கொவிட்-19 தொற்றியபோதும் நிதானம் காத்து சாதித்த ஃபாத்திமா

கி. ஜனார்த்­த­னன்

நிதா­னத்­தைக் கடைப்­பி­டிக்க வேண்­டும் என்று தனக்கு ஏற்­பட்ட நெருக்­கடி தரு­ணங்­க­ளைப் பாடங்­க­ளாக கொண்ட 16 வயது சங்­காட் சாங்கி உயர்­நி­லைப் பள்ளி மாணவி ஃபாத்திமா சாயிமா (படம்), பின்­னா­ளில் பிற­ருக்கு உத­விக்­க­ரம் நீட்­டும் தன்­னம்­பிக்கை நிறைந்த மாண­வத் தலை­வ­ராக மாறி­னார்.

குடும்­பத்­தில் நிதி நெருக்­கடி, கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிப்பு எனப் பிரச்­சி­னை­கள் தனது வாழ்க்­கை­யில் ஏற்­பட்­ட­போ­தும் நேற்று கிடைத்த தமது வழக்­க­நிலைத் தேர்வு முடி­வு­கள் தனக்கு மகிழ்ச்சி அளிப்­ப­தாக உள்­ளது என்­றார் ஃபாத்திமா.

ரசா­ய­னம், நில­வி­யல், சமூ­கக் கல்வி ஆகிய பாடங்­களில் இயல்­பா­கவே சிறந்த தேர்ச்சி பெற்று வந்த ஃபாத்திமா, ஆங்­கி­லம், கணி­தப் பாடங்­களில் கூடு­தல் முயற்சி எடுக்க வேண்டி இருந்­தது.

இக்­கு­றிப்­பிட்ட பாடங்­களில் சலிப்­புத் தட்­டா­மல் இருக்க, நண்­பர்­க­ளு­டன் சேர்ந்து படித்­த­தா­க­வும் கவ­னம் செலுத்த இசை­யைக் கேட்­டுக்­கொண்டே படித்­த­தா­க­வும் ஃபாத்திமா கூறி­னார்.

"படிக்­கும் நேரத்­தில் குழப்­ப­மும் சந்­தே­க­மும் ஏற்­ப­டும்­போது பத­றாமல் இருப்­பது முக்­கி­யம்," என்று அவர் கூறி­னார். ஃபாத்திமா 2016ஆம் ஆண்டு தொடக்­கப்­பள்­ளி­யில் இருந்­த­போது விமா­னத்­துறை­யில் பணி­பு­ரிந்த அவ­ரின் தந்தை வேலை­யி­லி­ருந்து ஓய்வு பெற்­றார்.

ஃபாத்தி­மா­வின் தாயார் இல்­லத்­த­ரசி என்­ப­தால் பெற்­றோர் இரு­வ­ரும் அந்­நே­ரத்­தில் முழு­நேர வேலை ஏதும் இல்­லா­மல் போனது குடும்­பத்­தின் நிதி நிலை­மையை மோச­மாக்­கி­யது. ஆயி­னும், அதே பெற்­றோ­ரின் அன்­பும், புரிந்­து­ணர்­வும் அவர்­க­ளின் வீட்­டைப் பதற்­ற­மில்­லாத சூழ­லாக வைத்­தி­ருந்­தது.

"அதி­க­மான பொருள்­களை வாங்­க­வேண்­டும் என்ற ஆசையை வளர்த்­துக்­கொள்­ளா­மல் கட்­டுப்­பாடு­டன் வாழப் பழ­கிக்­கொண்­டேன். நெருக்­கடி காலத்­தில் அமைதி காக்­கும் பண்­பைப் பெற்­றோர் வழி கற்­றுக்­கொண்­டேன்," என்­றார் இரண்டு மூத்த சகோ­த­ரர்­க­ளைக் கொண்ட ஃபாத்திமா.

உயர்­நிலை ஒன்­றில் படித்­த­போது வகுப்பு நண்­பர்­க­ளின் முன்­னால் நின்று பேச இய­லா­மல் பல நேரங்­களில் தயங்­கிய ஃபாத்திமா, படிப்­படி­யாக தமது பேச்­சாற்­ற­லை­யும் படைப்­பாற்­ற­லை­யும் வளர்த்­துக்­கொண்­டார்.

"வகுப்­பில் உரை­யாற்ற வாய்ப்­புக் கிடைக்­கும்­போ­தெல்­லாம் அத­னைப் பயன்­ப­டுத்­திக்­கொண்டு பேச முன்­வந்­தேன். காலப்­போக்­கில் எனது அச்­ச­மும் படிப்­ப­டி­யா­கக் குறைந்­தது," என்று கூறி­னார்.

ஃபாத்தி­மா­வின் பொறுப்­பு­ணர்வு, பிற­ருக்கு உத­வும் மனப்­பான்மை ஆகி­ய­வற்­றைக் கண்டு சார­ணி­யர் அமைப்­பில் 'மூத்த கண்­கா­ணிப்­புத் தலை­வர்' பொறுப்பை அவ­ருக்­குத் தந்­த­தாக அவ­ரின் ஆசி­ரி­யர் சித்தி ஸுபைடா பிந்தி இஸ்­மைல், 44, தெரி­வித்­தார். தமிழ்­மொ­ழிப் பாடத்­தில் சாதா­ரண நிலைத் தேர்வை இவ்­வாண்டு நவம்­பர் 10ஆம் தேதி­யன்று எழு­திய ஃபாத்தி­மா­வுக்கு, அதற்­குச் சில வாரங்­கள் முன்­பு­தான் கொவிட்-19 கிரு­மித்­தொற்று இருப்­பது உறு­தி­ ஆனது.

"அக்­டோ­பர் 18ஆம் தேதி என் தந்­தைக்­குக் கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டது. மறு­நாள் எனக்­கும் கொவிட்-19 தொற்­றி­யுள்­ளதை ஏஆர்டி பரி­சோ­தனை மூலம் உறுதி­ ஆ­னது," என்று கூறி­னார்.

கிருமி தொற்­றி­யது தனக்­குள் அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­ய­போ­தும் அமை­தி­யாக அடுத்த கட்ட நட­வடிக்கை என்ன என்­ப­தையே தமது எண்­ண­மாக்­கிக்­கொண்­ட­தாக அவர் கூறி­னார். பல­து­றைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் பயி­லத் திட்­ட­மி­டும் ஃபாத்திமா, வருங்­கா­லத்­தில் ரசா­ய­னப் பொறி­யா­ள­ராக பணி­யாற்ற ஆசைப்­ப­டு­கி­றார்.

"சரி­யா­கத் திட்­ட­மிட்­டுப் படித்­தால் பதற்­றம் குறை­யும். தேவைப்­படும்­போது உதவி கேட்­கக் தயங்­கக்­கூ­டாது. நிதா­னம் நிச்­ச­யம் வெற்­றி­யைத் தரும்," என்­பதே மாண­வர்­க­ளுக்கு இவர் கூறும் அறி­வு­ரை­யா­கும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!