ஆகாயப் படை தொழில்நுட்பர்களுக்கு புதிய வேலை, கல்வித் திட்டம்

ஆகா­யப் படை­யில் சாதா­ரண நிலை தேசிய சேவை­யா­ள­ராக இருக்­கும் மாதேஷ் கண்ணனை வீட்­டில் பயன்­ப­டுத்­தப்­படும் ஏதா­வது ஒரு பொருள் உடைந்­து­விட்­டால் அதைச் சரி­செய்ய அதை செப்­ப­னி­டு­வ­தில் தேர்ச்சி பெற்ற ஒரு­வ­ரைக் கூப்­பி­டா­மல் மாதே­ஷின் பெற்­றோர் அவ­ரி­டமே அந்­தப் பணியை ஒப்­ப­டைப்­பர்.

மாதே­ஷின் கைப்­பொ­ருள் திற­னைக் கண்டு வியந்த அவ­ரது தகப்­ப­னார், மாதேஷ் 17 வயது எட்­டி­ய­தும், அவரை தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தின் ஆகா­யத் துறை தொழில்­நுட்ப கல்­வித் திட்­டத்­தில் பதிந்­து­கொள்­ளு­மாறு ஊக்­கம் தந்தார்.

அந்­தக் கல்­வித் திட்­டத்­தின் பாடம் தமக்கு பரிச்­ச­ய­மில்­லா­த­தால் தொடக்­கத்­தில் சிர­மப்­பட்­டார் மாதேஷ். பின்­னர், அதில் ஈடு­பாடு கொண்டு சிங்­கப்­பூர் குடி­ய­ரசு ஆகா­யப் படை­யின் புதிய வேலை, கல்­வித் திட்­டத்­தில் பதிந்­து­கொண்­டார்.

இந்த இரண்­டரை ஆண்டு திட்­டத்தை நேற்று அறி­வித்த தற்­காப்பு அமைச்சு, இந்­தத் திட்­டம் ஆகா­யப் படை­யில் தேசிய சேவை­யாற்­றும் தொழில்­நுட்­பர்­க­ளுக்கு கல்வி அங்­கீ­கா­ரம் கிடைக்க ஒரு வாய்ப்பு அளிப்­ப­தா­கத் தெரி­வித்­தார்.

இவர்­கள் சிங்­கப்­பூ­ரின் தற்­காப்­புக்கு பங்­க­ளிக்கும் அதே­வே­ளை­யில் ஆகாய பொறி­யி­யல் துறை­யில் பட்­ட­யம் பெற முடி­யும் என்று கூறினார்.

மாதேஷ் போன்று 20 பேர் இன்று முதல் தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் வார நாட்­களில் கல்வி கற்று பட்­ட­யம் பெறும் வாய்ப்­பைப் பெறு­வர் என்று அமைச்சு விளக்­கி­யது.

தெமா­செக் பல­து­றைத் தொழிற்­கல்­லூரி வழங்­கும் இந்­தக் கல்­வித் திட்­டத்­தில் தொழில்­நுட்­பக் கல்­விக் கழ­கத்­தில் ஆகா­யத் துறை தொடர்­பான தேர்ச்சி பெற்­ற­வர்­கள் பதிவு செய்து கொள்­ள­லாம்.

இந்­தக் கல்­வித் திட்­டத்­தில் பங்­கேற்­போர் முத­லில் இரண்டு் பாடத் திட்­டங்­களை முடித்து வேலை, கல்­விச் சான்­றி­த­ழைப் பெறு­வர். பின்­னர், இது­போல் மேலும் மூன்று பாடத் திட்­டங்­களை முடித்­த­பின் விமா­னத் துறை­யில் பட்­ட­யம் பெறு­வர்.

இவ்­வாறு பட்­ட­யம் பெற்­ற­பின் அவர்­கள் சிங்­கப்­பூர் குடி­ய­ரசு ஆகா­யப் படை­யின் நான்­காண்டு ஒப்­பந்­தத்­தின்­படி மேலும் ஓர் ஆண்டு ஆகா­யப் படை­யில் சேவை­யாற்ற வேண்­டும்.

இது­பற்­றிக் கூறும் மாதேஷ், "எனது தேர்வு முடி­வு­கள் நன்­றாக இருந்­த­தால், இந்­தத் திட்­டத்­தில் சேரும்­படி எனது தொழில்­நுட்­பக் கல்விக் கழக விரி­வு­ரை­யா­ளர் ஆலோசனை வழங்­கி­னார். அத­னால், இதில் பதிந்­து­கொள்­வது தொடர்­பாக முடிவு எடுப்­பது எனக்கு எளி­தான ஒன்­றாக இருந்­தது. இந்­தப் புதிய கல்­வித் திட்­டத்­தில் ஒரு­வ­ராக இருப்­பது எனக்கு மகிழ்ச்சி அளிக்­கிறது. இதில் நிறை­யக் கற்­றுக்­கொள்ள முடி­யும் என நான் நம்­பு­கி­றேன்," என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!