தாக்கத்தைக் குறைக்க சலுகைகள் வழங்கப்படும்

பொருள் சேவை வரியை உயர்த்­து ­வ­தற்­கான நேரத்­தைத் தீர்­மா­னிப்

­ப­தற்கு முன்பு, ஒட்­டு­மொத்த

பொரு­ளி­யல்நிலை கருத்­தில் கொள்­ளப்­படும் என்று நிதி அமைச்­சர் லாரன்ஸ் வோங் நேற்று தெரி­வித்­தார்.

பொருள் சேவை வரி ஏற்­றத்­தால் ஏற்­படும் தாக்­கத்தை பெரும்­பா­லான சிங்­கப்­பூ­ரர்­கள் ஐந்து ஆண்­டு­கள் கழித்து உணர்­வர் என்­றும் குறைந்த வரு­மானம்

ஈட்­டு­வோர் பத்து ஆண்­டு­கள் கழித்து உணர்­வர் என்­றும் அவர் கூறி­னார். இதற்­குத் தேவை­யான சலு­கை­கள் வழங்­கப்­படும் என்­றார் அவர்.

"மற்ற நாடு­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது சிங்­கப்­பூ­ரில் பொருள், சேவை வரி தனித்­து­வம்­ வாய்ந்­தது. எங்­கள் பொருள் சேவை வரித் திட்­டம் பல சலு­கை­க­ளைக் கொண்­டுள்­ளது.

"இதன் கார­ண­மாக குறைந்த வரு­மான, நடுத்­த­ரக் குடும்­பங்­கள் வரி அதி­க­ரிப்­பால் பாதிக்­கப்­ப­ட­மாட்­டார்­கள்," என்று திரு வோங் கூறி­னார்.

பொருள் சேவை வரியை ஏழு விழுக்­காட்­டி­லி­ருந்து ஒன்­பது விழுக்­கா­டாக உயர்த்த அர­சாங்­கம் கொண்­டுள்ள திட்­டம் அடுத்த ஆண்­டுக்கும் 2025ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்று அவர் கூறி­னார்.

கொவிட்-19 சூழல் நிலவி வரும் நிலையில், எதிர்ப்பார்க்கப்பட்டதை விட முன்கூட்டியே பொருள் சேவை வரி உயர்த்தப்படும் என்று அரசாங்கம் தெரிவித்திருப்பதை அடுத்து, அதுகுறித்து பல கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன.

வரி ஏற்றத்தைப் பணவீக்கம் எவ்வாறு தாமதப்படுத்தும் என்று கலந்துரையாடலின்போது அமைச்சர் வோங்கிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

நிலைமையை அரசாங்கம் மிக உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக திரு வோங் தெரிவித்தார்.

ஆனால் தீர்மானிக்கப்பட்டுள்ள கால­கட்­டத்­திற்குள் பொருள் சேவை வரியை உயர்த்­தியே ஆக வேண்­டும் என அர­சாங்­கத்­தின் நிலைப்­பாட்டை அவர் மறுஉறுதி செய்­தார். பொருள் சேவை வரி ஏற்­றத்­தால் ஏற்­படும் தாக்­கத்­தைக் குறைக்க $6 பில்­லி­யன் பெறுமானமுள்ள தொகுப்­புத் திட்­டத்தை அர­சாங்­கம் கடந்த ஆண்டு அறி­வித்­தது.

அது­மட்­டு­மல்­லாது, குறைந்த வரு­மான சிங்­கப்­பூ­ரர்­க­ளுக்கு ஆதரவுக் கரம் நீட்டும் வகையில் நிரந்தரப் பொருள் சேவை வரி

பற்­றுச்­சீட்­டு­களை மேம்­ப­டுத்த

திட்­டம் கொண்­டுள்­ள­தா­க­வும் அது தெரி­வித்­தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!