செந்தோசாவில் அனைவரையும் கவரும் புதிய அம்சம்

செந்­தோசா தீவில் உய­ர­மான இடத்­தி­லி­ருந்து அனைத்­துத் திசை­க­ளை­யும் பார்க்­கக்­கூ­டிய சவா­ரியை அடுத்த மாதம் 15ஆம் தேதி­யி­லி­ருந்து பொது­மக்­கள் மகிழ்ச்­சி­யு­டன் அனு­ப­விக்­க­லாம். இந்­தப் புதிய அம்­சத்­துக்கு 'ஸ்கைஹீ­லிக்ஸ் செந்­தோசா' எனப் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

நிர்­ண­யிக்­கப்­பட்ட தேதிக்கு முன்­ன­தா­கவே இது திறக்­கப்­ப­டு­கிறது. அதி­லும் பள்ளி விடு­

மு­றை­யில் சவாரி திறக்­கப்­ப­டு­வ­தால் அதற்கு நல்ல வர­வேற்பு கிடைக்­கும் என்று அதை நடத்­தும் மவுண்ட் ஃபேபர் லெஷர் நிறு­வ­னம் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளது.

சவா­ரிக்­கான நுழை­வுச்­சீட்­டு­களை மவுண்ட் ஃபேபர் லெஷர் நிறு­வ­னத்­தின் இணை­யப்­பக்­கத்­தி­லி­ருந்து வாங்­க­லாம்.

பெரி­ய­வர்­க­ளுக்­கான நுழை­வுச்­சீட்­டின் விலை $18. நான்கு வய­தி­லி­ருந்து 12 வயது வரை­யி­லான சிறு­வர்­க­ளின் நுழை­வுச்­சீட்­டின் விலை $15.

கொவிட்-19 கிரு­மி­யு­டன் வாழும் மீள்­தி­றன்­மிக்க நாடு என்று திகழ சிங்­கப்­பூர் இலக்கு கொண்­டுள்­ளது. அதன்­படி சிங்­கப்­பூ­ரின் இந்த ஆக உய­ர­மான திறந்­த­வெளி சவாரி திறக்­கப்­

ப­டு­கிறது.

அது­மட்­டு­மல்­லாது அனைத்­து­ல­கப் பய­ணங்­க­ளை சிங்­கப்­பூர் படிப்­ப­டி­யாக மீண்­டும் தொடங்­கு­வதை இப்­பு­திய சவாரி சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­து­கிறது.

இத்­த­கைய புதிய அம்­சங்­கள் சிங்­கப்­பூ­ருக்கு மேலும் பல வெளி­நாட்­டுப் பய­ணி­களை ஈர்க்க உத­வும் என்று சிங்­கப்­பூர் பய­ணத்­

து­றைக் கழ­கத்­தின் பொழு­து­போக்கு அம்­சங்­கள், சுற்­றுப்­ப­யண மேம்­பாட்­டுப் பிரி­வின் நிர்­வாக இயக்­கு­நர் திரு­வாட்டி ஜீன் இங் தெரி­வித்­தார்.

வெளி­நாட்­டுப் பய­ணி­கள் மட்டுமின்றி சிங்­கப்­பூ­ரர்­களும் தங்­கள் குடும்­பத்­தி­ன­ரு­டன் இந்­தச் சவா­ரியை மகிழ்ச்­சி­யு­டன் அனு­

ப­விக்­க­லாம் என்­றார் அவர்.

இந்த 12 நிமி­டச் சவாரி மூலம் 35 மீட்­டர் உய­ரத்­துக்­குச் செல்­ல­லாம். மேலே சென்­ற­தும் பத்து நிமி­டங்­க­ளுக்கு அந்த கொண்­டோலா கூடம் சுற்­றும்.

இதன்­மூ­லம் உய­ரத்­தி­லி­ருந்து அனைத்துத் திசை­களில் உள்ள எழில்­மிகு காட்­சி­க­ளைக் கண்டு களிக்­க­லாம்.

தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­க­ளுக்­கும் 12 வய­துக்­கும் குறைந்த சிறு­வர்­க­ளுக்­கும் மட்­டுமே அனு­மதி வழங்­கப்­படும். அது­மட்­டு­மல்­லாது, சவா­ரி­யில் ஏறு­ப­வர்­க­ளின் உய­ரம் குறைந்­தது 1.05 மீட்­ட­ராக இருக்க வேண்­டும்.

ஒரே நேரத்­தில் 16 பேர் சவாரி செய்­ய­லாம் என்­ற­போ­தி­லும் சமூக இடை­வெளி விதி­மு­றை­யைக் கருத்­தில் கொண்டு எட்டு பேருக்கு மட்­டுமே அனு­மதி வழங்­கப்­படும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!