ஓங்: மூத்தோர் வெளியில் செல்வதைக் குறைக்கவும்

சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தொற்று பல்­கிப் பெருகி வரு­வ­தால், இக்­கா­லக் கட்­டத்­தில் வெளி­யில் செல்­வ­தைக் குறைக்­கும்­ப­டி­யும் கூடு­தல் முன்­னெச்­செ­ரிக்கை நட­வ­டிக்­கை­களை எடுக்­கும்­ப­டி­யும் மூத்­தோர் கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

சுகா­தார அமைச்­ச­ரும் கிரு­மிப்­ப­ர­வ­லுக்கு எதி­ரான அமைச்­சு­கள்­நி­லைப் பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரு­மான திரு ஓங் யி காங் நேற்­று­முன்­தி­னம் நடந்த செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் அவ்­வாறு கேட்­டுக்­கொண்­டார்.

மூத்­தோர் தங்­கள் சமூக நட ­வ­டிக்­கை­களில் மீண்­டும் ஈடு­ப­டு­வ­தற்கு கால அட்­ட­வணை உள்­ளதா என்ற கேள்­விக்கு திரு ஓங் பதில் அளித்­தார். சமூக நட­வ­டிக்கை களைத் தொடர்­வ­தற்கு எவ்­வ­ளவு வாரங்­கள் அல்­லது மாதங்­கள் எடுக்­கும் என்று தெரி­யாது. ஆனால் இப்­போது அதற்­கான நேர­மல்ல என்­றார் அவர்.

இந்த அலை­யைக் கடக்­கும்­போது, புதிய சுதந்­தி­ர­மும் நம்­பிக்­கை­யும் கிரு­மித்­தொற்றை எதிர்­கொள்­வ­தற்­கான கூடு­தல் திற­னும் பெறு­வோம் என்று திரு ஓங் தெரி­வித்­தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!