விருது பெற்றுத்தந்த கொரோனா சூழல் அனுபவங்கள்

இர்­‌‌‌‌‌ஷாத் முஹம்­மது

தொற்­று­நோய்ப் பர­வல் சூழ­லில் வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கு­வி­டு­தி­யில் முடங்கி இருந்த உற­வி­னர் அனு­ப­வித்த சிர­மங்­கள் 52 வயது திரு­மதி தமிழ்ச்­செல்வி இரா­ஜ­ரா­ஜனை மிக­வும் வேத­னைப்படுத்­தி­யது. அந்த வேதனை சிறு­கதை கரு­வா­னது. தமிழ்ச்செல்­வி­யின் வேத­னைக்கு ஒரு வடி­கா­லான 'சன்­னல்' சிறு­கதை இவ்­வாண்­டின் 'தங்­க­முனை' விரு­துப் போட்­டி­யின் தமிழ்ச் சிறு­க­தைப் பிரி­வில் முதல் பரிசை வென்­றது.

சமூக அமைப்­பு­கள் நடத்­தும் நிகழ்ச்­சி­கள், பயி­ல­ரங்­கு­கள், போட்­டி­கள் மூலம் 2014ஆம் ஆண்டு முதல் எழுத்­து­ல­கில் முனைப்­பு­டன் ஈடு­பட்டு வரும் இல்­லத்­த­ர­சி­யான திரு­மதி தமிழ்ச்­செல்வி பல சிறு­

க­தை­கள் எழு­தி­யுள்­ளார்.

ஈராண்­டு­க­ளுக்கு ஒரு­முறை நடை­பெ­றும் தேசிய இலக்­கி­யப் போட்­டி­யான 'தங்­க­முனை' போட்­டி­யி­லும் பல­முறை பங்­கேற்­றுள்­ளார். முதன்­மு­றை­யாக பரிசு பெற்­ற­தில், அது­வும் முதல் பரிசு பெற்­ற­தில் திரு­மதி தமிழ்ச்­செல்­விக்கு மட்­டற்ற மகிழ்ச்சி.

"என் இரட்­டைப் பிள்­ளை­க­ளான மக­னுக்­கும் மக­ளுக்­கும் 25 வயது ஆகிறது. கடந்த சில ஆண்­டு­

க­ளாகப் பல அமைப்­பு­க­ளின் இலக்­கி­யக் கூடல்­களில் பங்­கேற்று என் எழுத்­துத்திறனை மேம்­ப­டுத்­திக் கொள்ள முடி­கிறது," என்­றார் அவர்.

சிங்­கப்­பூர்த் தமிழ் எழுத்­தா­ளர் கழ­கம், தங்­க­மீன் இலக்­கிய வட்­டம் உள்­ளிட்ட அமைப்­பு­கள் வழங்­கிய தளங்­கள் வாசிப்பை விரி­வாக்­க­வும் எழுத்­தாற்­றலை வளர்ப்­ப­தற்­கும் உறு­து­ணை­யாக இருப்­ப­தாக திரு­மதி தமிழ்ச்­செல்வி குறிப்­பிட்­டார்.

அதே கருத்தை பல விரு­தா­ளர்­களும் வழி­மொ­ழிந்­த­னர்.

சிங்­கப்­பூ­ரில் படைப்­பி­லக்­கி­யத்தை ஊக்­கு­வித்து வளர்க்­கும் நோக்­கத்­தில் வள­ரும் எழுத்­தா­ளர்­க­ளுக்­காக சிறு­கதை, கவிதை ஆகிய இரு பிரி­வு­களில் ஆங்­கி­லம், தமிழ், சீனம், மலாய் ஆகிய சிங்­கப்­பூ­ரின் நான்கு அதி­கா­ரத்­துவ மொழி­க­ளி­லும் ஈராண்­டு­க­ளுக்கு ஒரு­முறை 'தங்­க­முனை' விரு­துப் போட்டி நடத்­தப்­பட்டு வரு­கிறது. 15வது முறை­யாக நடை­பெற்ற இந்தப் போட்­டி­யில் ஒன்­பது வயது முதல் 89 வயது வரை­யி­லா­னோர் பங்­கெ­டுத்­த­னர். மொத்­தம் 2,000 படைப்­பு­கள் போட்டிக்கு கிடைக்கப்பெற்றன.

