28 ஆண்டுகளாக செயல்பட்ட ஜாமியா சிறுவர் இல்லம் மூடல்

சிங்­கப்­பூ­ரில் கடந்த 28 ஆண்­டு ­க­ளா­கச் செயல்­பட்ட ஜாமியா சிறு­வர் இல்­லம், இம்­மா­தம் 14ஆம் தேதி மூடப்­பட்­டது.

பெற்­றோ­ரால் கைவி­டப்­பட்ட அல்­லது புறக்­க­ணிக்­கப்­பட்ட குழந்­தை­கள், வசதி குறைந்த குடும்­பங்­க­ளின் குழந்­தை­கள் மற்­றும் துன்­பு­றுத்­தப்­பட்ட குழந்­தை­க­ளுக்கு அந்த இல்­லம் புக­லி­ட­மாக இருந்து வந்­தது.

"தற்­போது சமூ­கத்­தின் தேவை மாறி­யி­ருக்­கிறது. தேசிய அள­வி­லும் மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது. அதற்கு ஏற்ப கொள்­கை­க­ளை­யும் நடை­மு­றை­க­ளை­யும் புகுத்த வேண்­டி­யது அவ­சி­யம்," என்று நேற்று ஊட­கங்­க­ளுக்கு வெளி­யிடப்பட்ட அறிக்கை தெரி­வித்­தது.

இது­வரை சிறு­வர் இல்­லத்­தைப் பரா­ம­ரிப்­ப­தற்­காக பயன்­ப­டுத்­தப்­பட்ட வளங்­க­ளை­யெல்­லாம் மேம்­ப­டுத்­து­ வதால் குடும்­பத்­தோடு உள்ள குழந்தை­க­ளுக்­கும் கைவி­டப்­பட்ட மற்­றும் ஒற்­றைப் பெற்­றோர் குழந்தை­ க­ளுக்­கும் உதவ முடி­யும் என்று அது கூறி­யது.

"ஜாமியா இல்­லம் மூடப்­பட்­டதைத் தொடர்ந்து அதற்கு ஈடாக பல்­வேறு வலு­வான சமூக உத­வித் திட்­டங்­களை எதிர்­பார்க்­க­லாம். கல்வி ஆத­ரவு வழங்­கப்­படும். இது, குழந்­தை­க­ளுக்கு மட்­டு­மல்­லா­மல் குடும்­பங்­க­ளுக்­கும் பல­ன­ளிக்­கும்," என்று அறிக்கை சொன்னது.

குலி­மார்ட் கிர­செண்­டில் செயல்­பட்டு வந்த ஜாமியா சிறு­வர் இல்­லத்தை சமூக சேவை அமைப்­பான ஜாமியா சிங்­கப்­பூர் நடத்தி வந்­தது.

மழ­லை­யர் பள்­ளி­கள், மாண­வர் பரா­ம­ரிப்பு நிலை­யங்­கள், தாதிமை இல்­லங்­கள் ஆகி­ய­வற்­றை­யும் ஜாமியா சிங்­கப்­பூர் தொடர்ந்து நடத்தி வரு­கிறது.

கடந்த 1993ஆம் ஆண்­டில் ஜாமியா சிறு­வர் இல்­லம் தொடங்கப் ­பட்­டது. அது, ஆறு முதல் 18 வயது வரை­யி­லான நூறு குழந்­தை­க­ளுக்கு அடைக்கலம் அளித்தது.

ஜாமியா சிறு­வர் இல்­லம் மூடப்­பட்­டது குறித்து கருத்து தெரி­விக்க ஜாமியா சிங்­கப்­பூர் மறுத்­து­விட்­டது.

இதற்­கி­டையே இல்­லத்­தில் வசித்துவந்த குழந்­தை­க­ளுக்­கான பரா­ம­ரிப்பை உறுதி செய்ய அத­னு­டன் நெருக்­க­மா­கச் செயல்­பட்டு வரு­கி­றோம் என்று சமு­தாய, குடும்ப மேம்­பாட்டு அமைச்­சின் பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

"சமூ­கத்­தின் இதர தேவை­களில் கவ­னம் செலுத்­து­வ­தற்­காக ஜாமியா சிறு­வர் இல்­லத்தை மூட ஜாமியா சிங்­கப்­பூர் முடிவு செய்­தது.

"குடும்­பங்­களில் வளர்ப்­புப் பிள்­ளை­க­ளாக குழந்­தை­கள் வளர்ந்­து­ வ­ரு­வ­தால் இல்­லத்­திற்கு வெளியே அவர்­க­ளுக்கு பரா­ம­ரிப்பு தேவைப்­ ப­டு­கிறது.

"பரா­ம­ரிப்­புத் துறை­யில் ஏற்­பட்­டுள்ள இந்த மாற்­றங்­க­ளுக்கு ஏற்ப ஜாமியா சிங்­கப்­பூ­ரின் நோக்­க­மும் மாறி­யி­ருக்­கிறது. இதற்கு அமைச்சு ஆத­ர­வாக இருக்­கும்," என்று அந்­தப் பேச்­சா­ளர் மேலும் தெரி­வித்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!