12 முதல் 17 வயது சிறாருக்கு ‘பூஸ்டர்’

12 முதல் 17 வய­துள்­ள­வர்­க­ளுக்கு பூஸ்­டர் எனப்­படும் கூடு­தல் தடுப்­பூ­சி­க­ளை சிங்­கப்­பூர் போட­ இருக்கிறது.  அதன்­படி 12 முதல் 17 வய­துள்­ள­வர்­கள் கூடு­தல் தடுப்­பூசி போட்­டி­ருந்­தால்­தான் அவர்­கள் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­ட­வ­ர்களாகக் கரு­தப்­ப­டு­வார்­கள்.

இந்த நடை­முறை, மார்ச் 14ஆம் தேதி நடப்­புக்கு வரும் என்று சுகா­தார அமைச்சு நேற்று கூறி­யது. கூடு­தல் தடுப்­பூ­சித் திட்­டம் தற்­போது 18 வயது அல்­லது அதற்­கும் மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு வழங்­கப்­ப­டு­கிறது. பிப்­ர­வரி தொடக்­கத்­தில், கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள  12 முதல் 17

வய­தின­ருக்கு குறுஞ்­செய்தி மூலம் அழைப்பு விடுக்­கப்­படும். 

முத­லில்  16 முதல் 17

வய­தி­ன­ருக்­கும் பின்­னர் 12 முதல் 15 வய­தி­ன­ருக்­கும் இதுகுறித்த குறுஞ்­செய்­தி­கள் அனுப்­பப்­படும். 

“இந்த வய­துப் பிரி­வில் நீங்­கள் இருந்து, உங்­க­ளுக்­குக் கூடு­தல் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள குறுஞ்­செய்தி  கிடைத்­தால், நீங்­கள் உட­ன­டி­யாக தடுப்­பூசி போட்­டுக் கொள்ள வேண்­டும்,” என்று சுகா­தார அமைச்­சர் ஓங் யி காங் வலி­யு­றுத்­தி­னார். 

கொவிட்-19 பர­வ­லுக்கு எதி­ரான அமைச்­சு­கள்­நி­லைப் பணிக்­கு­ழு­வின் இணைத்­த­லை­வ­ரான திரு ஓங், பணிக்­குழு  நேற்று நடத்­திய செய்­தி­யா­ளர் கூட்­டத்­தில்  பேசி­னார்.

அமெ­ரிக்கா, இஸ்­ரேல், சில்லி, கத்­தார் போன்ற நாடு­கள் 12 முதல் 17 வய­தி­ன­ருக்­குக் கூடு­தல் தடுப்­பூசி போடத் தொடங்­கி­யுள்­ளதை அவர் சுட்­டிக்­காட்­டி­னார். 

கொவிட்-19 தடுப்­பூசி தொடர்­பான நிபு­ணர்­கள் குழு இந்­தத் தர­வு­களை ஆராய்ந்­தது.

பின்­னர், 12 முதல் 17 வய­தி­ன­ருக்­குக் கூடு­தல் தடுப்­பூசி பாது­காப்­பா­க­வும் செயல்­தி­றன் மிக்­க­தா­க­வும் உள்­ளது என்று குழு முடிவு செய்­த­தாக திரு ஓங் கூறி­னார்.  அத்­து­டன் இந்த வய­துப் பிரி­வி­னர், ஃபைசர் அல்­லது மொடர்னா தடுப்­பூ­சியை இரண்டு முறை­யும் சினோ­ஃபார்ம் அல்­லது சினோ­வேக் தடுப்­பூ­சியை மூன்று முறை போட்­டுக் கொண்ட 270 நாள்­க­ளுக்­குள் கூடு­தல் தடுப்­

பூ­சி­யைப் போட்­டுக்­கொள்ள வேண்­டும்.  அப்­போ­து­தான் இவர்­கள் முழு­மை­யாக தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­வர்­கள் எனும்

தகு­தி­யைத் தக்­க­வைத்­துக் கொள்ள முடி­யும். கூடு­தல் தடுப்­பூ­சிப் போட்டுக்­கொள்ள இளை­யர்­க­ளுக்கு  அவ­கா­சம் தர, இந்த நடை­முறை மார்ச் 14ஆம் தேதி  நடப்­புக்கு வரும். 12 முதல் 17 வய­துள்­ள­வர்­கள், அடை­யாள விவ­ரங்­க­ளைக் கொண்­டு­சென்று,  ஃபைசர் தடுப்­பூசி போடும் எந்த நிலை­யத்­தி­லும் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­லாம்.

 12 வயது சிறு­வர்­க­ளும் சிறப்­புத் தேவை உள்­ளோ­ரும் பள்­ளி­களில் படிப்­ப­வர்­க­ளும் பெற்­றோருடன் செல்ல வேண்­டும்.

 13 வயது சிறு­வர்­க­ளுக்­குப் பெற்­றோர் உடன்­செல்­லத் தேவை­இல்லை. 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!