திருட்டு காரைத் துரத்திய 5 போலிசாருக்கு காயம்

திரு­டிய வாக­னத்தை ஓட்­டிச் சென்று தப்­பிக்க முயன்ற 19 வயது ஆட­வர் ஒரு­வரை நிறுத்த முயன்­ற­போது நேற்று முன்­தி­னம் ஐந்து போலிசா­ருக்கு காயம் ஏற்­பட்­டது.

அச்­சம்­ப­வம் பற்றி போலிசார் நேற்று நடந்த செய்­தி­யா­ளர் கூட்­டத்தில் விளக்கினர்.

வாக­னம் ஒன்று திரு­டப்­பட்­டி­ருப்­ப­தாக அக்­டோ­பர் 30ஆம் தேதி சனிக்­கி­ழமை இரவு 8.30 மணிக்­கு போலி­சா­ருக்­குத் தக­வல் கிடைத்­தது.

காரை மற்­ற­வர்­க­ளு­டன் பகிரும் சேவை­களில் ஈடு­பட்ட 22 வயது ஆட­வர் அது பற்றி தக­வல் அளித்­தி­ருந்­தார்.

காரில் இருந்த மற்ற இரண்டு பய­ணி­க­ளுக்­காக இந்த ஆட­வர் சிக­ரெட்­டு­களை வாங்கக் கீழே இறங்­கி­ய­போது அந்த இரு­வ­ரும் காரை ஓட்­டிச் சென்­று­விட்­ட­னர்.

ஞாயிற்­றுக்­கி­ழமை அதி­காலை 2.15 மணிக்கு, கள­வா­டப்­பட்ட வாக­னம், அடை­யா­ளம் குறிப்­பி­டப்­ப­டாத போலிஸ் வாக­னத்­தை­யும் அருகே நிறுத்­தப்­பட்­டி­ருந்த வேனை­யும் மோதி­விட்டு வேக­மா­கச் சென்று­ விட்­டது.

காரை அப்­போது ஓட்­டிய 19 வயது ஆட­வர், போலிஸ் புகைப்­ ப­டக் கரு­வி­க­ளின் உத­வி­யு­டன் ஆறு மணி நேரத்­துக்­குப் பின்­னர் பிடி­பட்­டார்.

அவ­ரி­ட­மி­ருந்து மற்­ற­வர்­க­ளைச் செய­லி­ழக்க வைக்­கும் 'ஸ்டன்' கருவி கைப்­பற்­றப்­பட்­டது.

பின்னர், ஞாயிற்­றுக்­கி­ழமை காலை 9 மணிக்கு, அங் மோ கியோ அவென்யூ 6இல் உள்ள கார் நிறுத்து­மி­டத்­தில் கள­வா­டப்­பட்ட வாக­னம் இருந்­தை போலி­சார் கண்­ட­னர். அதைத் திரு­டிச் சென்ற மற்ற 19 வயது ஆட­வர் இப்­போது அதை ஓட்­டிக்கொண்­டி­ருந்­தார். அவ­ரு­டன் இன்­னொரு ஆண் பயணி இருந்­தார்.

காரை விட்டு வெளி­யே­றும்­படி போலி­சார் கூறி­ய­போது, ஓட்­டு­நர் வேக­மாக காரை அங்­கி­ருந்து ஓட்­டிச் சென்­றார்.

அதில் மூன்று போலிஸ் அதி­கா­ரி­கள் விழுந்­த­தில் அவர்­க­ளுக்கு இலே­சான காயங்­கள் ஏற்­பட்­டன.

தப்­பிச் சென்ற காரை அடை­யா­ளம் குறிப்­பி­டாத போலிஸ் வாக­னம் துரத்­திச் சென்­றது.

தப்ப முயன்ற கார், சாலை­யில் நிறுத்­தப்­பட்­டி­ருந்த இரண்டு கார்­ க­ளை­யும் துரத்­திச் சென்ற போலிஸ் காரை­யும் மோதி­யது. அதில் இரண்டு அதி­கா­ரி­க­ளுக்­குக் காயம் ஏற்­பட்­டது.

இறு­தி­யில் லெண்­டோர் பிளேன்ஸ் பகு­தி­யில் வாக­னத்­தைப் போலி­சார் பிடித்­த­னர். வாக­னத்­தில் பட்­டாக்­கத்தி ஒன்­றும் கண்­டெ­டுக்­கப்­பட்­டது.

ஓட்­டு­ந­ரும் பய­ணி­யும் கைது செய்­யப்­பட்­ட­னர். போலி­சா­ருக்கு சிராய்ப்­புக் காயங்­கள் உள்­ளிட்ட பல்­வேறு காயங்­கள் ஏற்­பட்­டன.

நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

காரைக் கள­வா­டிய இரண்டு 19 வயது ஆட­வர்­களான காயஸ் சான் ஜிங் காய், லக்‌ஷன் சரவணன் மீதும் பொது நோக்­கத்­து­டன் வாக­னத்தைத் திருடியதன்­ தொடர்­பில் நேற்று மாவட்ட நீதி­மன்­றத்­தில் குற்­றஞ்­சாட்­டப்­பட்­டது.

திருட்­டுச் சம்­ப­வத்­தில் தொடர்­பி­ருந்த சந்­தே­கத்­தின் பேரில் மேலும் மூவர் கைது செய்­யப்­பட்­ட­னர்.

வேறு காரிலிருந்து பதிவு எண் பலகையை திருடியதாக லக்‌ஷன் மீது வேறு ஒரு குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!