‘20,000 சிறார்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டது’

கொவிட்-19 தொற்­றி­லி­ருந்து அனைத்து வய­தி­ன­ரை­யும் பாது­காக்­கும் நோக்­கத்­தோடு மற்ற வய­தி­ன­ருக்­கும் தடுப்­பூசி படிப்­ப­டி­யாக விரி­வு­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறது. அந்த வகை­யில் சிறுவர்களுக்குத் தடுப்­பூசி போடும் பணி டிசம்­பர் 27ஆம் தேதி தொடங்­கி­யது.

அப்போதுமுதல் 20,000 சிறுவர் களுக்குத் தடுப்­பூசி போடப்­பட்டு உள்­ள­தாக கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் தெரி­வித்தார்.

தொடக்­க­நிலை 4 முதல் ஆறு வரை பயிலும் பத்து மாண­வர்­களில் ஆறு பேருக்கு மேல் தடுப்­பூ­சிக்கு பதிந்து கொண்­ட­தாகவும் அவர் சொன்னார்.

கல்வி அமைச்­சின் பள்­ளி­களில் படிக்­காத ஒன்­பது முதல் 11 வயது வரை­யி­லான 8,600 சிறுவர்­களும் தடுப்­பூ­சிக்கு முன்­ப­திவு செய்­துள்­ள­னர் என்று மேலும் அவர் தெரிவித்து உள்ளார்.

"பெற்­றோர் ஆத­ர­வி­னால் இது சாத்­தி­ய­மா­னது. பொது­மக்­கள் மற்றும் சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு அதி­கா­ரி­க­ளின் கடின உழைப்­பும் இதற்கு கார­ணம்," என்று அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

"தொடக்­கப்­பள்ளி மாண­வர்­ களின் தடுப்­பூசி விகி­தம் நல்ல எண்­ணிக்­கை­யில் இருந்­தால் நிச்­ச­ய­மாக 2022ஆம் ஆண்டு வழக்­க­மான கல்வி ஆண்­டாக இருக்­கும்.

"வரும் மாதங்­களில் பள்­ளி­களில் வழக்­க­மான நட­வ­டிக்­கை­களைப் பாது­காப்­பாகத் தொடங்­கு­வது குறித்­தும் பரி­சீ­லிக்­க­லாம்," என்­றார் அவர்.

"இன்று மேலும் ஏழு தடுப்­பூசி நிலை­யங்­கள் திறக்­கப்­படும்," என்று தமது ஃேபஸ்­புக் பதி­வில் அமைச்­சர் சான் தெரிவித் திருந்தார். ஏற்­கெ­னவே ஏழு தடுப்­பூசி நிலை­யங்­கள் செயல்­பட்டு வரு­கின்­றன.

ஐந்து வயது முதல் 11 வயது வரையிலான சிறுவர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போட ஃபைசர்-பயோ­என்­டெக் கமிர்னட்டி தடுப்­பூ­சிக்கு மட்­டுமே தற்­போது அங்­கீ­கா­ரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. பெரி­ய­வர்­க­ளுக்­குப் போடப்­படும் தடுப்­பூசி மருந்­தில் மூன்று ஒரு பங்கு சிறுவர்களுக்குப் போடப் ­ப­டு­கிறது.

பெற்­றோர் தங்­க­ளு­டைய குழந்­தை­க­ளுக்கு தடுப்­பூசி போடு­வது குறித்து கேள்­வி­கள் இருந்­தால் கல்வி அமைச்சு ஜன­வரி 5ஆம் தேதி நடத்­தும் கருத்­த­ரங்கில் பங்­கேற்­க­லாம் என்று திரு சான் கூறினார்.

சுகா­தார அமைச்சு, பாலர் பருவ மேம்­பாட்டு அமைப்பு ஆகி­ய­வற்­றின் ஆத­ரவுடன் இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை­யில் https://go.gov.sg/5janvaccinewebinar என்ற இணை­யப்­பக்­கம் வழி­யாக கருத்த­ரங்கு நடைபெறும்.

முத­லில் வரும் 3,000 பேருக்கு மட்­டும் இதில் பங்­கேற்க வாய்ப்பு அளிக்­கப்­படும். இதற்­கான மறைச்­சொல் "5janvac"

இதில் கலந்­து­கொண்டு பெற்­றோர் தங்­கள் சந்­தே­கங்­களைப் போக்­கிக்­கொள்­ள­லாம் என்று அமைச்­சர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!