நீடித்த எரிசக்தி, ரசாயன பூங்காவாக ஜூரோங் தீவு

சிங்­கப்­பூ­ரின் ஜூரோங் தீவு எண்­ணெய் நடு­வம், ஆற்­றல் மற்­றும் ரசா­ய­னப் பூங்­கா­வாக மாற்­றப்­படும். அது நீடித்து இயங்­கும்.

அதன் நிலை­யான தயா­ரிப்­பு­களை உல­க­ அள­வில் ஏற்­று­மதி செய்­யும் என்று வர்த்­தக, தொழில் அமைச்­சர் கான் கிம் யோங் நேற்று தெரி­வித்­தார்.

சிங்­கப்­பூ­ரின் எரி­சக்தி மற்­றும் ரசா­ய­னத் துறை, 2019ஆம் ஆண்­டி­லி­ருந்து நான்கு மடங்கு நிலை­யான பொருட்­க­ளின் உற்­பத்­தியை அதி­க­ரிப்­ப­து­டன், 2050ஆம் ஆண்­ட­ள­வில் குறைந்த கரிம கரை­சல்­களில் இருந்து ஆண்­டுக்கு ஆறு மில்­லி­யன் டன்­னுக்கு மேல் கரிமக் குறைப்பை அடை­வ­தை­யும் இந்­தத் திட்­டம் கரு­து­கிறது.

புக்­கோம் தீவில் உள்ள ஒரு ஷெல் ஆலை­யின் அடிக்­கல் நாட்டு விழா­வில் திரு கான், 'நிலை­யான ஜூரோங் தீவு' திட்­டத்தை அறி­வித்­தார்.

இது கடி­ன­மான பிளாஸ்டிக் கழி­வு­களை மறு­சு­ழற்சி செய்­யக்­கூ­டிய பெட்­ரோ­லிய ரசா­ய­னங்­களுக்­குப் பயன்­ப­டுத்­தப்­படும் எண்­ணெய்­யாக மாற்­றும்.

பைரோ­லி­சிஸ் எண்­ணெய் மேம்­பாட்டு ஆலை, நெதர்லாந்தின் இந்தப் பெரிய எண்­ணெய் நிறு­வ­னத்­துக்கு உல­க­ள­வில் முதல் ஆலை­யாக இருக்­கும். இது 2023ல் உற்­பத்­தி­யைத் தொடங்க உள்­ளது.

இது ஆசி­யா­வி­லேயே மிகப் பெரிய ஆலை­யா­க­வும் ஆண்­டுக்கு 50,000 டன் எண்­ணெய்யை உற்­பத்தி செய்­யும் திறன் கொண்­டது என்­றும் இது சுமார் 7.8 பில்­லி­யன் பிளாஸ்­டிக் பைக­ளின் எடைக்­குச் சமம் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

எரி­சக்தி, ரசா­ய­னத் துறையை நிலைத்­தன்­மையை நோக்கி நகர்த்­து­வ­தற்­கான அர­சாங்­கத் திட்­டங்­களின் ஒரு பகுதி­தான் நீடித்த நிலைத்தன்மையுடன் கூடிய ஜூரோங் தீவுத் திட்­டம் என்று சிங்­கப்­பூர் பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கம் நேற்று தனது அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது.

சிங்­கப்­பூர் பசு­மைத் திட்­டம் 2030ன் பசு­மைப் பொரு­ளா­தா­ரத் தின் ஆதார தூண்களாக முதலில் அறிவிக்கப்பட்ட ஜூரோங் தீவின் நிலைத்தன்மை இலக்கைக் கொண்டுள்ள முதல் திட்டம், ஷெல் ஆலை ஆகும்.

நீண்ட கால இலக்குகளை அடையும் வகையில், 2030க்குள் எரி­சக்தி, ரசா­ய­னத் துறையை அடைய சில இலக்குகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை கூறியுள்ளது.

ஜூரோங் தீவை மாற்றியமைத்து இலக்குகளை அடைவதற்கான முயற்சிகளில் தொழில்துறைக்கு ஆதரவளிக்க, அரசாங்கம் பல உள்கட்டமைப்பு மற்றும் ஆதரவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொரு­ளி­யல் வளர்ச்­சிக் கழ­கம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

பல சிங்­கப்­பூ­ரர்­கள் உட்­பட 27,000க்கும் அதி­க­மா­னோர் பணி­பு­ரி­யும் எரி­சக்தி, ரசா­ய­னத் துறை யானது, குறைந்த கரிம எரி­பொருள், புதுப்­பிக்­கத்­தக்க பொருட்­கள் மற்­றும் நிலை­யான ரசா­ய­னங்­கள் ஆகி­ய­வற்­றின் மாற்றத்தை எதிர் கொண்டு வருவதாகவும் நீடித்த நிலைத்தன்மையுடன் கூடிய ஜூரோங் தீவு திட்­டம் இந்­தத் தொடர்ச்­சி­யான முயற்சி­க­ளின் அடிப்­ப­டை­யில் கட்­ட­மைக்­கப்­படும் என்றும் திரு கான் கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!