‘சிங்கப்பூரில் அனைத்துச் சமூகத்தினருக்கும் பாதுகாப்பு’

யூதர்­கள் உட்­பட அனைத்­துச் சமூ­கத்­தி­னருக்­கும் பாது­காப்பு வழங்­கு வ­தில் சிங்­கப்­பூர் முன்­னு­ரிமை வழங்­கு­வ­தாக சட்ட, உள்­துறை அமைச்­சர் கா. சண்­மு­கம் தெரி­வித்­துள்­ளார்.

வாட்­டர்லூ ஸ்தி­ரீட்­டில் உள்ள ஜேக்­கப் பல்­லாஸ் நிலை­யத்­தில் சிங்­கப்­பூர் யூதர்­கள் அரும்­பொ­ரு­ள­கத்­தின் திறப்பு விழா­வில் அவர் கலந்­து­கொண்டு பேசி­னார்.

அரும்­பொ­ரு­ள­கத்­தைச் சுற்­றிப் பார்த்த அமைச்­சர் சண்­மு­கம், யூதர்­க­ளின் ஹன்­னுக்கா மெனோரா ஒளி­யூட்­டுச் சடங்­கி­லும் கலந்­து­கொண்­டார்.

சிங்­கப்­பூர் யூதர்­கள் அரும்­

பொ­ரு­ள­கம் நிரந்­தர காட்­சிக்­கூ­ட­மாக அமைக்­கப்­பட்­டுள்­ளது. சிங்­கப்­பூ­ரில் கடந்த 200 ஆண்­டு­க­ளாக வாழ்ந்து வரும் யூதர்­க­ளின் வர­லாற்றை அது காட்­டு­கிறது. சிங்­கப்­பூ­ரில் சிறு­பான்மை இன­மாக யூதர்­கள் இருந்­தா­லும் நாட்­டின் வளர்ச்­சிக்கு அவர்­க­ளது பங்­க­ளிப்பு அளப்­ப­ரி­யது என்று யூதர் நல்­வாழ்வு வாரி­யம் வெளி­யிட்ட இதழ் குறிப்­பட்­டது.

"நீங்­கள் சிங்­கப்­பூ­ரின் ஒரு பகுதி மட்­டு­மல்ல. நீங்­கள் சிங்­கப்­பூ­ரில் செழிப்­பு­டன் வாழ்­கி­றீர்­கள். நீங்­கள் சிங்­கப்­பூ­ரில் செழித்­தோங்க வேண்­டும் என்­பதே எங்­கள் விருப்­பம். நீங்­கள் சிங்­கப்­பூ­ர­ராக இருந்­தா­லும் சரி, இல்­லா­விட்­டா­வும் சரி. சிங்­கப்­பூ­ரில் நீங்­கள் இருந்­தால் நீங்­கள் நல­மாக, சிறப்­பாக வாழ வேண்­டும். நீங்­கள் பாது­காப்­பு­டன் இருப்­பதை உறுதி செய்ய எங்­க­ளால் ஆன அனைத்­தை­யும் நாங்­கள் செய்­வோம்.

"பல நாடு­களில் குறைந்து வரும் பல்­வகை சுதந்­தி­ரங்­களை நீங்­கள் சிங்­கப்­பூ­ரில் அனு­ப­விக்க நாங்­கள் தேவை­யான அனைத்­தும் செய்­வோம்," என்று சிங்­கப்­பூ­ரில் உள்ள யூதர் சமூ­கத்­தி­டம் அமைச்­சர் சண்­மு­கம் தெரி­வித்­தார்.

"சிங்­கப்­பூ­ரில் நாங்­கள் உரு­வாக்­கும் சமு­தா­யத்­தில் பெரும்­பான்மை இனத்­த­வர்­கள், சிறு­பான்மை இனத்­த­வர்­கள் என்ற பேச்­சுக்கே இட­மி­ருக்­காது. நல்­ல­வர்­கள், தீய­வர்­கள் என்ற வித்­தி­யா­சம் மட்­டுமே பார்க்­கப்­படும். சிங்­கப்­பூரில் நல்­ல­வர்­கள் எந்த இனம், மொழி, சம­யம் ஆகி­ய­வற்­றைச் சேர்ந்­த­வர்­

க­ளாக இருந்­தா­லும் தீய­வர்­க­ளை­விட நல­மாக இருப்­பர்," என்று திரு சண்­மு­கம் வலி­யு­றுத்­தி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!