‘த நியூ பேப்பர்’ அச்சுப்பிரதிக்கு விடை கொடுத்து மின்னிலக்கப் பதிப்பிற்கு வரவேற்பு

கிட்­டத்­தட்ட 33 ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக சிங்­கப்­பூர் வாச­கர்­க­ளின் கைகளில் தவழ்ந்த 'த நியூ பேப்­பர்' தனது அச்­சுப் பிரதியை நேற்று முதல் நிறுத்­தி­விட்­டது. அடுத்த வாரம் முதல் தனது இணை­யத்­

த­ளத்­தில் 'த நியூ பேப்­பர்' தொடர்ந்து செய்­தி­களை வெளி­யி­டும்.

'எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட்' நிறுவனம் வாசகர்களின் விருப்பத் திற்கேற்பவும் வேகமாக மாறிவரும் ஊடகச் சூழல் காரணமாகவும் மின்னிலக்க ஊடகத்திற்கு அச்சு ஊடகங்களை உருமாற்றும் வேக மான நடவடிக்கைகளின் ஒரு பகுதி யாக 'த நியூ பேப்பர்' செய்தித் தாளுக்குப் புதிய வடிவம் தரப்படு கிறது. அந்த செய்தித்தாள் நேற்று தனது இறுதி அச்சுப்பிரதியை 'நாளை எப்படி?' என்ற தலைப்பில் வெளியிட்டது. தோ பாயோ எம்ஆர்டி நிலையம் உள்ளிட்ட பல இடங்களில் அந்த செய்தித்தாளை வாங்கிச் செல்ல பலரும் ஆர்வம் காட்டினர்.

இதே­போன்ற இரு வரித் தலைப்பு 1993 அக்­டோ­பர் 9ஆம் தேதி இந்த செய்­தித்­தாள் வெளி யிட்­டதை அதன் ஆசி­ரி­யர் லிம்­ஹான் மிங் நினை­வுப­டுத்தி உள்­ளார். காற்­பந்­துப் போட்டி ஒன்றை வாச­கர்­கள் ஆர்­வத்­து­டன் எதிர்­பார்த்­தி­ருந்­த­தைக் குறிக்க 'இன்­றி­ரவு எப்­படி?' என்று இரண்டே வரி­களை அதன் முதல் பக்­கம் முழு­வ­தும் வெளி­யிட்­டி­ருந்­தது.

"நாளை என்ன நடக்கும் என்று தெரியாத நிலையில் 'அன்றாட அற்புதம்' என எங்களுக்கு நாங் களே சொல்லிக்கொள்வோம். 33 ஆண்டுகளாக இப்படித்தான் நடந் தது," என்றார் அவர்.

1988 ஜூலை 26ஆம் தேதி த நியூ ேபப்­பர் தனது முதல் அச்­சுப் பிர­தியை வெளி­யிட்­டது. அப்­போது முதல் அதன் நீண்­ட­கா­லப் பய­ணத்­தில் பல திருப்­பங்­களையும் ஏற்­றத்­தாழ்­வு­க­ளை­யும் அந்த செய்­தித்­தாள் சந்­தித்து வந்­தி­ருப்­ப­தாக எஸ்­பி­எச் மீடி­யா­வின் ஆங்­கில, மலாய், தமிழ் ஊட­கக் குழு­மத்­தின் தலைமை ஆசி­ரி­ய­ரும் 'ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்ஸ்' ஆசி­ரியருமான திரு வாரன் ஃபெர்னாண்­டஸ் தெரி­வித்­துள்­ளார். அந்­தப் பய­ணத்­தின் தொடர்ச்­சி­யாக தற்­போது மின்­னி­லக்­கப் பாதை­யில் இது அடி­யெ­டுத்து வைப்­ப­ தா­கக் கூறிய அவர், இந்­தப் பய­ணம் தொட­ரும் என்­றும் காலத்­திற்கு ஏற்ற, புதிய அணு­கு­மு­றை­களை இது கடைப்­பி­டிக்­கும் என்­றும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

இதற்கிடையே, மின்னிலக்க உலகில் வாசகர்களின் எதிர்பார்ப்பு களைப் பூர்த்தி செய்யும் வகையில் இதன் மின்னிலக்கப் பயணம் அமை யும் என ஸ்­பி­எச் மீடி­யா­வின் ஆங் கில, மலாய், தமிழ் ஊட­கக் குழு­ம மின்னிலக்கப் பிரிவுத் தலைவர் யூஜின் லியோ கூறியுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!