இளை­யர்­க­ளின் பங்­கெ­டுப்பு அதி­க­ரித்­துள்­ள­தா­க­வும் போட்­டி­யில் பங்­கெ­டுத்­த­வர்­களில் கிட்­டத்­தட்ட பாதிப் பேர், 30 வய­தும் அதற்­கும் குறைந்த கீழ் வய­து­டை­ய­வர்­கள் என்­றும் ஏற்­பாட்­டா­ளர்­கள் தெரி­வித்­த­னர். இந்த ஆண்டு மொத்­தம் 38 பேர் பரிசு பெற்­ற­னர்.

தமிழ்க் கவி­தைப் பிரி­வில் முதல் பரிசை 41 வயது திரு­மதி பானு சுரே‌ஷ் வென்­றுள்­ளார்.

"நோய்­மை­யின் மகிழ்ச்சி மற்­றும் மீள்­த­லின் துய­ரம்" எனும் தலைப்­பி­லான கவி­தைக்­கும் இதர கவிதை ­க­ளுக்­கும் அவ­ருக்­குப் பரிசு கிடைத்­துள்­ளது.

மேடை நாட­கம், கவிதை, கதை, கட்­டுரை, சிறு­கதை எனப் பல­

து­றை­க­ளி­லும் ஈடு­பட்டு வரும் திரு­மதி பானு, தமது கலைப் பய­ணத்­துக்­குக் கிடைத்­துள்ள அங்­கீ­கா­ர­மாக இந்த விரு­தைக் கரு­து­கி­றார்.

"பார­தி­யார் பிறந்­த­நாள் அன்று விருது வழங்­கப்­ப­டு­வது கூடு­தல் மகிழ்ச்சி," என்ற திரு­மதி பானு, மேடை நாட­கக் கலை­ஞ­ரான தந்தை தான் தமக்கு முன்­னோடி என்­றார்.

"பெற்­றோ­ரும் கண­வ­ரும் அளித்­து­வ­ரும் ஊக்­க­மும் உற்­சா­க­முமே கலை, இலக்­கி­யத் துறை­களில் தொடர்ந்து ஈடு­பட உந்­து­சக்­தி­யாக உள்­ளது," என்­றார் இரு பிள்­ளை

­க­ளுக்­குத் தாயான கலை, பண்­பாடு சார்ந்த பயிற்­று­விப்­பா­ள­ரா­கப் பணி­பு­ரி­யும் திரு­மதி பானு.

தமிழ் முரசு, தேசிய கலை­கள் மன்­றம் இணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்த 'விசை' பயி­ல­ரங்­கில் பங்­கெ­டுத்­துள்ள பானு, இந்த ஆண்டு தேசிய கவிதை விழா நடத்­திய போட்­டி­யில் சமூ­கம் எனும் அங்­கத்­தில் முதல் பரிசு வென்­றார்.

ஆங்­கி­லச் சிறு­க­தைப் பிரி­வில் 35 வயது திவ்யா கோவிந்­த­

ரா­ஜனின் 'ஹேண்ட்­ரைட்­டிங்' (Handwriting) எனும் சிறு­கதை முதல் பரி­சைப் பெற்­றுள்ளது.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் பொறி­யி­யல் துறை­யில் பயில இந்­தி­யா­வி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு 2003ல் வந்த திருமதி திவ்யா, கொவிட்-19 நோய்ப் பர­வல் சூழ­லில் வீட்­டில் இருந்த கால­கட்­டத்­தில் பொழு­து­போக்­காக எழு­தத் தொடங்­கி­னார்.

"தனிப்­பட்ட அனு­ப­வங்­களை வைத்து எழு­து­வோமே என்று ஆரம்­பித்­தேன். போட்­டியை மன­தில் வைத்­துக்­கொண்டு எழு­த­வில்லை. பின்­னர் போட்டி பற்றி அறிய வந்­த­போது அனுப்­பி­வைத்­தேன். ஆனால், பரிசு பெறு­வேன் என்று எதிர்­பார்க்­க­வில்லை," என்று ஆச்­ச­ரி­யத்­தைப் பகிர்ந்­தார் திருமதி திவ்யா.

இந்த விருது மூலம் ஆர்­வ­மும் உற்­சா­க­மும் மேலும் கிடைத்­துள்­ளது என்று கூறினார் விநி­யோ­கத் துறை சார்ந்த பன்­னாட்டு நிறு­வ­னத்­தில் மூத்த இயக்­கு­ந­ரா­கப் பணி­யாற்­றும் திவ்யா. தமி­ழில் எழு­த­வும் இவர் விருப்­பம் கொண்­டுள்­ளார்.

