பிள்ளைகளுக்கு உதவ பெற்றோருக்கு ஆலோசனை தரும் விருது பெற்ற ஆசிரியர்கள்

பிள்ளைகளை நன்கு புரிந்­து­கொள்­வ­தற்­கும் அவர்­க­ளுக்கு உத­வு வதற்கும் தேவை­யான சில பய­னுள்ள ஆலோ­ச­னை­க­ளைக் கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் 24ஆம் தேதி தலை­சி­றந்த அடித்தளக் கல்வி ஆசி­ரி­யர் விரு­துகள் விழாவில் பாலர் கல்விப் பிரிவில் விருது பெற்ற ஆசி­ரி­யர்­கள் பகிர்ந்துகொண்­ட­னர்.

பெற்­றோர் தங்­கள் பிள்­ளை­க­ளு­டன் நேரம் செல­வ­ழிப்­பது மிக­வும் முக்­கி­யம் என்று பிரே­டல் ஹைட்ஸ் புளோக் 246ல் உள்ள பிசி­எஃப் ஸ்பார்க்­கல்­டோட்ஸ் பாலர் பள்­ளி­யில் ஆசி­ரி­ய­ரா­கப் பணி­பு­ரி­யும் 33 வயது திரு­வாட்டி ஏ. நிஷாந்­தினி நீல­மோ­கன் வலி­யு­றுத்­தி­னார்.

"பெற்­றோர் பலர் வேலை­யில் மூழ்­கி­யி­ருப்­ப­தால் தங்­கள் பிள்­ளை­க­ளு­டன் போதிய நேரம் செல­வ­ழிப்­ப­தில்லை. வேலைக்­குச் செல்­லும் பெற்­றோ­ராக இருந்­தால் ஒரு­நா­ளுக்­குக் குறைந்­தது பத்து நிமி­டங்­க­ளுக்­கா­வது உங்­கள் பிள்­ளை­க­ளு­டன் நேரத்­தைச் செல­வ­ழி­யுங்­கள். அவர்­களை நீங்­கள் பள்­ளிக்கு அனுப்­ப­லாம் அல்­லது பள்ளி முடிந்­த­தும் வீட்­டுக்கு அழைத்­துச் செல்­ல­லாம். இவை சிறு முயற்­சி­க­ளா­கத் தோன்­றி­னா­லும் இவற்­றின் வழி உங்­கள் பிள்­ளை­க­ளு­டன் நேரத்­தைச் செல­வ­ழிக்க இவை வழி­

வ­குக்­கும்," என்­றார் நிஷாந்­தினி.

பிள்­ளை­கள் அடம்­பி­டித்து திடீ­ரெ­னத் தங்­கள் கோபத்தை வெளிப்­ப­டுத்­தி­னால் அதற்­குக் கார­ணம் இருக்­கும் என்­றார் நிஷாந்­தினி.

அதற்­கான கார­ணத்­தைப் பெற்­றோர் தங்­கள் பிள்­ளை­க­ளி­டம் கேட்­டுத் தெரிந்­து­கொள்ள வேண்­டும் என்­றார் அவர். 'அழாதே' அல்­லது 'ஆண் பிள்­ளை­கள் அழக்­கூ­டாது' போன்ற வார்த்­தை­கள் நிலை­மையை மேலும் மோச­மாக்­கக்­கூ­டும் என்­றார் நிஷாந்­தினி.

அதற்­குப் பதி­லாக 'உனக்கு என்ன தேவைப்­ப­டு­கிறது?' அல்­லது 'நான் உனக்கு எவ்­வாறு உதவ முடி­யும்?' போன்ற வார்த்­தை­கள் பெரி­த­ள­வில் உத­வும் என்றார் நிஷாந்தினி.

பிள்­ளை­கள் மீது வைத்­தி­ருக்­கும் அன்பை அவர்­க­ளி­டம் வெளிப்­ப­டுத்த பெற்­றோர் தயங்­கக்­கூ­டாது என்று விருது பெற்ற மற்­றோர் ஆசி­ரி­ய­ரான 47 வயது திரு­வாட்டி சுலோச்­சனா கண­பதி தெரி­வித்­தார். இவர் ராம­கி­ருஷ்ணா மிஷன் சாரதா பாலர் பள்­ளி­யைச் சேர்ந்த ஆசி­ரி­யர்.

பிள்­ளை­க­ளி­டம் பாச­மாக இருந்­தால் அது அவர்­க­ளது வளர்ச்­சிக்­கும் முன்­னேற்­றத்­துக்­கும் வித்­தி­டும் என்று திரு­வாட்டி சுலோச்­சனா உறு­தி­யாக நம்­பு­கி­றார்.

உதா­ர­ணத்­துக்கு, குறிப்­பிட்ட ஒரு விவ­கா­ரம் குறித்து தங்­கள் பிள்ளை பாதிக்­கப்­பட்­டி­ருந்­தால் அவ­ரைத் தனி­யாக அழைத்­துச் சென்று அவ­ரி­டம் முழுக் கவ­னம் செலுத்­த­லாம். இது அப்­பிள்­ளைக்கு உணர்வு ரீதி­யாக உத­வும் என்­றார் சுலோச்­சனா. அந்­தப் பிள்­ளைக்கு ஆறு­தல் தரும் வகை­யில் அவ­ரது முது­கைத் தட்­டிக் கொடுக்­க­லாம் என்­றார் அவர்.

"பிள்­ளை­கள் தங்­கள் பெற்­றோர் கூறும் வார்த்­தை­களை உன்­னிப்­பா­கக் கவ­னித்து, கற்­றுக்­கொள்­கின்­ற­னர். 'இன்று பள்­ளி­யில் என்ன கற்­றுக்­கொண்­டாய்'? என்று கேட்­ப­தற்­குப் பதி­லாக 'பள்­ளி­யில் மகிழ்ச்சி­ யாக இருந்­தாயா?' என்று பெற்­றோர் கேட்­க­லாம்," என்று திரு­வாட்டி சுலோச்­சனா ஆலோ­சனை வழங்­கி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!