சராசரியாக ஒரு நாளில் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத 60 முதியவர்களுக்கு கொவிட்-19

ஒவ்­வொரு நாளும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத கிட்­டத்­தட்ட 60 முதி­ய­வர்­க­ளி­டையே கொவிட்-19 பதி­வா­கிறது. இவர்­களில் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­ப­டு­வோ­ரின் சரா­சரி எண்­ணிக்கை ஆறு என்று சுகா­தார மூத்த துணை அமைச்­சர் ஜனில் புதுச்­சேரி நாடாளு­மன்­றத்­தில் கூறி­னார். தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வரை, குறிப்­பாக மூத்­தோ­ரைத் தொடர்ந்து கொவிட்-19 பல­வாறு தாக்கி வரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார்.

இதற்­கி­டையே, தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் மீண்­டும் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­படும் சாத்­தி­யம் அதி­கம் என்று கூறப்­பட்­டது. ஆகஸ்ட் மாத நில­வ­ரப்­படி 32 பேருக்கு மறு­ப­டி­யும் கொவிட்-19 தொற்று ஏற்­பட்­டது. இவர்­கள் அனை­வ­ரும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­வர்­கள் என்று டாக்­டர் ஜனில் தமது அமைச்­சர்­நிலை அறிக்­கை­யில் குறிப்­பிட்­டார்.

கடந்த ஆறு மாதங்­களில் கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­தோ­ரில் கிட்­டத்­தட்ட 95 விழுக்­காட்­டி­ன­ருக்கு 60 மற்­றும் அதற்கு மேற்­பட்ட வய­தா­கும். உயி­ரி­ழந்­த­வர்­களில் 72 விழுக்­காட்­டி­ன­ருக்கு முழு­மை­யாகத் தடுப்­பூசி போடப்­ப­ட­வில்லை. தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருந்த மீதம் 28 விழுக்­காட்­டி­ன­ருக்கு உயர் ரத்த அழுத்­தம், நீரி­ழிவு நோய், புற்­று­நோய், இரு­தய, நுரை­யீ­ரல், சிறு­நீ­ர­கம் தொடர்­பான நோய்­கள் போன்ற மருத்­து­வப் பிரச்­சி­னை­கள் இருந்­த­தா­க­வும் கூறப்­பட்­டது.

"தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­த­தில் அபா­யங்­கள் அதி­கம். தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளாத 60 வயது, அதற்கு மேற்­பட்ட வய­து­டைய ஒரு­வ­ருக்கு உயிர்­வாயு தேவைப்­படும் நிலை ஆறு மடங்கு அதி­க­ரிக்­கக்­கூ­டும். கடு­மை­யாக நோய்­வாய்ப்­பட்டு தீவிர சிகிச்­சைப் பிரி­வில் சேர்க்­கப்­படும் சாத்­தி­யம் எட்டு மடங்கு அதி­கரிக்­கலாம். இறக்­கும் வாய்ப்­பும் 17 மடங்கு கூடு­த­லா­க­லாம்," என்­றார் டாக்­டர் ஜனில்.

கடும் நோய் பாதிப்­பைக் கூடு­தல் (பூஸ்­டர்) தடுப்­பூசி குறைக்க உத­வு­வ­தா­க­வும் அவர் குறிப்­பிட்­டார். கடந்த வார எண்­ணிக்­கை­படி இன்­ன­மும் 68,000 முதி­ய­வர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடப்­ப­ட­வில்லை.

கொவிட்-19 தடுப்­பூ­சி­களை

கட்­டா­ய­மாக்­கு­வ­தில் சிக்­கல்

இதற்­கி­டையே, சிங்­கப்­பூ­ரில் கொவிட்-19 தடுப்­பூ­சி­க­ளைக் கட்­டா­ய­மாக்­கும் நடை­முறை, கவ­ன­மா­கப் பரி­சீ­லிக்­கப்­பட வேண்­டிய ஒன்று என்று டாக்­டர் ஜனில் நேற்று கூறி­னார்.

தடுப்­பூசி போட்­டுக்­கொள்­வதைக் கட்­டா­ய­மாக்­கி­னா­லும் அதை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது சிர­மம் என்­றார் அவர்.

தடுப்­பூ­சி­க­ளைக் கட்­டா­ய­மாக்­கு­வ­தில் தடுப்­பூசி விகி­தம், அனைத்­து­லக நடை­முறை, தடுப்­பூ­சி­யின் செயல்­தி­றன் உள்­ளிட்ட பல்­வேறு அம்­சங்­க­ளைக் கருத்­தில்­கொள்­ள­லாம் என்று அவர் விவ­ரித்­தார்.

இருப்­பி­னும், தடுப்­பூ­சி­யைக் கட்­டா­ய­மாக்­கி­னால் அதைக் கண்­காணிப்­ப­தும் செயல்­ப­டுத்­து­வ­தும் சவா­லாக இருக்­கும் என்று டாக்­டர் ஜனில் கூறி­னார்.

"அது பரி­சீ­லிக்­கப்­பட வேண்­டிய ஒன்று என நான் நினைக்­கி­றேன். எனி­னும், அதன் தொடர்­பில் பல சிக்­கல்­கள் உள்­ளன," என்­றார் அவர்.

கொவிட்-19 ஐசியு படுக்­கை­களில் 60% நிரப்­பப்­பட்­டுள்­ளன

கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­கென ஒதுக்­கப்­பட்­டுள்ள 219 தீவிர சிகிச்­சைப் பிரிவு (ஐசியு) படுக்­கை­களில், ஏறத்­தாழ 60% படுக்­கை­கள் நிரப்­பப்­பட்­டுள்­ள­தாக டாக்­டர் ஜனில் தெரி­வித்­தார். நேற்­றைய நில­வ­ரப்­படி கடும் பாதிப்­பு­டன் ஐசி­யு­வில் சேர்க்­கப்­பட்­டி­ருப்­போ­ரின் எண்­ணிக்கை 130 என்று கூறி­னார்.

சுவா­சிப்­ப­தற்­குச் சில­ருக்கு இயந்­தி­ரம் வழி உயிர்­வாயு தேவைப்­ப­டு­கிறது; ஐசி­யு குழு­வின் தொடர் கவ­னிப்பு அனை­வ­ருக்­கும் தேவைப்­ப­டு­கிறது என்று அவர் குறிப்­பிட்­டார். ஐசி­யு­வில் நோயா­ளி­கள் சரா­சரி­யாக 11 முதல் 15 நாட்­கள் தங்க நேரி­டு­கிறது. ஒரு சிலர் ஒரு மாதம் வரை தங்­க­வும் செய்­கின்­ற­னர்.

கொவிட்-19 அல்­லாத ஐசியு படுக்கை எண்­ணிக்­கை­யைக் குறைப்­ப­தால் கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­கான ஐசியு படுக்­கை­களை அதி­க­ரிக்க முடி­வ­தா­க­வும் திரு ஜனில் குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!