வெளிநாட்டு ஊழியர்கள் விடுதியிலேயே குணமடைய ஏற்பாடு

வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­களில் வசிப்­போ­ருக்கு கொவிட்-19 நட­வ­டிக்­கை­கள் திருத்­தப்­பட்டு இருக்­கின்­றன.

அறி­கு­றி­கள் வெளியே தெரி­கின்ற, மருத்­துவப் பரா­ம­ரிப்பு தேவைப்­ப­டக்­கூ­டிய ஊழி­யர்­கள் மீது இனி ஒரு­மித்த கவ­னம் செலுத்­தப்­படும் என்று மனி­த­வள அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

கொவிட்-19 எளி­மை­யான, விரை­வுப் பரி­சோ­த­னை­களை வேக­மாக நடத்­த­வும் தட­ம­றி­வதை இன்­னும் செம்­மை­யாக்­க­வும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டுள்ள, தொற்று அறி­குறி தெரி­யாத ஊழி­யர்­கள் தங்­கள் விடு­தி­க­ளி­லேயே குண­மடை­ய செய்யவும் இந்தத் திருத் தங்கள் வழி­வகுக்­கும்.

ஊழி­யர்­க­ளின் வாழ்­வுக்­கும் வேலைக்­கும் ஏற்­ப­டக்­கூ­டிய தொல்லைகளைக் குறைத்­துக்­கொள்­ளும் நோக்­கத்­தில் புதிய திருத்­தங்­கள் இடம்­பெ­று­கின்­றன என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

விடு­தி­களில் கடந்த சில நாட்­களாக நாளுக்கு 500க்கும் மேற்­பட்­ட­வர்­கள் பாதிக்­கப்­பட்டு வரு­கிறார்­கள் என்­பதை நேற்று நடந்த கொவிட்-19 சிறப்­புப் பணிக்­குழு கூட்­டத்­தில் மனி­த­வள அமைச்­சர் டான் சீ லெங் சுட்­டிக்­காட்­டி­னார்.

இருந்­தா­லும் கிருமி தொற்றி­யோரில் பெரும்­பா­லா­ன­வர்­களுக்குப் பாதிப்பு குறை­வாக இருக்­கிறது. அறி­குறி எது­வும் தெரி­ய­வில்லை.

மருத்­து­வ­ம­னை­யில் தங்கி சிகிச்சை பெற­வேண்­டிய தேவை இல்லை. உயிர்­வாயு சிகிச்­சை­யும் தேவை­யில்லை. சொந்­த­மா­கவே, விரை­வாக குண­ம­டை­யும் நிலை­யில் அவர்­கள் இருக்­கி­றார்­கள்.

தங்­கு­வி­டுதி ஊழி­யர்­களில் 90 விழுக்­கா­ட்டுக்­கும் அதி­க­மா­ன­வர்­களுக்கு முற்­றி­லும் தடுப்­பூசி போடப்­பட்டு உள்­ளது என்­ப­தை­யும் அமைச்­சர் சுட்­டிக்­காட்­டி­னார்.

500வரைப்­பட்ட விடுதி ஊழி­யர்­கள் வெளியே செல்ல அனு­மதிக்­கும் வாராந்திர முன்­னோடி செயல்­திட்­டம் தொட­ரும் என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!