பரிவுமிக்க பயணிகள் வாரம் துவக்கம்

பொதுப் போக்­கு­வ­ரத்­துப் பய­ணங்­களை அனைத்­துத் தரப்­பி­ன­ருக்­கும் ஏற்­பு­டை­ய­தாக்­கும் நோக்­கில் முதல்­மு­றை­யாகப் பரி­வு­மிக்க பய­ணி­கள் வாரம் நேற்று அதி­பர் ஹலிமா யாக்­கோப்­பால் தொடங்­கி­வைக்­கப்­பட்­டது. பரி­வு­மிக்க பய­ணக் கலா­சா­ரத்தை மேம்­ப­டுத்­து­வதே இந்த இயக்­கத்­தின் இலக்கு.

பரி­வு­மிக்க பய­ணி­கள் வாரத்­துக்கு ஏற்­பாடு செய்­துள்ள கேரிங் எஸ்ஜி பய­ணி­கள் வழி­ந­டத்­தல் குழு (சிசிஎஸ்சி) கடந்த ஆண்டு ஏப்­ரல் மாதத்­துக்­கும் நவம்­பர் மாதத்­துக்­கும் இடைப்­பட்ட கால­கட்­டத்­தில் ஆய்வு ஒன்றை நடத்­தி­யது. அதில் 2,000க்கும் மேற்­பட்ட பய­ணி­கள் பங்­கெ­டுத்­த­னர்.

இணை­யம் மூலம், கலந்­து­ரை­யா­டல்­க­ளின்­போது நேருக்குநேர் கருத்து கூறுதல் போன்று போன்று பல்­வேறு தளங்­கள் வாயி­லாக ஆய்வு நடத்­தப்­பட்­டது.

பொதுப் போக்­கு­வ­ரத்­தில்

பய­ணம் செய்­யும்­போது உதவி தேவைப்­படும் பய­ணி­யைப் பார்த்­தா­லும் உதவி செய்யத் தயக்­கம் காட்­டக்­கூ­டும் என்று ஆய்­வில் பங்­கெ­டுத்த இளை­யர்­கள் சிலர் தெரி­வித்­த­னர்.

வெளிப்­ப­டை­யாகக் காட்­டா­மல் உதவி செய்­யும் பழக்­கம் இருப்­ப­தா­க­வும் சில இளை­யர்­கள் குறிப்­பிட்­ட­னர்.

அதா­வது, உடற்­கு­றை­யுள்­ளோர் அல்­ல­து கர்ப்­பி­ணிப் பெண்­கள் போன்ற உதவி தேவைப்­படும்

பய­ணி­க­ளைப் பார்த்­தால் தங்­கள் இருக்­கை­க­ளி­லி­ருந்து அமைதியாக எழுந்து அவர்­க­ளுக்கு இடம் கொடுப்­பதை அவர்­கள் சுட்­டி­னர். பேருந்தை நோக்கி பயணி ஓடி வரு­வ­தைப் பார்த்­தால் பேருந்து அங்­கி­ருந்து கிளம்­பி­வி­டா­மல் இருக்க பேருந்தை நிறுத்­து­வ­தற்­கான பொத்­தானை அழுத்­தும் பழக்­கத்­தைக் கொண்­டி­ருப்­ப­தா­க­வும் அவர்­கள் தெரி­வித்­த­னர்.

கண் பார்­வை­யற்ற பய­ணி­கள் சிலர் மற்­ற­வர்­க­ளின் உதவி இல்­லாது பய­ணம் செய்ய விரும்­பு­வதாக ஆய்­வில் தெரி­ய­வந்­தது. இருப்­பி­னும், தங்­கள் பாது­காப்புக் கருதி உதவி நல்­கும் சகப் பய­ணி­க­ளுக்­கும் நடந்து சென்று இருக்­கை­யில் அமர போதிய இடத்­தை­யும் நேரத்­தை­யும் தரு­வோ­ருக்­கும் அவர்­கள் நன்றி தெரி­வித்தனர்.

தங்­க­ளுக்கு உதவி வழங்க மற்ற பய­ணி­கள் முன்­வ­ரும்­போது அதை ஏற்க மறுத்­துள்­ள­தா­க­வும் கண் பார்­வை­யற்ற பய­ணி­கள் கூறி­னர். இதை உதவி செய்ய முன்வந்தவர்கள் தவ­றா­கப் புரிந்­துக்கொள்­ளக்­கூ­டாது என்று அவர்­கள் தெரி­வித்­த­னர்.

பொதுப் போக்­கு­வ­ரத்­துப் பய­ணங்­களை அனை­வ­ருக்­கும் ஏற்­

பு­டை­ய­தாக்­க­வும் அனை­வ­ரை­யும் உள்­ள­டக்­கிய வித­மாக அது இருக்­க­வும் பொது­மக்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்த பரி­வு­மிக்க பய­ணி­கள் வாரத்­தின் ஒரு பகு­தி­யாக, நேற்று முதல் அடுத்த மாதம் 5ஆம் தேதி வரை பல நட­வடிக்­கை­கள் நடத்­தப்­படும்.

"ஓரி­டத்­தி­லி­ருந்து வேறோர் இடத்­துக்­குச் செல்­வது மட்­டும் பய­ண­மா­கி­வி­டாது. சமூ­க­மாக இருந்து எவ்­வாறு பொது இடங்­

க­ளைப் பகிர்ந்­து­கொள்­கி­றோம் என்­பது முக்­கி­யம்.

"ஏற்­பாட்­டுக் குழு, பொதுப் போக்­கு­வ­ரத்துப் பங்­கு­தா­ரர்­க­ளின் முயற்­சி­கள் முக்­கி­யம் என்­ற­போ­தி­லும் சமூ­கத்­து­டன் இணைந்­து செயல்­ப­டு­வ­தன் மூலம் மட்­டுமே புதிய பய­ணக் கலா­சா­ரம் ஒன்றை உரு­வாக்க முடி­யும். அந்­தக் கலா­சா­ரம் மூலம் சக பய­ணி­க­ளுக்­குப் பரிவு காட்­டு­வது வாழ்­வின் ஒரு பகு­தி­யா­கி­வி­டும்," என்று பரி­வு­மிக்க பய­ணி­கள் வார இயக்­கத்­தின் அறி­முக விழா­வில் பேசிய போக்­கு­வரத்து அமைச்­சர் எஸ். ஈஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!