மூத்தோருக்கு கொவிட்-19 சிகிச்சை நிலையம் தயார்

150 பேர் பணிபுரிவர்; பொது மருத்துவமனைகளின் சுமையைக் குறைக்கும்

கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­படும் முதி­யோ­ருக்குச் சிகிச்சை அளிப்­ப­தற்­காக பல வசதி­க­ளு­டன் எஃப்1 பிட் கட்­ட­டத்­தில் சிகிச்சை நிலை­யம் தயா­ரா­கி­விட்­டது. அது நவம்­பர் 9ஆம் தேதி முதல் செயல்­படும்.

முதி­யோரை மன­தில் கொண்டு உரு­வாக்­கப்­பட்டு இருக்­கும் அந்த நிலை­யத்­தில், சாப்­பாடு முதல் கலந்­து­ற­வா­டு­வ­தற்­கான வச­தி­கள்வரை பல­வும் பாது­காப்­பான முறை­யில் உயர்­த­ர­மிக்­க­வை­யாக இருக்­கும்.

ஒவ்­வொரு வார்­டி­லும் உள்ள நோயா­ளி­கள் தொலைக்­காட்சி பார்த்து மகிழ, எளி­மை­யான உடற்­பயிற்­சி­களில், விளை­யாட்­டு­களில் ஈடு­பட வச­தி­யும் இருக்­கும்.

புதிய சிகிச்சை நிலை­யத்­தில் 721 நோயா­ளி­க­ளுக்கு இடம் இருக்­கிறது. முற்­றிய நோயால் பாதிக்­கப்­பட்டு உள்ள, கொவிட்-19 கிருமி தொற்­றிய முதி­ய­வர்­கள் இங்கு சேர்த்­துக்­கொள்­ளப்­ப­டு­வார்­கள்.

தொற்று இருக்கும் போதிலும் சாப்பிடுவது, கழிவறைக்குச் சென்று வருவது போன்ற காரியங்களைத் தானே செய்து கொள்ளக்கூடிய நிலையில் இருப்போருக்கு அந்தப் புதிய நிலையம் உரியதாக இருக்கும்.

தடுப்பூசி போட்டவர்கள் என்றால் 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, தடுப்பூசி போடாதவர்கள் என்றால் 80 வயதுக்கு மேற்பட்டோருக்கு அங்கு இடமுண்டு.

அந்­தப் புதிய நிலை­யம் பொது மருத்­து­வ­ம­னை­க­ளின் சுமை­யைக் குறைக்க உத­வும்.

அதில் யாரைச் சேர்த்­துக்­கொள்ளலாம் என்­பதைச் சுகா­தார அமைச்­சின் கொவிட்-19 கிருமி தொற்­றி­யோரை நிர்­வ­கிக்­கும் சிறப்­புப் பணிக்­குழு முடிவு செய்­யும்.

புதிய நிலை­யத்­தில் 30க்கும் மேற்­பட்ட பரா­ம­ரிப்­புத் தூதர்­கள் நோயா­ளி­க­ளுக்கு உணர்வுபூர்வ ஆத­ர­வை வழங்­கு­வார்­கள்.

ஒவ்­வொரு வார்­டி­லும் எந்­த­வொரு நேரத்­தி­லும் 17 மருந்­தக ஊழி­யர்­கள் இருப்­பார்­கள். மருத்து­வர்­கள், தாதி­யர்­கள், உத­வி­யா­ளர்­கள், பரா­ம­ரிப்பு, பாது­காப்பு ஊழி­யர்­கள் உட்­பட குறைந்­த­பட்­சம் 150 பேர் அங்கு பணி­யாற்­று­வார்­கள்.

தேவை எனில் நோயா­ளி­களைப் பக்­கத்­தில் உள்ள பொது மருத்­து­வ­ம­னைக்குக் கொண்டு செல்­வ­தற்­காக மருத்துவ வாக­னச் சேவை­யும் இருக்­கும். மருத்­துவ ஊழி­யர்­கள் 24 மணி நேர­மும் நோயா­ளி­களைக் கண்­கா­ணிப்­பார்­கள் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!