‘ஐபி’ உச்சத் தேர்ச்சி: இழப்பை சந்தித்தவர் இலக்கை கைவிடாமல் சாதித்தார்

தக்­‌ஷின்னா பாலு 14 வய­தாக இருந்­த­போது தனது தாயாரை இழந்­தார். அப்­போது அவர் சிங்­கப்­பூர் விளை­யாட்­டுப் பள்­ளி­யில் படித்­துக்­கொண்­டி­ருந்­தார்.

அந்த இருண்ட நாள்­களில் அவ­ருக்­குப் பெரும் ஆறு­த­லாக அவ­ரின் ஆசி­ரி­யர் திரு­மதி டான் ஹுய் நா இருந்­தார்.

பள்­ளி­யில் மாண­வர்­கள் தங்­கும் விடு­தி­யில் இருந்­த­வாறு படித்து வந்த தக்­‌ஷின்னா, தன் தாயார் பிரிந்த துய­ரத்­தால் பாதிக்­கப்­பட்­டதை அறிந்த திரு­மதி டான், அடிக்­கடி தக்­‌ஷின்­னா­வுக்கு ஆலோ­சனை வழங்கி அவ­ரது இழப்­பி­லி­ருந்து மீண்டு வர உத­வி­னார்.

திடல் தடத்­தில் 100, 200 மீட்­டர் ஓட்­டத்­தில் தின­மும் இரண்டு மணி நேரக் கடும் பயிற்­சி­கள் இடம்­பெ­றும், காயங்­களும் ஏற்­படும். அவற்­றில் தயங்­கா­மல் தக்­‌ஷின்னா ஈடு­பட்டு வந்­தார். பள்ளி மாண­வர்­க­ளைக் கொண்ட தலை­மைத்­து­வக் குழு­வில் முக்­கிய உறுப்­பி­ன­ராக இருந்த தக்­‌ஷின்­னா­வுக்கு நட­னத்­தி­லும் மிகுந்த ஆர்­வம் இருந்­தது.

ஏழு முதல் 12 வயது வரை அவர் பர­த­நாட்­டி­ய­மும் கற்­றி­ருந்­தார். மேலும், தனது பள்­ளி­யில் கிட்­டத்­தட்ட 100 மாண­வர்­க­ளுக்கு நட­னமும் கற்­றுத் தந்­துள்­ளார்.

2019ஆம் ஆண்­டில் பள்­ளி­களுக்கு இடை­யே­யான 60வது தேசிய திடல்­த­டப் போட்­டி­களில் அவர் மூன்­றா­வது இடத்­தைப் பிடித்­தார்.

தற்­போது 19 வய­து­டைய தக்­‌ஷின்னா, ‌கடந்த ஆண்­டின் 'இன்­டர்­நே­ஷ­னல் பாக்­க­லோரெட்' (ஐபி) தேர்­வில் உச்­சத் தேர்ச்சி பெற்­றார். பல நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­டி­ருந்­த­போ­தும் நேர அட்­ட­வ­ணையை மிகுந்த கடப்­பா­டு­டன் பின்­பற்­றி­ய­தால் தேர்­வில் தன்­னால் சிறப்­பா­கச் செய்ய முடிந்­தது என்கிறார் இவர்.

சிங்­கப்­பூர் விளை­யாட்­டுப் பள்­ளி­யில் 2014ஆம் ஆண்­டில் 'ஐபி' பாடத்­திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. சிங்­கப்­பூர் விளை­யாட்­டுப் பள்­ளி­யு­டன் சிங்­கப்­பூர் கலைப் பள்ளி (சோட்டா), ஆங்­கிலோ-சீன தன்­னாட்­சிப் பள்ளி, செயின்ட் ஜோசஃப் கல்வி நிலை­யம் போன்ற பள்­ளி­க­ளைச் சேர்ந்த மாண­வர்­கள், கடந்த வாரம் தங்­க­ளின் 'ஐபி' தேர்வு முடி­வு­க­ளைப் பெற்­ற­னர்.

'ஐபி' தேர்­வில் 42 புள்­ளி­கள் பெற்ற தக்­‌ஷின்னா, விளை­யாட்­டுத் துறை­யில் தொடர்ந்து இருக்­க­லாம் அல்­லது அத்­துறை தொடர்­பான மேற்­ப­டிப்பை மேற்­கொள்­ள­லாம் என்று முத­லில் எண்ணி இருந்­தார்.

ஆனால் அவ­ரது திட்­டம் நாள­டை­வில் மாறி­யது.

சமு­தா­யத்­திற்கு உத­வும் ஒரு பணி­யைத் தேர்வு செய்ய அவர் முடி­வெ­டித்­தார்.

சிங்­கப்­பூர் தேசிய பல்­க­லைக்­க­ழ­கத்­தில் மருத்­து­வம் அல்­லது உயிர் அறி­வி­யல் தொடர்­பான படிப்பை மேற்­கொள்ள அவர் விரும்­பு­கி­றார்.

"தற்­போது புதிது புதி­தாக நோய்­கள் கண்­ட­றி­யப்­ப­டு­கின்­றன. இவற்­றுக்கு மருந்து, சிகிச்சை போன்­ற­வற்­றைக் கண்­டு­பி­டிக்­கும் பணி­யில் நான் இருக்க விரும்­பு­கி­றேன்," என்று அவர் கூறி­னார்.

"நான் சிறு வய­தி­லி­ருந்தே எப்­பொ­ழு­தும் சுறு­சு­றுப்­பாக இருப்­பேன். உயர்­நிலை ஒன்­றில் இருந்து சிங்­கப்­பூர் விளை­யாட்டு பள்­ளி­யில் நாங்­கள் மாண­வர் தங்­கு­வி­டு­தி­யில் இருந்­த­வா­று­தான் படிக்க வேண்­டும்.

"வாரத்­தில் ஆறு நாள்­க­ளுக்­குத் தின­மும் இரண்டு மணி நேர­மா­வது ஓட்­டப்­பந்­த­யப் போட்­டி­க­ளுக்­குத் தயார் செய்­வேன். படிப்­பி­லும் என் கவ­னம் சித­றா­மல் இருந்­தது.

"என் அம்மா இறந்­த­போது எனக்கு மிக­வும் சிர­ம­மா­கத்­தான் இருந்­தது. ஆனால், எனது பள்ளி ஆசி­ரி­யர், திரு­மதி டான் தந்த ஊக்­கத்­தால் என்­னால் அந்­தத் துய­ரி­லி­ருந்து தைரி­ய­மாக மீண்டு வர முடிந்­தது. ஓட்­டப்­பந்­த­யத்­தில் ஓடு­வது எனக்கு உற்­சா­கத்­தைத் தரு­கிறது. இலக்­கைக் கைவி­டக்­கூ­டாது என்­ப­தில் நாம் குறி­யாக இருந்­தால் வெற்­றிக்­கனி கிட்­டு­வது நிச்­ச­யம்," என்று கூறி­னார்.

கடந்த நவம்­பர் மாதம் நடந்த ஐபி தேர்­வு­களில் சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்த மாண­வர்­கள் மீண்­டும் உல­க சாதனை படைத்­தி­ருந்­த­னர்.

இந்த ஆண்டு ஐபி தேர்­வில் 45/45 என்ற உச்ச மதிப்­பெண் பெற்ற மாண­வர்­களில் பாதிக்கு மேற்­பட்­ட­வர்­கள் அதா­வது 238 பேரில் 133 பேர் சிங்­கப்­பூ­ரைச் சேர்ந்­த­வர்­கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

செய்தி: சக்தி மேகனா

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!