முனைவர் பட்டம், தொற்றிலிருந்து மீண்ட மகிழ்ச்சி புத்தொளி தந்த தீபாவளி

கி.ஜனார்த்­த­னன்

இந்த தீபா­வ­ளிக் கொண்­டாட்­டம் இது­வரை அனு­ப­வித்­தி­ராத மன மகிழ்ச்­சி­யை­யும் நம்­பிக்கை உணர்­வை­யும் 33 வயது திரு­மதி அனிதா பிர­வீ­னுக்­கு கொண்டு வந்­துள்­ளது.

பிரிந்­தி­ருந்த மக­னைத் தூக்­கிக் கொஞ்ச முடிந்த மகிழ்ச்சி ஒரு­ புறம், முனை­வர் பட்­டம் பெற்ற பெருமை மறு­பு­றம். மகனோடு இணைந்த தாயா­க­வும் முனை­வர் பட்­ட­தா­ரி­யா­க­வும் உற்­சா­கத்­து­டன் தீப­மேற்றி இந்­தத் தீபா­வ­ளியை அவர் கொண்­டா­டு­கி­றார்.

ஒரே வீட்­டில் இருந்­தும் ஸூம் செயலி மூல­மாக மக­னு­டன் உரை­யாட வேண்­டி­ய­நிலை. கொவிட்-19 கிரு­மித்­தொற்­றி­னால் பாதிக்­கப்­பட்ட அனி­தா­வுக்கு நோயின் தாக்­கங்­ க­ளை­விட மக­னைப் பிரிந்­தி­ருந்­தது அதிக மனவலி­யை­த் தந்­தது.

தீபா­வ­ளிக்­கா­வது ஒரு வயது செல்ல மக­னைத் தூக்­கிக் கொஞ்சு­ வோமா, அவ­னு­டன் புத்­தாடை அணிந்து பண்­டி­கை­யைக் கொண்­டா­டு­வோமா என்ற குழப்பம் நிறைந்த நாட்­கள் அவை.

"வாந்தி, சளி, காய்ச்­சல் என்று நோயு­டன் 10 நாட்­கள் தனி­யாக அறைக்­குள் அடைத்­துக்­கொண்டு இருந்­த­தை­விட என் மக­னைத் தூக்கி அவ­னுக்கு உண­வூட்ட முடி­யா­தது சிரமமாக இருந்தது," என்­றார் அவர்.

சென்ற அக்­டே­பார் 14ஆம் தேதி­யன்று அவ­ருக்கு சளி­யும் காய்ச்­ச­லும் ஏற்­பட்­டது. மறு­நாள் ஏஆர்டி, பிசி­ஆர் கிரு­மிப் பரி­சோ­தனை செய்­த­போது, கொவிட்-19 கிரு­மித்­தொற்று உறு­தி­யா­னது.

"வீட்­டுக்கு வந்த விருந்­தி­னர் ஒரு­வ­ரின் மூலம் கிருமி தொற்­றி­யது. மக­னைப் பற்­றிய கவ­லை­தான் முக்­கி­ய­மாக இருந்­தது," என்­றார் அனி­தா­வின் கண­வர் 32 வயது திரு பிர­வீன் செல்­வம்.

திரு பிர­வீன், அவ­ரது மகன் விக்­ரம், பணிப்­பெண் ஆகிய மூவ­ருக்­கும் கிரு­மித்­தொற்று இல்லை என்று உறு­தி­யா­ன­தும் அனிதா உடனே தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டார்.

பத்து நாட்­கள் தனி­மைக் காலத்தை முடித்து அக்­டோ­பர் 25ஆம் தேதி அனிதா அறை­யி­லி­ருந்து வெளி­யே­றி­யதும் உடனே மகனை அள்ளி அணைக்க மனம் துடித்­தது. ஆனா­லும் கட்­டுப்­ப­டுத்­திக்­கொண்டு அறை­யைக் கிரு­மி­நா­சி­னி­க­ளைப் பயன்­ப­டுத்தி சுத்­தப்­ப­டுத்­தி­னர். வீடு முழுக்க சுத்­தம் செய்த பின்­னரே மக­னைத் தூக்­கிக் கொஞ்­சி­னார்.

"கொரோனா பர­வல் தொடங்­கிய காலத்­தில். பிப்­ர­வரி மாதம் மகன் விக்­ரம் பிறந்­தான். வீட்­டில் எவ­ருக்­கும் கிரு­மித்­தொற்று ஏற்­ப­டா­மல் கண்­ணும் கருத்­து­மாக இத்­தனை காலம் மிகப் பாது­காப்­பாக இருந்­தோம்.

"அண்­மைய வாரங்­களில் கிருமிப்­ப­ர­வல் பெரி­தும் கூடி­யுள்­ளது. இருந்­தா­லும் தொற்றுக்கு நாம் ஆளா­கும் வரை­ நோயின் கடு­மை­யையும் பிரச்­சி­னை­க­ளை­யும் உணர் ­வ­தில்லை," என்றார் அனிதா.

தனி­மைக்­கா­லத்­தின்­போது தீபா­வ­ளிக்­காக பொருட்­கள் வாங்க இய­லாத நிலை­யில் இணை­யம் வழி­யாக மளி­கைப்­பொ­ருட்­கள், ஆடை­கள், பல­கா­ரங்­கள் ஆகி­ய­வற்றை வாங்­கி­னர் இந்­தத் தம்­ப­தி­யர்.

உயிர் மருத்­து­வப் பொறி­யி­ய­லில் முனை­வர் பட்­டக்­கல்வி பயின்­று­வந்த திரு­வாட்டி அனிதா கடந்த ஞாயிற்­றுக்­கி­ழமை, மெய்­நி­கர் பட்­ட ­ம­ளிப்பு விழா­வில் குடும்­பத்­தின ருடன் கலந்­து­கொண்­டார்.

"இது எனக்கு வெற்­றி­க­ளைத் தந்த கால­கட்­டம். ஒரு குடும்­ப­மாக நாங்­கள் கிரு­மிப்­ப­ர­வலை முறி­ய­டித்த வெற்­றி­யு­டன் இந்த வெற்­றி­யை­யும் சேர்த்து தீபா­வ­ளி­யைக் கொண்­டாடுகிறோம்," என்று மன­நி­றை­வு­டன் கூறி­னார் அனிதா.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!