மோசடியால் ஏற்பட்ட பெரும் மனவுளைச்சல்

சென்ற மாதம் 28ஆம் தேதி­யன்று இல்­லத்­த­ர­சி­யான சித்தி ரவுதா முகம்­மது அலி, சில நிமி­டங்­களில் சுமார் 100,000 வெள்­ளியை இழந்­தார். ஏழு பிள்­ளை­க­ளுக்­குத் தாயான இவர், ஒசி­பிசி வங்­கி அனுப்­பி­ய­து­போல் இருந்த குறுந்­தக­வ­லால் ஏமாற்­றப்­பட்­டார்.

"எனது உல­கமே என் மீது இடிந்து விழுந்­த­து­போல் இருந்­தது. ஒன்­றும் செய்­ய­மு­டி­யாத உணர்வு என­க்குள் நிலவியது,' என்று ஏமாற்­றிப் பறிக்­கப்­பட்ட பணம் குறித்து பல முறை தனது கை­பே­சிக்­குத் தக­வல் வந்த வண்­ணம் இருந்­தது­என்று திரு­வாட்டி சித்தி கூறி­னார்.

சென்ற மாதம் குறுந்­த­க­வல்­களின்­வழி நிகழ்த்­தப்­பட்ட மோச­டிக்கு ஆளான சுமார் 470 ஓசி­பிசி வங்கி வாடிக்கையாளர்களில்­ இவ­ரும் ஒரு­வர். ஏமாற்­றப்­பட்­டோர் அனை­வரும் மொத்­த­மா­கக் குறைந்­தது 8.5 மில்­லி­யன் வெள்­ளியை இழந்­த­னர். கிறிஸ்­து­மஸ் வார இறு­தியில் மட்­டும் 186 பேர் மொத்­த­மா­கக் கிட்­டத்­தட்ட 2.7 மில்­லி­யன் வெள்ளி­யைப் பறி­கொ­டுத்­த­தாக ஒசி­பிசி தெரி­வித்­தது.

இச்­சம்­ப­வத்­தால் பெரும் மனக்­க­வ­லைக்கு உள்­ளான திரு­வாட்டி சித்தி, சில நாள்­க­ளுக்கு அன்­றாட நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தில் சிர­மப்­பட்­டார். இவர் இழந்த பணத்தை ஓசி­பிசி திரும்­பிக் கொடுத்­தது. எனி­னும், திரு­வாட்டி சித்தி இன்­ன­மும் மன­நல ஆலோ­ச­க­ரின் உத­வியை நாடு­கி­றார். ஏமாற்­றப்­பட்­டோ­ரில் சிலர், ஒசி­பிசி அதி­கா­ரி­க­ளைத் தொடர்­பு­கொள்ள தொலை­பே­சி­யில் 20 நிமி­டங்­க­ளுக்­கும் மேல் காத்­தி­ருந்­த­தா­கக் கூறி­னர். நட­வடிக்கை எடுக்கப்படுவதற்குள் பலர் தாங்­கள் சேமித்ததில் பெரும்­பங்கை இழக்க நேரிட்­டது. நிலை­மை­யைச் சரி­செய்ய ஓசி­பி­சி­யு­டன் அதி­கா­ரி­களும் சென்ற வாரம் விரைந்து தகுந்த நட­வ­டிக்­கை­களை எடுத்­த­னர். இத­னால் மின்­னி­லக்க வங்கி முறை பாது­காப்­பா­னதா என்ற கேள்வி எழு­கிறது.

அண்­மைக் கால­மாக நிக­ழும் ஏமாற்­றுச் சம்­ப­வங்­கள் புதி­தல்ல. பல ஆண்­டு­க­ளாக எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டா­லும் சிலர் இன்­ன­மும் மோச­டிக்கு ஆளா­கின்­ற­னர். 2005ஆம் ஆண்­டுக்­கும் 2006ஆம் ஆண்­டுக்­கும் இடைப்­பட்ட காலத்­தி­ல் குறுந்­த­க­வல்­க­ளின்­வழி நிகழ்த்­தப்­படும் மோச­டிச் சம்­ப­வங்­கள் உரு­வெ­டுத்­தன என்று இணை­யப் பாது­காப்பு வல்­லு­நர்­கள் கூறு­கின்­ற­னர்.

அத்­த­கைய சம்­ப­வங்­கள் மீண்­டும் தலை­தூக்­கு­வ­தாக 2019ஆம் ஆண்டு காவல்­து­றை­யி­னர் எச்­சரிக்கை விடுத்­த­னர்.

ஏமாற்­றுக்­கா­ரர்­கள் காலத்­துக்கு ஏற்­ற­வாறு மேம்­பட்ட முறை­யில் மோசடி செய்­கின்­ற­னர். வேக­மாக ஓடிக்­கொண்­டி­ருக்­கும் வாழ்க்கை முறை­யால் சிலர் ஏற்­கெ­னவே விடுக்­கப்­பட்ட எச்­ச­ரிக்­கை­க­ளைக் கருத்­தில்­கொள்­வதில்லை என்றும் கூறப்­ப­டு­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!