ஊட்ரம் சமூக மருத்துவமனை திறப்பு

கொவிட்-19 தொற்­றுச்­சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­த­போது படுக்­கை பற்றாக்கு­றை­யால் திண­றிய சிங்­கப்பூர் பொது மருத்­து­வ­ம­னைக்கு கைகொ­டுத்த ஊட்­ரம் சமூக மருத்துவமனை நேற்று அதி­கா­ர­பூர்­வ­மாகத் திறந்துவைக்­கப்­பட்­டது.

கடந்த இரண்டு ஆண்­டு­கா­ல­மாக அது செயல்­பட்டு வரு­கிறது.

சிங்­கப்­பூர் ெபாது மருத்­து­வ­மனை வளா­கத்­தில் உள்ள கட்­ட­டங்­களை இரு­பது ஆண்­டு­களில் நான்கு பில்­லி­யன் வெள்ளி செல­வில் புதுப்­பிக்­கும் திட்­டத்­தின் ஒரு பகு­தி­யாக ஊட்­ரம் சமூக மருத்து­வ­ மனை புதிய தோற்­றத்­தைப் பெற்று உள்ளது.

புதிய சிங்­ஹெல்த் டவ­ரில் ஆறு மாடி­களில் அது அைமந்­துள்­ளது.

"ஒவ்­வொரு கட்­ட­டத்­தின் உள்­கட்­ட­மைப்பு வச­தி­களிலும் புதிய தொழில்­நுட்­பங்­கள் புகுத்­தப்­பட்­டுள்­ளன. பர­ம­ரிப்­புச் சேவையை உரு­மாற்­றி­ய­மைப்­ப­தற்கு இது ஒரு நல்ல வாய்ப்பு," என்று சிங்­ஹெல்த் தலைமை நிர்­வாகி இவி இங் நேற்று திறப்பு விழா­வில் தெரி­வித்­தார்.

புதுப்­பிப்பு திட்­டத்­தின் ஒரு பகுதி­யாக இவ்­வாண்டு பிற்­ப­கு­தி­யில் புதிய தேசிய புற்­று­நோய் சிகிச்சை நிலை­யம் திறக்­கப்­ப­ட ­வி­ருக்­கிறது. சிங்­கப்­பூர் பொது மருத்­து­வ­ம­னை­யின் புதிய அவ­சர சிகிச்சை கட்­ட­ட­மும் 2024ஆம் ஆண்­டி­லி­ருந்து செயல்­ப­ட­வி­ருக்­கிறது.

அடுத்­த­டுத்து சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு நிலை­ய­மும் தேசிய பல் சிகிச்சை நிலை­ய­மும் 2027ஆம் ஆண்­டு­வாக்­கில் திறக்­கப்­ப­ட­வி­ருக்­கின்­றன. இரண்­டா­வது புதுப்­பிப்­புப் பணி­யில் மேம்­பட்ட சாலை­களும் அமைக்­கப்­படும்.

திறப்பு விழா­வில் சிறப்பு விருந்­தி­ன­ரா­கக் கலந்­து­கொண்டு பேசிய சுகா­தார அமைச்­சர் ஓங் யீ காங், பொதுக் கட்­ட­மைப்பு வச­தி­களை தொடர்ந்து மேம்­ப­டுத்­தும் அர­சாங்க முத­லீ­டு­க­ளின் ஒரு பகு­தி­யாக இத்­த­கைய மேம்­பா­டு­கள் இடம்­பெறு ­வ­தா­கத் தெரி­வித்­தார்.

"முத­லீ­டு­க­ளுக்கு அப்­பால் ஒட்டு ­மொத்த திட்­டத்­தை­யும் நுணுக்­க­மா­கச் சிந்­தித்து செயல்­ப­டுத்த வேண்­டி­யி­ருக்­கிறது," என்று அவர் குறிப்­பிட்­டார்.

உதா­ர­ண­மாக, சிங்­கப்­பூ­ரின் தற்­போ­தைய பரப்­ப­ரப்­பான மிகப்­ப­ழ­மை­யான மருத்­து­வ­ம­னைச் சேவை­ க­ளுக்கு இடை­யூறு ஏற்­ப­டுத்­தா­மல் சேவை­க­ளை­யும் சாலை­க­ளை­யும் மாற்­றி­ய­மைக்க வேண்­டி­யி­ருக்­கிறது என்று அவர் சொன்னார்.

புதிய சமூக மருத்­து­வ­ம­னை­யில் 545 படுக்­கை­கள் உள்­ளன. பொது மருத்­து­வ­மனை வழங்­கும் உட­னடி சிகிச்சை தேவைப்­ப­டாத அதே சம­யத்­தில் வீட்­டுக்­குத் திரும்ப முடி­யாத நோயா­ளி­க­ளுக்கு இங்கு சிகிச்சை அளிக்­கப்­படும். முழங்­கால் மூட்டு அறுவை சிகிச்சை, இடுப்பு எலும்பு முறிவு, பக்­க­வா­தம் போன்ற சிகிச்­சை­கள் அவற்­றில் அடங்­கும்.

கொவிட்-19 தொற்­றி­லி­ருந்து குண­ம­டைந்த நோயா­ளி­கள் ஏற்­கெ­னவே உள்ள நோயால் பாதிக்­கப்­பட்டு பல­வீ­ன­மடைந்த மறுவாழ்வு தேவைப்படும் முதி­ய­வர்­க­ளுக்­கும் இங்கு சிகிச்சை அளிக்­கப்­ப­டு ­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!