கனமழையால் கால்வாய்கள் 90% நிரம்பின

சிங்­கப்­பூ­ரின் பல்­வேறு பகு­தி­களில் நேற்று பெய்த கன­மழை கார­ண­மாக வடி­கால்­களும் கால்­வாய்­களும் கிட்­டத்­தட்ட நிரம்­பும் நிலைக்­குச் சென்­ற­தாக பொதுப் பய­னீட்­டுக் கழ­கம் தெரி­வித்­துள்­ளது. பாசிர் பாஞ்­சாங் மற்­றும் காமல்­வெல்த் டிரைவ் பகு­தி­களில் உள்ள வடி­கால்­களும் கால்­வாய்­களும் காலை 8.20 மணி­ய­ள­வில் 90 விழுக்­காடு நிரம்­பி­ய­தைக் காட்­டும் படங்­கள் சமூக ஊட­கங்­களில் காணப்­பட்­டன.

அதே­நே­ரம், ஜாலான் பூன் லே மற்­றும் கிள­மெண்டி ரோடு ஆகி­ய­வற்­றின் கால்­வாய்­க­ளி­லும் காலை 8.30 மணி­ய­ள­வில் 90 விழுக்­காட்­டுக்­கும் மேல் நீர் நிரம்பி ஓடி­யது.

அதே­போல தேசிய தொடக்­கக் கல்­லூரி அரு­கில் உள்ள ஹில்­கி­ரெஸ்ட் ரோடு, சைம் டார்பி சென்­டர் அரு­கில் உள்ள டன்னர்ன் ரோடு ஆகிய பகு­தி­க­ளின் கால்­வாய்­களும் 90 விழுக்­காட்­டுக்­கும் மேல் நிரம்­பின.

முன்­ன­தாக, காலை 8.30 மணி முதல் 10.30 மணி வரை சிங்­கப்­பூ­ரின் பல பகு­தி­களில் கன­மழை பெய்­யும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தா­க­வும் இதன் கார­ண­மாக பல பகு­தி­களில் திடீர் வெள்­ளம் ஏற்­ப­ட­லாம் என்­றும் கழ­கம் தெரி­வித்து இருந்­தது.

அதே­போல சிங்­கப்­பூர் வானிலை ஆய்­வ­க­மும் இந்த மாதத்­தின் எஞ்­சிய நாள்­களில் ஈர­மான வானி­லையே காணப்­படும் என முன்­னு­ரைத்து இருந்­தது.

பெரும்­பா­லான நாள்­களில் பிற்­ப­க­லில் இடி­யு­டன் கூடிய மழை பெய்­யும் என்­றும் சில நாள்­கள் மாலை வரை மழை நீடிக்­கக்­கூ­டும் என்­றும் அது கூறி­யி­ருந்­தது.

இருப்­பி­னும் இந்த மாதத்­தின் முதல் பாதி­யில் காணப்­பட்ட அள­வுக்கு ஈர­மான வானிலை இரண்­டாம் பாதி­யில் இருக்­காது என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தால் சிங்­கப்­பூ­ரின் பெரும்­பா­லான பகு­தி­களில் இந்த மாதத்­திற்­கான ஒட்­டு­மொத்த மழை அளவு சரா­ச­ரிக்­கும் அதி­க­மா­கவே இருக்­கும்.

பெரும்­பா­லான நாள்­களில் அன்­றா­டம் பதி­வா­கும் வெப்­ப­நிலை 24 டிகிரி செல்­சி­ய­சுக்­கும் 33 டிகிரி செல்­சி­ய­சுக்­கும் இடைப்­பட்­ட­தாக இருக்­கும். மேகக்­கூட்­டம் குறைந்த நாள்­களில் வெப்­ப­நிலை 34 டிகிரி செல்­சி­ய­சைத் தொடக்­கூ­டும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!