நேற்று நடை­பெற்ற விருது வழங்கும் விழாவில் அனைத்­துப் பிரிவு­க­ளி­லும் பரி­சு­கள் வழங்­கப்­பட்டன. முதல் பரி­சுக்கு $7,000 ரொக்­க­மும் சான்­றி­த­ழும் கேட­ய­மும் அளிக்கப்பட்டது. இரண்­டாம் பரி­சுக்கு $5,000 ரொக்­கமும், சான்­றி­த­ழும்; மூன்­றாம் பரி­சுக்கு $3,000 ரொக்­க­மும் சான்­றி­த­ழும்; 'கௌரவ குறிப்­பி­டல்' எனும் ஆறு­தல் பரிசுக்கு $500 ரொக்­கமும் வழங்­கப்­பட்­டன.

தமி­ழா­சி­ரி­ய­ரான 36 வயது திரு கூத்­த­பெ­ரு­மாள் சர­வ­ண­பெ­ரு­மாள், கவி­தைப் போட்­டி­யில் இரண்­டாம் பரிசை வென்­றார்.

'திசைக்­க­ழுத்து' மற்­றும் இதர கவி­தை­க­ளுக்­காக கிடைத்த அந்­தப் பரிசு பற்றி கூறு­கை­யில், "என் கவி­தைக்கு மட்­டு­மல்ல, இது மொழிக்­குக் கிடைத்­துள்ள அங்­கீ­கா­ரம்," என்­றார் அவர்.

"பரந்த வாசிப்பு தேவை. நிறைய வாசித்­தால்­தான் நல்ல கவி­தை­களை எழுத முடி­யும். இயல்­பாக கவி­தை­யில் ஆர்­வம் அதி­கம் உள்­ள­தால் கவி­தைப் போட்­டி­யில் பங்­கெ­டுத்­தேன்," என்­றார் அவர்.

"கவி­மாலை போன்ற அமைப்­பு­கள் நல்ல தளத்தை வழங்­கின. பல போட்­டி­களில் கலந்­து­கொண்­டி­ருக்­கி­றேன். எனி­னும், இந்த தேசிய போட்­டி­யில் வெற்றி பெற்­றது மகிழ்ச்­சி­யைத் தரு­கிறது," என்­றார் அவர்.

சிறு­க­தைப் பிரி­வில் இரண்­டாம் பரிசு பெற்ற ஹேம­லதா வர­லாற்­றுக் கதையை எழு­தி­ய­தா­கத் தெரி­வித்­தார். 2019ஆம் ஆண்­டி­லும் 'தங்­க­முனை' போட்­டி­யின் தமிழ்ச் சிறு­க­தைப் பிரி­வில் இரண்­டாம் பரிசை அவர் வென்­றுள்­ளார்.

அதே ஆண்டு அவ­ரது 'வாழை மர நோட்டு' எனும் நூல் சிங்­கப்­பூர், தமிழ் கட்­டுரை நூல் பிரி­வில் புத்­தக மன்­றத்­தின் இலக்­கி­யப் பரிசை வென்­றது. இவ்­வாண்டு 'தங்­க­முனை' போட்­டி­யின் தமிழ்க் கவி­தைப் பிரி­வில் இவ­ருக்கு 'கௌரவ குறிப்­பி­டல்' பரிசு கிடைத்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

போட்­டிக்கு அனுப்­பி­வைக்­கப்­பட்ட கவி­தை­கள் தரம் வாய்ந்­த­வை­யாக இருந்­தன என்­றும் படைப்­பா­ளர்­கள் முயற்சி எடுத்து எழு­தி­யி­ருப்­பது தெரிந்­தது என்­றும் கூறி­னார் தமிழ்க் கவி­தைப் பிரி­வுக்கு நடுவராக இருந்த மூவ­ரில் ஒரு­வ­ரான கவி­ஞர் நெப்­போ­லி­யன். திரு சித்­து­ராஜ் பொன்­ராஜ், திரு­வாட்டி கீதா சுகு­மா­றன் ஆகி­யோர் இதர இரு­வர். தமிழ்ச் சிறு­க­தைப் பிரி­வுக்கு முனை­வர் ஆ.ர.சிவ­

கு­மார், திரு­மதி சித்ரா ரமே‌ஷ், திரு சு.வேணு­கோ­பால் ஆகி­யோர் நடுவர்களாகப் பணி­யாற்­றி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!