பெண் பொறியாளராக சாதிக்கத் துடிக்கும் ஏஞ்சல்

சக்தி மேகனா

தனது பள்­ளிப் பரு­வத்­தி­லி­ருந்தே சுற்­றுச்­சூ­ழ­லுக்கு ஏதே­னும் ஒரு வழி­யில் முக்­கி­யப் பங்­க­ளிக்க வேண்­டும் என்ற குறிக்­கோளை ஏஞ்­சல் ஜோசப் செனா கொண்­டி­ருந்­தார். அந்த லட்­சி­யம் நிறை­வே­று­வ­தற்­குச் சரி­யான வாய்ப்பை அமைத்­துத் தந்­தது சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கம்.

அண்­மை­யில் ரசா­ய­னப் பொறி­யியல் துறை­யில் பட்­டம் பெற்­றார் 27 வயது ஏஞ்­சல். தமது பல்­வேறு முயற்­சி­க­ளுக்­குப் பல விரு­து­க­ளை­யும் பெற்­றுள்­ளார்.

சிறு வய­தில், தனது தந்­தை­யைப் போல் ராணு­வத்­தில் பணி­யாற்ற வேண்­டும் என்று கனவு கண்­டார். ஆனால் சுற்­றுச்­சூ­ழ­லின் மீது இருந்த அக்­க­றை­யா­லும் ஆர்­வத்­தா­லும் அவர் சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கத்­தில் ர­சா­ய­னப் பொறி­யி­யல் படிப்பை மேற்­கொள்ள முடி­வெ­டுத்­தார்.

படிப்­பில் மட்­டு­மின்றி இணைப்­பாட நட­வடிக்­கை­க­ளி­லும் அவர் சிறந்து விளங்­கி னார். தன்­னால் பல்­க­லைக்­க­ழ­கத்­திற்­குப் பங்­களிக்க முடி­யும் என்­பதை அவர் பெரி­தும் நம்பி பாடு­பட்­டார்.

பல்­க­லைக்­க­ழ­கத்­தைப் பல்­வேறு நிகழ்வு­களில் பிர­தி­நி­திக்­கும் தூத­ரா­க­வும் முத­லா­மாண்டு மாண­வர்­க­ளுக்கு வழி­காட்­டும் மாண­வத் தலை­வ­ரா­க­வும் ஏஞ்­சல் பொறுப்­பேற்­றி­ருந்­தார். இதற்­காக அவ­ருக்கு 'மாணவர் தலை­வர்' விருது வழங்­கப்­பட்­டது. வேதி­யியல் பொறி­யி­யல் மாண­வர் நிர்­வா­கக் குழு­வின் தலை­வ­ரா­க­வும் இவர் பணி­யாற்றி உள்­ளார்.

கல்வி அமைச்­சர் சான் சுன் சிங் முன்­னி­லை­யில் பல்­க­லைக்­க­ழ­கத் தூதர்­க­ளு­டன் ஏற்­பாடு செய்­யப்­பட்ட கலந்­து­ரை­யா­டலை வழி­ந­டத்­தி­னார்.

"வேலை­யி­டத்­தில் சிறப்­பா­கப் பணி­யாற்ற எத்­த­கைய திறன்­களை வளர்த்­துக்­கொள்ள வேண்­டும் என்­ப­தைக் கலந்­து­ரை­யா­டல் வழி மாண­வர்­கள் கற்­றுக்­கொண்­டார்­கள். இதுவே எங்­களுக்­குக் கிடைத்த மிகப் பெரிய ஒரு வெற்றி­யா­கும்," என்று கூறி­னார் '்சூ சியாவ் பெங்' வெளி­நாட்டு உப­கா­ரச் சம்­ப­ளம் பெற்­றுள்ள ஏஞ்­சல்.

வேலைப் பயிற்­சிக்­காக 'ஏர் லிக்­விட் சிங்­கப்­பூர்' நிறு­வ­னத்­தில் இருந்­த­போது அங்­குள்ள ஹைட்­ர­ஜன் ஆலை­யின் குறிப்­பிட்ட ஓர் அம்­சத்­தின் செயல்­பாட்டை மேம்­ப­டுத்த உத­வி­னார்.

ஆண்­டு­தோ­றும் சிங்­கப்­பூர் ரசா­ய­னத் தொழில்­துறை மன்­றம் ஏற்­பாடு செய்­து­ வ­ரும் 'கெம்­எக்ஸ்' நிகழ்வை ஏஞ்­சல் ஏற்று நடத்­தி­ய­போது, அதி­க­மான நிறு­வ­னங்­கள் அதில் கலந்­து­கொண்­டன.

"பல்­கலைக்­க­ழ­கத்­திற்­கும் நீடித்த நிலைத்­தன்­மைக்­கும் பங்­க­ளிக்­க­வேண்­டும் என்­பதே எனது லட்­சி­யம். என் பெற்­றோர், நண்­பர்­கள், ஆசி­ரி­யர்­கள் ஆகி­யோர் எனக்­குத் துணை­யாக இருக்­கின்­ற­னர்," என்று ஏஞ்­சல் கூறி­னார். தற்­போது 'எச்பி சிங்­கப்­பூர்' நிறு­வ­னத்­தில் செயல்­மு­றைப் பொறி­யா­ள­ராகப் பணி­யாற்­று­கி­றார்.

"இவ்­வி­டத்­தில் ஆண் பொறி­யா­ளர்­களுக்­குச் சம எண்­ணிக்­கை­யில் பெண் பொறி­யா­ளர்­கள் உள்­ள­னர். அதையே ஒரு பெரிய முன்­னேற்­ற­மாக நான் கரு­து­கிறேன். இங்கு நான் குறைந்­தது எட்டு ஆண்டு­களா­வது வேலை செய்ய விரும்­பு­கி­றேன். அப்­போ­து­தான் எனது துறை­யைப் பற்றி நிறைய கற்­றுக்­கொள்ள முடி­யும். கற்­ற­தைக் கொண்டு என்­னால் முடிந்த அள­வுக்கு நீடித்த நிலைத்­தன்­மைக்­குப் பங்­காற்ற முடி­யும் என்று நம்­பு­கி­றேன்," என்று உறு­தி­யா­கக் கூறி­னார் ஏஞ்­சல்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!