நெருக்கடி காலம் கடந்துபோகும்

தீபாவளி நெருங்கிட வேலையிடங்களிலும் இல்லங்களிலும் கொண்டாட்ட உணர்வு களைகட்டிவிடும். ஒன்றுகூடலுக்குத் தயாராகும் வகையில் இந்திய உணவகங்களுக்கும் 'கேட்டரிங்' நிறுவனங்களுக்கும் ஏகப்பட்ட 'ஆர்டர்'கள் வந்து குவியும்.

அவை அனைத்தையும் பூர்த்தி செய்யமுடியாத பட்சத்தில் தீபவாளிக்குச் சில நாட்கள் முன்னரே காலக்கெடு வைத்து ஆர்டர்களை உணவகங்களும் நிறுவனங்களும் நிறுத்திவிடும்.

ஆனால் இம்முறை கொவிட்-19 கிருமித்தொற்றின் தாக்கமும் அதனால் வந்த பாதுகாப்புக் கட்டுப்பாடுகளும்

உணவுத் துறைக்கு பரிட்சையாக வந்து நிற்கிறது.

ப. பால­சுப்­பி­ர­ம­ணி­யம்

இந்­திய உண­வ­கங்­கள் நேரடி, வீட்டு விநி­யோ­கச் சேவையை நம்பி வர்த்தகத்தை நடத்தவேண்­டிய கட்­டா­யம் உள்ள காலம் இது.

தீபா­வ­ளியை முன்­னிட்டு, சிறப்பு சைவ, அசைவ உண­வுப்­பட்­டி­யல்­களை உரு­வாக்கி வீட்டு விநி­யோ­கச் சேவை அல்­லது கேட்ட­ரிங் சேவையை அவை விளம்­ப­ரப்­ப­டுத்­து­வது வழக்­கம்.

இம்­முறை அதற்­கான வர­வேற்பு மந்­த­மா­கவே இருக்­கிறது.

"தீபா­வ­ளியைத் தொடர்ந்து முதல் இரண்டு வார­இ­றுதி நாட்­களில் அதிக ஆர்டர்­கள் வரும். இச்­ச­ம­யம் உண­வ­கத்­தின் முக்­கிய சமை­யல் வல்­லு­நர்­கள் இந்­தி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு இன்­னும் திரும்­ப­வில்லை. தற்­போது அதி­க­பட்­ச­மாக நாளுக்கு இரண்டு விருந்­தி­னர்­கள் மட்­டுமே வீடு­க­ளுக்கு அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தால், வியா­பா­ரத்­திற்கு அதிக பாதிப்பு ஏற்பட்டுள் ளது," என்று கூறி­னார் சகுந்­த­லாஸ் உண­வ­கத்­தின் உரி­மை­யா­ளர் திரு­மதி சரஸ்­வதி.

தீபா­வளி வரு­வ­தற்கு முன், பள்­ளி­கள், அர­சாங்க அமைப்­பு­கள், தனி­யார் நிறு­வ­னங்­கள் 'பெண்டோ செட்'கள் அல்­லது கேட்ட­ரிங் சேவைக்­காக அதி­கம் நாடும்­போக்கு இவ்­வாண்டு காண­வில்லை.

ஏனெ­னில் வீட்­டி­லி­ருந்து வேலை செய்­யும் நடை­முறை தற்­போது நடப்­பில் உள்­ளது என்று திரு­மதி சரஸ்­வதி சொன்­னார்.

கொவிட்-19 கட்­டுப்­பாடுகளால் கடந்த ஆண்டைக் காட்­டி­லும் விற்­பனை சுமா­ரா­கத்­தான் உள்­ள­தா­கக் கூறி­னார் 'தி பனானா லீஃப் அப்­போலோ' உண­வகத்தின் உரி­மை­யா­ளர் திரு சி.சங்­க­ர­நா­தன்.

இவ்­வாண்டு மொத்த குடும்ப நபர் எண்­ணிக்­கை­களில் வாடிக்­கை­யா­ளர்­கள் தீபா­வளிச் சிறப்பு உணவு 'பெண்டோ செட்'களுக்கு ஆர்டர் செய்து வரு­வ­தா­கக் கூறிய காயத்ரி உண­வ­கத்­தின் இயக்­கு­நர் திரு ச.மகேந்­தி­ரன், கடந்த ஆண்டை காட்­டி­லும் இவ்­வாண்டு ஆர்டர்­கள் கூடி­யுள்­ளது என்று பகிர்ந்­து­கொண்­டார்.

