நோயாளிகளை நேரில் சென்று பார்க்க தற்காலிகத் தடை

மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் தாதிமை இல்­லங்­க­ளி­லும் தங்கி சிகிச்சை பெறும் நோயா­ளி­களை நேரில் சென்று பார்ப்­ப­தற்­குத் தற்­கா­லி­கத் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த நான்கு வாரங்­க­ளாக ஓமிக்­ரான் கொவிட்-19 கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோர் எண்­ணிக்கை அதி­க­ரித்­தி­ருப்­ப­தால் இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.

சிங்­கப்­பூ­ரின் சுகா­தா­ரப் பரா­

ம­ரிப்­புத் துறைக்கு நெருக்­கடி ஏற்­

ப­டா­மல் இருக்­க­வும் மூத்­தோ­ரைப் பாது­காக்­க­வும் இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக சுகா­தார அமைச்சு நேற்று கூறி­யது.

இந்­தத் தற்­கா­லி­கத் தடை வரும் திங்­கட்­கி­ழ­மை­யி­லி­ருந்து அடுத்த மாதம் 20ஆம் தேதி வரை நடப்­பில் இருக்­கும்.

"மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் தாதிமை இல்­லங்­க­ளி­லும் தங்கி சிகிச்சை பெறும் தங்­கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­களை நேரில் சென்று பார்க்க விழை­யும் குடும்­பத்­தா­ருக்கு இந்த நட­வ­டிக்கை சிர­மத்தை ஏற்

­ப­டுத்­தும். இது எங்­க­ளுக்கு வருத்­தத்­தைத் தரு­கிறது. இருப்­பி­னும், பொது­மக்­க­ளின் சுகா­தா­ரத்­தை­யும் நல­னை­யும் காக்க இவ்­வாறு முடி­வெ­டுக்­கப்­பட்­டுள்­ளது," என்று கொவிட்-19க்கு எதி­ரான அமைச்சு ­கள்நிலை பணிக்­குழு நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில் மருத்­து­வச் சேவை­க­ளுக்­கான இயக்­கு­நர் கென்­னத் மாக் தெரி­வித்­தார்.

சமூக அள­வில் நிலைமை மேம்­பட்­ட­தும் இந்­தக் கட்­டுப்­பா­டு­கள் தொடர்­வது குறித்து அதி­கா­ரி­கள் ஆய்வு நடத்­து­வர் என்று அவர் கூறி­னார்.

நேற்று முன்­தி­ன நில­வ­ரப்­படி சிங்­கப்­பூ­ரில் மேலும் 1,001 பேருக்கு ஓமிக்­ரான் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது. அவர்­களில் 952 பேருக்­குச் சமூக அள­வில் பாதிப்பு ஏற்­பட்­டது. 49 பேர் வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்­த­வர்­கள்.

வாராந்­தி­ரத் தொற்று அதி­

க­ரிப்பு விகி­த­மும் நேற்று முன்­

தி­னம் 2.17ஆக அதி­க­ரித்­தது.

கடந்த ஆண்டு செப்­டம்­பர் மாதம் 19ஆம் தேதிக்­குப் பிறகு சிங்­கப்­பூ­ரின் வாராந்­தி­ரத் தொற்று அதி­க­ரிப்பு விகி­தம் 2க்கு மேல் பதி­வாகி இருப்­பது இதுவே முதல்­முறை. சூழ்­நி­லை­யைப் பொறுத்து நோயா­ளி­களை நேரில் சென்று பார்க்க மருத்­து­வ­ம­னை­களும் தாதிமை இல்­லங்­களும் சில­ருக்கு அனு­மதி வழங்­க­லாம் என்று சுகா­தார அமைச்சு கூறி­யது. உதா­ர­ணத்­துக்கு, கவ­லைக்­கி­டமாக இருக்­கும் நோயா­ளி­கள், மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள குழந்­தை­கள், மகப்­பேறு கார­ண­மாக மருத்­து­வம­னை­களில் அனு­ம­திக்­கப்­ப­டு­பவர்கள் போன்­றோரை நேரில் சென்று பார்க்க அவ­ரது குடும்­பத்­தார் அனு­ம­திக்­கப்­ப­ட­லாம். அத்­த­கைய நோயா­ளி­ க­ளைக் காண ஒரு­நா­ளுக்கு ஒரு­வர் மட்­டுமே செல்ல முடி­யும்.

நோயா­ளி­களை நேரில் சென்று பார்க்க தற்­கா­லி­கத் தடை நடப்­பில் இருக்­கும்­போது தங்­கள் அன்­புக்­கு­ரி­ய­வர்­க­ளு­டன் அவர்­கள் தொடர்ந்து தொடர்­பில் இருப்­பது உறுதி செய்­யப்­படும்.

தொலை­பேசி அல்­லது காணொளி அழைப்பு போன்ற தொடர்பு முறைக்கு ஏற்­பாடு செய்­யப்­படும். மருத்­து­வ­ம­னைக்­குச் செல்­லும் வரு­கை­யா­ளர்­கள் அதி­கப் பாது­காப்பு வழங்­கக்­கூடிய முகக்­க­வ­சங்­களை அணிந்­தி­ருக்க வேண்­டும். அவர்­கள் மருத்­துவ முகக்­க­வ­சம் அணி­ய­லாம். மீண்­டும் மீண்­டும் பயன்­ப­டுத்­தக்­கூ­டிய முகக்­க­வ­சம் அணிந்­தி­ருந்­தால் அது ஈர­டுக்­குத் துணி கொண்­ட­தாக இருக்க வேண்­டும்.

மருத்­து­வ­மனை அறை­யில் இருக்­கும்­போது வரு­கை­யா­ளர்­கள் உணவு சாப்­பி­டவோ தண்­ணீர் அருந்­தவோ கூடாது. நோயா­ளி­

க­ளுக்­கான கழி­வ­றை­களை அவர்­கள் பயன்­ப­டுத்­தக்­கூ­டாது. நோயாளி­க­ளின் படுக்­கை­யில் அமர்­வதை அவர்­கள் தவிர்க்க வேண்­டும். மருத்­து­வ­ம­னைக்­குச் செல்­லும் முன் வரு­கை­யா­ளர்­கள் அனை­

வ­ரும் ஏஆர்டி பரி­சோ­தனை செய்து­ கொண்டு தங்­க­ளுக்­குக் கிரு­மித்­தொற்று இல்லை என்­பதை உறுதி செய்ய வேண்­டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!