சிங்கப்பூருக்கான பயண எச்சரிக்கை மாற்றம்

அமெ­ரிக்­கா­வின் 'சிடிசி' எனப்படும் நோய்க் கட்­டுப்­பாட்டு, தடுப்பு நிலை­யம் சிங்­கப்­பூரை மீண்­டும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று அதி­கம் ஏற்­ப­டக்­கூ­டிய நாடாக வகைப்­ப­டுத்­தி­யுள்­ளது. இதற்கு முன்பு சிங்­கப்­பூ­ரில் கிருமிப் பர­வல் சூழல் குறித்து தக­வல் ஏதும் இல்லை என்று அமெ­ரிக்கா அறி­வித்­தி­ருந்­தது.

கிரு­மித்­தொற்று ஏற்­படும் அபா­யத்­தைக் கருத்­தில்கொண்டு அமெ­ரிக்கா பிற நாடு­களை நான்கு பிரி­வு­களாக வகைப்படுத்தி வருகிறது. முதல் நிலை­யில் இடம்­பெ­றும் நாடு­களில் கிரு­மித்­தொற்று ஏற்­படும் அபா­யம் ஆகக் குறைவு, நான்­காம் நிலை­யில் உள்ளவற்றில் இந்த அபா­யம் ஆக அதி­கம்.

சிங்­கப்­பூர் மூன்­றாம் நிலை நாடாக வகைப்ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. மூன்­றாம் நிலை­யில் உள்ள நாடு­களில் கிரு­மித்­தொற்று ஏற்­படும் அபா­யம் அதி­கம் என்­பது அமெ­ரிக்கா தந்­துள்ள பொருள்.

மூன்­றாம் நிலை­யில் உள்ள நாடு­க­ளுக்­குப் பய­ணம் மேற்­கொள்­வோர் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருக்­க­வேண்­டும். தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தோர் இந்­த நாடு­க­ளுக்­குச் செல்­வ­தைத் தவிர்க்­கு­மாறு கேட்­டுக்­கொள்­ளப்­படு­கின்­ற­னர்.

கிரு­மித்­தொற்று குறித்த தக­வல் இல்­லாத நாடு­க­ளுக்­குச் செல்­வதை முற்­றி­லும் தவிர்க்­கு­மாறு மக்­க­ளுக்கு ஆலோ­சனை வழங்­கப்­பட்­டுள்­ளது. தவிர்க்­க­மு­டி­யாத கார­ணங்­க­ளால் இத்­த­கைய நாடு­க­ளுக்­குப் பய­ணம் மேற்­கொள்­ள­வேண்­டிய சூழல் ஏற்­ப­டும்­போது மக்­கள் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டி­ருக்­க­வேண்­டும் என்று அறி­வுரை வழங்­கப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!