‘முக்கிய துறைகளில் பெண்கள் பங்கு அதிகரிக்க வேண்டும்’

ஆண், பெண் என்ற பாகு­பாடு இல்­லா­மல் சம­மான வாய்ப்­பு­களை வழங்க சிங்­கப்­பூர் தொடர்ந்து பல்­வேறு முயற்­சி­களை எடுத்து வரு­கிறது.

அப்­ப­டி­யி­ருந்­தும் அறி­வி­யல், தொழில்­நுட்­பம், பொறி­யி­யல், கணி­தம் ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கிய 'ஸ்டெம்' துறை­களில் பெண்­க­ளின் பங்­க­ளிப்பு குறை­வா­கவே இருக்­கிறது என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் தெரி­வித்­துள்­ளார்.

இத்­து­றை­களில் பெண்­கள் அதி­கா­ர­மிக்­க­வர்­க­ளா­கச் செயல்­பட ஒருங்­கி­ணைந்த முயற்­சி­கள் தேவை என்றார் அவர்.

அர­சாங்­க­மும் 'ஸ்டெம்' துறை­களில் பெண்­க­ளின் பங்­க­ளிப்பை அதி­க­ரிக்­கச் செய்ய தொடர்ந்து பல திட்­டங்­களை அறி­மு­கப்­ப­டுத்தி வரு­கிறது. இவ்­வாண்டு தொடங்­கப்­பட்ட அதி­கா­ரத் திட்­டத்தை இதற்கு உதா­ர­ண­மாக அவர் சுட்டிக் காட்டினார்.

'ஸ்டெம்' துறை­களில் பெண் தொழில்­துறை தலை­வர்­க­ளுக்கு ஆத­ர­வான சூழலை உரு­வாக்க இந்­தத் திட்­டம் உத­வு­கிறது.

ஈஸ்ட் கோஸ்ட் தொகு­தி­யின் புதிய உப­கா­ரச் சம்­பள முயற்­சி­களும் பெண்­கள் 'ஸ்டெம்' துறை­யைத் தேர்ந்­தெ­டுத்து பயில ஆதரவு அளிக்­கிறது.

ஆண்­க­ளு­டன் ஒப்­பி­டும்­போது 'ஸ்டெம்' துறை­களில் தேர்ச்சி பெற்றுள்ள பெண்­களில் குறைவான­வர்­களே அதே துறை­யில் வாழ்க்­கைத் தொழிலை மேற்­கொள்கின்­ற­னர் என்று திரு ஹெங் குறிப்பிட்­ டார்.

நன்­யாங் தொழில்­நுட்­பப் பல்­க­லைக் கழ­கம் கடந்த மாதம் மேற்­கொண்ட ஆய்வு மூலம் 'ஸ்டெம்' துறை­யில் பட்­டம் அல்­லது பட்­ட­யம் பெற்ற பெண்­களில் 58 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே அத்துறையைத் தேர்ந்­தெ­டுப்பது தெரிய வந்­தது.

மேலும் பேசிய பொரு­ளி­யல் கொள்­கை­க­ளுக்­கான ஒருங் கிணைப்பு அமைச்­ச­ரு­மான ஹெங், வாழ்க்­கையை மேம்­ப­டுத்­த­வும் தீர்வு காண­வும் தொழில்­நுட்­பங்­க­ளைப் பயன்­ப­டுத்­தும் சாத்­தி­யங்­கள் குறித்­தும் பேசி­னார்.

கொள்­ளை­நோய்­க்குப் பிந்­திய நீடித்த உலகை நோக்கி பொறி­யி­யல் துறை என்ற கருப்­பொ­ரு­ளில் இவ்வாண்­டின் பொறி­யா­ளர்­கள் மாநாடு நடைெபற்­றது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!