கடந்த 25 ஆண்­டு­க­ளாக சுப­நி­கழ்­வு­களுக்கும் பண்­டிகைக் காலத்­திற்­கும் உணவு வழங்கி வரு­கிறது 'சேமிஸ் கேட்ட­ரிங்' நிறு­வ­னம்.

"இம்முறை தீபா­வளிச் சிறப்பு உண­வுப்­பட்­டி­யல் வெளி­யிட்­ட­தி­லி­ருந்து பல­ரும் தம்­மி­டம் தொடர்­பு­கொண்டு கேள்வி எழுப்­பி­னா­லும் ஆர்டர்­கள் போதிய அள­வில் இல்லை என அதன் இயக்­கு­நர்­களில் ஒரு­வ­ரான திரு­மதி ப. தீபா­‌ஷினி கூறினார்.

பிர­பல உள்­ளூர் சமை­யல் வல்­லு­நர் திரு எஸ்.ஆர். பாலா நடத்­தும் 'எக்ஸ் எம்­ப­யர் குசின்' கேட்டரிங் நிறு­வ­னத்­திற்கு இது சிக்­க­லான காலகட்­டம்.

"கடந்த ஆண்டைக் காட்­டி­லும், தீபா­வளி ஆர்டர்­கள் 70% சரிந்­துள்­ளது," என்று கூறி­னார் திரு பாலா. தீபா­வளி அன்று வீடு­களில் 'புஃப்பே' ஏற்­பாடு செய்ய முடி­யாத வருத்­தம் இவரைப் போன்ற கேட்ட­ரிங் நிறு­வ­னங்­க­ளுக்கு ஒரு மனக்­குறை.

"இந்த ஆண்டு தீபா­வ­ளிக்­காக சிறப்பு உண­வுப் பட்­டி­யலை வெளி­யிட எண்­ணம் இல்லை. குறை­வான எண்­ணிக்­கை­யில் சமைத்து விநி­யோ­கம் செய்­வது எங்­க­ளுக்குக் கட்­டுப்­ப­டி­யா­காது. கொவிட்-19 கிரு­மித்­தொற்று வரு­வ­தற்கு முன், தீபா­வளி நேரத்­தில் கிட்­டத்­தட்ட 60 நிகழ்ச்­சி­க­ளுக்கு மேல் கேட்ட­ரிங் ஆர்­டர்­கள் வரும்," என்று நினை­வு­கூர்ந்­தார் 'ஸ்பி­ரிங்­லீவ் பிராட்டா பிளேஸ்' உரி­மை­யா­ளர் திரு எஸ்.வி.குணா­ளன்.

கேட்டரிங் தொழி­லில் முழு­மை­யாக இருப்­ப­வர்­க­ளுக்கு பாதிப்பு இன்­னும் அதி­கம் என்று விளக்­கிய திரு குணா­ளன், அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து கிடைத்­து­வ­ரும் நிதி ஆத­ரவு தற்­போ­தைய சூழ்­நி­லை­யில் உத­வி­யாக உள்­ளது என்­றார்.

கட்­டுப்­பா­டு­க­ளுக்கு ஏற்ப, மூன்று, நான்கு, ஐந்து பேர் வரை என குடும்ப நபர் எண்­ணிக்­கைக்கு அள­வி­லான தீபா­வளி உண­வுப்­பட்­டி­யலை இம்­முறை உரு­வாக்­கி­யுள்­ளது நந்­த­னாஸ் உண­வ­கம்.

நந்­த­னாஸ் உண­வக உரி­மை­யா­ளர் திரு ரா.சிவ­வ­டி­வேல், தீபா­வளி அன்று குறைந்த எண்­ணிக்­கை­யில் உணவு விநி­யோ­கம் செய்­தா­லும் வீட்­டில் பண்­டிகை நாளன்று சமைக்­காது உணவு தங்­க­ளைத் தேடி வரும் வச­தியை வாடிக்­கை­யா­ளர்­களுக்கு வழங்­கு­வது முக்­கி­யம் என்று சொன்னார்.

தீபா­வளி அன்று தமது உண­வ­கங் களுக்கு அரு­கில் வசிக்­கும் வாடிக்­கை­யா­ளர்­கள் நேர­டி­யாக வந்து உண­வைப் பெற்­றுக்­கொள்­வ­தை­யும் நந்­த­னாஸ் உண­வ­கம் ஊக்­கு­விக்­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!