இரண்டு புதிய பலதுறை மருந்தகங்கள் நேற்று திறப்பு

சிறப்பு வச­தி­கள் கொண்ட இரண்டு புதிய பல­துறை மருந்­த­கங்­கள் நேற்று திறக்­கப்­பட்­டன.

128 படுக்­கை­கள் கொண்ட காலாங் பல­துறை மருந்­த­கத்­தில் நீடித்த நோய் பிரிவு அமைக்­கப்­பட்­டுள்­ளது.

அடிக்­கடி மருத்­துவ பரா­ம­ரிப்பு தேவை­ப்படும் நாட்பட்ட நோய்­கள் உள்­ள­வர்­க­ளைக் கவ­னித்­துக்­கொள்ள இந்த பிரிவு உத­வும்.

365 படுக்­கை­கள் கொண்ட புதிய புக்­கிட் பாஞ்­சாங் பல­துறை மருந்­த­கம் தாதிமை இல்­லம் ஒன்றை உள்­ள­டக்­கி­யுள்­ளது.

மூத்­தோர் பரா­ம­ரிப்பு நிலை­யம் ஒன்றை உள்­ள­டக்­கிய பல­துறை மருந்­த­கம் யூனோ­ஸில் டிசம்­பர் மாதம் திறக்­கப்­படும் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டுளது.

"சுகா­தார, சமூக வச­தி­களை (விளை­யாட்டு நிலை­யங்­கள்) உள்ளடக்கி பல­துறை மருந்­த­கங்­களை அமைப்­பது மக்­க­ளுக்கு முழு­மை­யான பரா­ம­ரிப்பு வழங்கி, அவர்களது சுகா­தார நிலையை உயர்த்­தும்," என புக்­கிட் பாஞ்­சாங் பல­துறை மருந்­த­கத்­தின் அதி­கா­ர­பூர்வ திறப்­புக்கு வந்­தி­ருந்த சுகா­தார அமைச்­சர்    கூறி­னார்.

இது குறித்து விவ­ரித்த அமைச்­சர் செம்­பவாங் பல­துறை மருந்­த­கத்­தைச் சுட்­டி­னார். அது புக்­கிட் கேன்­பெரா என்ற பெயர் கொண்ட சமூக மைய­மாக மாற்­றம் காண­வி­ருக்­கிறது. அதில் நீச்­சல் குளம், உள்­ள­ரங்கு விளை­யாட்டு மண்­ட­பம், உடற்­ப­யிற்சிக் கூடம் போன்ற விளை­யாட்டு வச­தி­களும் ஒரு பூங்­கா­வும் உண­வங்­காடி நிலை­ய­மும் இடம்பெறும். 2030க்குள் புக்­கிட் மேரா, ஊட்­ரம் பல­துறை மருந்­த­கங்­கள் ஒருங்­கி­ணைக்­கப்­பட்டு, அதிக இட வசதியைக் கொண்ட மருந்­த­க­மாக தியோங் பாரு­வில் அமைக்­கப்­படும் என்­றும் அமைச்­சர் அறி­வித்­தார். இந்த மருந்­த­கம் குடி­யி­ருப்­பா­ளர்­களுக்கு, குறிப்­பாக மூத்­தோ­ருக்­குத் தோதான வச­தி­க­ளைக் கொண்டு அமைக்­கப்­படும் என்­றும் அவர் அறி­வித்­தார்.

சுகாதார அமைச்சின் விரிவாக்கத் திட்டத்தின்படி அடுத்த ஒன்­பது ஆண்­டு­களில் ஒருங்­கி­ணைந்த வச­தி­கள் கொண்ட மேலும் ஒன்­பது பல­துறை மருந்­த­கங்­கள் திறக்­கப்­படும்.

2030க்குள் பல­துறை மருந்­த­கங்­க­ளின் எண்­ணிக்­கையை 32ஆக அதிகரிக்கும். மூப்­ப­டை­யும் மக்­கள் தொகை­யை­யும் அதோடு இயல்பாகவே ஒன்றுசேர்ந்து அதிகரிக்கரித்து வரும் நாட்பட்ட நோய்களின் நிகழ்­வு­க­ளின் எண்­ணிக்­கை­யும் எதிர்கொண்டு வருகிறோம் என்றும் அதனால் மருத்துவ பராமரிப்பை சமூகத்தில் அடிப்படை பராமரிப்பு நிலைக்கு உயர்த்துவதில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

புக்கிட் பாஞ்சாங்

பலதுறை மருந்தகம்

புக்­கிட் பாஞ்­சாங்­கில் நேற்று திறக்­கப்­பட்­டுள்ள புதிய பல­துறை மருந்­த­கம், அங்கு வசிப்­போர் எளி­தில் சுகா­தா­ரச் சேவை­க­ளைப் பெற்­றுக்­கொள்ள வழி­வ­குக்­கும். மூன்று மாடி­க­ள் 5,847 சதுர அடி­க­ள் கொண்டு புக்­கிட் பாஞ்­சாங் பல­துறை மருந்­த­கம், ஒரு தாதிமை இல்­லத்­தை­யும் உள்­ள­டக்­கி­யுள்­ளது.

அந்த பல­துறை மருந்­த­கத்­த்தை ஒரு நாளிற்கு ஏறத்­தாழ 600 நோயா­ளி­கள் பயன்படுத்துவர் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

நூற்­றுக்­கும் மேற்­பட்ட மருத்­து­வர்­களும், தாதி­களும் மற்­ற­வர்­களும் பணி­யாற்­றும் புக்­கிட் பாஞ்­சாங் பல­துறை மருந்­த­கத்­தில் தொடர்ந்து பணி­ய­மர்த்­தல் நடை­பெ­று­கிறது என அதன் தலைமை அதி­காரி டாக்­டர் டான் கிம் கியட் கூறி­னார். மருத்­து­வச் சேவை வழங்­கு­தல் தவிர அங்கு மக­ளிர், சிறார் சுகா­தா­ரச் சேவை­களும் பல் மருத்­துவ சேவை­யும் வழங்­கப்­படும்.

மேலும், மன­நல சேவை, ஃபிசியோ­தெ­ரப்பி போன்ற துணை சுகா­தார சேவை­களும் வழங்­கப்­படும். புக்­கிட் பாஞ்­சாங், காலாங் பல­துறை மருந்­த­கங்­க­ளு­டன் சிங்­கப்­பூ­ரில் தற்­போது 22 பல­துறை மருந்­த­கங்­கள் உள்­ளன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!