்­ப­டு­வ­தா­க­வும், நன்­கொ­டை­களை வழங்கி ஆத­ர­வ­ளித்த அனைத்து நல்­லுள்­ளங்­க­ளுக்­கும் நூலா­சி­ரி­யர் திரு ரஜித் நன்றி தெரி­வித்­தார்.

இந்த நூல் வெளி­யீடு மூல­மாக வெளி­நாட்டு ஊழி­யர் நல­னுக்­காக திரட்­டப்­பட்ட $8,150.30க்கான காசோ­லையை அமைச்­சர் itsRainingRaincoats என்ற அமைப்­புக்கு வழங்­கி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!