இசை மூலம் இறைவனை கொண்டாடும் தொண்டூழியர் ஜெரெமையா

புத்­தாக்­கத்தை அர­வ­ணைத்து, சவால்­களை எதிர்­கொண்டு வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க நிகழ்­வில் முக்­கிய அங்­கம் வகித்த மன­நி­றை­வில் இவ்­வாண்டு கிறிஸ்­மஸ் பண்­டி­கையை வர­வேற்­கி­றார் 36 வயது திரு ஜோசப் ஜெரெ­மையா விஜ­ய­சே­கர்.

இசை­ய­மைப்­ப­தில் அதீத ஆர்­வம் உள்ள இவர், சிங்­கப்­பூ­ரில் கத்­தோ­லிக்­கத்­தின் 200வது ஆண்டு நிறைவு விழா கொண்­டாட்­டங்­க­ளுக்கு இசை அமைத்துள்­ளார்.

முழு­நேர விற்­ப­னை­யா­ள­ராக பணி­யாற்­றும் இவர், ஆர்ச்­சர்ட்­டில் உள்ள உயிர்த்­தெ­ழுந்த கிறிஸ்­து­வின் தேவா­ல­யத்­தில் கடந்த 15 ஆண்­டு­க­ளுக்கு மேல் தொண்­டூழி­ய­ரா­கச் சேவை ஆற்றி வரு­கிறார்.

கடந்த ஆண்டு டிசம்­பர் மாதம் முதல் இந்த ஆண்டு டிசம்­பர் மாதம் வரை, 'சிங்­கப்­பூர் உயர் மறை­மாவட்ட தமிழ் ஆணை­யம்' ஒவ்­வொரு வார இறு­தி­யி­லும், யூடி­யூப் தளத்­தில் நேர­டிக் காணொ­ளி­களை வெளி­யிட்டு வரு­கிறது.

அதற்­காக மற்ற சிங்­கப்­பூர் மற்­றும் உல­க­ளா­விய கலை­ஞர்­க­ளு­டன் இணைந்து ஜெரெ­மையா பல பாடல்­களை இயற்றி உள்­ளார்.

"இந்த கொவிட்-19 பர­வ­லால் நிகழ்ச்­சி­க­ளுக்­குத் தயா­ராக மிக­வும் சவா­லா­கத்­தான் இருந்­தது. ஆனால், தொழில்­நுட்­பத்­தின் உதவி­யு­டன், சிங்­கப்­பூர் மற்­றும் வெளி­நாட்டு இசைக் கலை­ஞர்­க­ளு­டன் இணைந்து சிறப்­பான பாடல்­களை இயற்­றி­யுள்­ளோம்.

"நான் நான்கு பாடல்­களை இயற்றி­யுள்­ளேன். பாடல்­க­ளுக்கு வரி­கள் எழு­தி­ய­வர் திரு ஜான் கென்­னடி. மூன்று மாதங்­க­ளுக்கு இணை­யத்­தின் வழி வெளி­நாட்டு இசைக் கலை­ஞர்­க­ளு­டன் வேலை செய்­தேன். இந்த நிகழ்ச்­சி­யில், 30 பாட­கர்­கள் மற்­றும் 15 இளை­யர்­கள் பங்­கேற்­றுள்­ள­னர்.

"போப் ஜான் பால் 2ன் வரி­களை வைத்து, கொண்­டாட்­டங்­களின் தலைப்பு, நம்­பிக்கை என்ற கருப்­பொ­ருள் ஆகி­ய­வற்றை ஒட்டி பாடல்­க­ளுக்கு இசை அமைத்து உள்­ளேன். இது இந்த கொவிட்-19 சூழ்­நி­லைக்கு ஏற்­ற­வாறு இருக்­கும்," என்று கூறி­னார்.

முன்­ப­திவு செய்த கிறிஸ்­மஸ் சிறப்பு ஆரா­த­னையை கிறிஸ்­மஸ் அன்று, 'சிங்­கப்­பூர் உயர் மறை­மாவட்ட தமிழ் ஆணைய' யூடி­யூப் பக்­கத்­தில் நள்­ளி­ரவு 12 மணிக்கு ஒளி­ப­ரப்­பி­னர்.

ஜெரெ­மையா அதற்குப் பழைய பாட­லின் சங்­கீத வரி­களை மாற்றி அமைத்­துள்­ளார்.

"கிறிஸ்­மஸ் அன்று கொவிட்-19 விதி­மு­றை­க­ளால் ஒன்­று­சேர்ந்து கொண்­டா­டும் நிகழ்ச்­சி­கள் சற்று குறைவு. ஆனால் என்­னால் முடிந்த அளவு முயற்சி செய்து பாடல்­களுக்கு எனது பங்கை ஆற்­றி­யது எனக்கு திருப்­தியை அளிக்­கிறது. மேலும், நான் எனக்­குப் பிடித்­த­மான ஒன்­றைச் செய்­கி­றேன்.

"சில ஆண்­டு­க­ளுக்கு முன், பிர­பல இசை­ய­மைப்­பா­ளர் அனி­ருத் நேரடி இசை நிகழ்ச்­சி­யில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்­தது. இதே­போல்­தான் இளை­யர்­கள் அவர்­க­ளின் மேல் நம்­பிக்கை வைத்து தங்­களுக்கு பிடித்த வேலை­களில் ஈடு­ப­ட­வேண்­டும். அதற்கு என்­றும் தயங்கக்கூடாது," என்று கூறி­னார் திரு ஜெரெ­மையா.

செய்தி: சக்தி மேகனா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!