மாண்ட இளையரின் கைது பற்றி புலனாய்வு

போதைப் பொருள் கடத்­தியதாக குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்ட 17 வயது இளை­யர் மாண்­ட­தைத் தொடர்ந்து, அவர் கைது செய்­யப்­பட்ட சூழல் பற்றிய மறு­ஆய்வு நடைபெற்று வருகிறது.

ஜஸ்­டின் லீ, மத்­திய போதைப் பொருள் ஒழிப்­புப் பிரிவு அதி­கா­ரி­ க­ளால் பிப்­ர­வரி 3ஆம் தேதி கைது செய்­யப்­பட்­டார். ஜூன் 24ஆம் தேதி நீதி­மன்­றத்­தில் அவர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டது. கடந்த மாதம் 16ஆம் தேதி அந்த இளை­யர் உய­ரத்­தி­லி­ருந்து கீழே விழுந்து உயி­ரி­ழந்­தார். அவருக்கு மன அழுத்தம் இருந்ததாகக் கூறப்பட்டது.

இளை­யர் லீயின் தாயார் திரு­வாட்டி சிசி­லியா ஆவ், 51, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கத்­துக்கு அனுப்­பிய கடி­தத்தைக் கடந்த செவ்­வாய் அன்று தமது இன்ஸ்­ட­கி­ராம் பக்­கத்­தில் பதி­விட்­டார். தமது மகன் தவறு செய்­ததை மறுக்­க­வில்லை என்­ற­போ­தும் அவர் நடத்­தப்­பட்ட விதம் மாறவேண்­டும் என்ற திரு­வாட்டி ஆவ், சில பரிந்­து­ரை­களை முன்­வைத்­தார்.

திரு­வாட்டி ஆவ்­வின் மகன் இறந்த செய்தி தெரிந்­த­வு­டன் அவ­ரு­டன் மூத்த அதி­கா­ரி­கள் தொடர்­பில் இருந்து வந்­துள்­ள­னர் என்று மத்­திய போதைப் பொருள் ஒழிப்­புப் பிரிவு நேற்று முன்­தி­னம் கூறி­யது.

முழு புல­னாய்வு செய்­யப்­படும் என்­றும் அவற்­றின் முடி­வு­கள் பற்றி அவ­ருக்­குத் தெரி­விக்­கப்­படும் என்­றும் திரு­வாட்டி ஆவ்­வி­டம் கூறப்­பட்­ட­தா­க­வும் அது குறிப்­பிட்­டது.

கடி­தம் கிடைத்த அன்றே திரு சண்­மு­கம் திரு­வாட்டி ஆவ்­வைத் தொடர்­பு­கொண்டு அவ­ரது மக­னின் கைது பற்றி புல­னாய்வு செய்­யப்­படும் என்று உறுதி அளித்­தார் என்­றும் கூறப்­பட்­டது.

உள்­து­றைக்கு பொறுப்பு வகிக்­கும் அமைச்­சர்­க­ளின் தொடர்பு விவ­ர­மும் அவ­ரி­டம் அளிக்­கப்­பட்­டது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!