சிறாருக்குத் தடுப்பூசி போட தயாராகும் புதிய நிலையங்கள்

சிறாருக்குத் தடுப்பூசி போட தயாராகும் புதிய நிலையங்கள்

1 mins read
443b37b9-ef07-45f8-bb2f-c38d4f142b81
புதிய சிறார் தடுப்பூசி நிலையத்தை நேரில் சென்று பார்வையிட்ட சுகாதார அமைச்சர் ஓங் யி காங். படம்: ஓங் யி காங் ஃபேஸ்புக் -

சிங்­கப்­பூ­ரில் 5 வய­துக்­கும் 11 வய­துக்­கும் இடைப்­பட்ட சிறா­ருக்­குத் தடுப்­பூசி போடும் திட்­டம் இம்­மா­தம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­

ப­டு­கிறது. இதனை முன்­னிட்டு சிறார் தடுப்­பூசி நிலை­யங்­கள் அமைக்­கப்­ப­டு­கின்­றன.

புதி­தாக அமைக்­கப்­பட்ட சிறார் தடுப்­பூசி நிலை­யத்தை நேரில் சென்று பார்­வை­யிட்­ட­தாக சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று முன்தினம் பதி­விட்­டார்.

அந்­தத் தடுப்­பூசி நிலை­யம் சிறா­ருக்கு மிக­வும் பிடித்­த­மான 'சூப்­பர் ஹீரோ'க்­க­ளைக் கொண்ட ஒட்­டு­வில்­லை­க­ளால் அலங்­க­ரிக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் தெரி­வித்­தார்.

ஒரு­நா­ளில் 1,000 சிறு­வர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடும் வசதியைப் புதிய நிலை­யம் கொண்­டி­ருப்­ப­தாக அவர் கூறி­னார்.

மின்­மெட் குழு­மத்­தின்­கீழ் இந்த நிலை­யம் இயங்­கு­கிறது. இம்­மா­தத்­தின் பிற்­ப­கு­தி­யில் சிறா­ருக்­குத் தடுப்­பூசி போடும் பணி­யைத் தொடங்க புதிய நிலை­யம் தயா­ராகி வரு­கிறது.

தடுப்பூசி போட்­டுக்­கொள்ள வரும் சிறு­வர்­க­ளு­டன் அவர்­

க­ளது பெற்­றோரும் கூடவரலாம். என்­றார் அமைச்­சர் ஓங். புதிய நிலை­யங்­களில் நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஊழி­யர்­கள் சிறு­வர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடு­வ­தில் சிறப்­புப் பயிற்சி மேற்­கொண்­ட­வர்­கள்.

ஒவ்­வொரு சிறார் தடுப்­பூசி நிலை­யத்­துக்­கும் சிறார் மருத்­துவ நிபு­ணர்­கள் ஆத­ர­வ­ளிப்­பர்.