சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகத்துக்கு $25 மில்லியன் நன்கொடை

சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கத்­தில் பயி­லும் வசதி குறைந்த மாண­வர்­கள் இப்­போது அந்­தப் பல்­க­லைக்­க­ழ­கத்­துக்­குக் கிடைத்­தி­ருக்­கும் $25 மில்­லி­யன் நன்­கொடை தொகை­யி­லி­ருந்து பல்­வேறு உத­வி­க­ளைப் பெற­லாம்.

வெளி­நாட்­டுப் பகிர்­வுத் திட்­டங்­கள், வேலைப் பயிற்­சி­கள் மற்­றும் இதர அனு­பவக் கற்­றல் வாய்ப்புகள் அந்த மாண­வர்­கள் பெறக்­கூ­டிய உத­வி­கள்.

'நீ ஆன் கொங்சி எழுச்சி நிதி' என்று அழைக்­கப்­படும் அது இது­வரை அந்­தப் பல்­க­லைக்­க­ழ­கம் பெற்­றுள்ள ஆகப் பெரிய நன்­கொ­டை­யா­கும் என்று அதன் தலை­வர் திரு சுவா கீ சியாங் நேற்று தெரி­வித்­தார்.

ஒவ்­வோர் ஆண்­டும் $2.5 மில்­லி­யன் வீதம் அடுத்த பத்து ஆண்­டு­க­ளுக்கு அந்த நிதி சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கத்­துக்கு வழங்­கப்­படும்.

"இந்­தப் புதிய நிதி, மாண­வர்­கள் பங்­கேற்­கும் தலை­மைத்­துவ திட்­டங்­க­ளுக்­கும் பயன்­பாட்டு ஆராய்ச்சி திட்­டங்­க­ளுக்­கும் ஆத­ர­வ­ளிக்­கும்," என்­றார் பேரா­சி­ரி­யர் சுவா.

நீ ஆன் கொங்சி அமைப்­பி­லி­ருந்து கிடைத்­தி­ருக்­கும் இந்த நன்­கொடை, பொங்­கோ­லில் எதிர்­கா­லத்­தில் அமை­ய­வி­ருக்­கும் சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கத்­தில் நிரந்­தர வளா­கத்­தில் அமை­யும் நூல­கத்­தின் மேம்­பாட்டுக்கு மேலும் ஆத­ர­வ­ளிக்­கும். அந்த நூல­கம் தொழில்­நுட்ப ஆற்­ற­லு­டைய கூட்டு கற்­றல் இட­மாக அமை­யும்.

தற்­போது டோவர் ரோட்­டில் அமைந்­துள்ள தற்­கா­லிக பல்­க­லைக்­க­ழக வளா­கம் தனது நூல­கத்­துக்கு நீ ஆன் கொங்சி நூல­கம் என பெயர் சூட்­டி­யுள்­ளது. அந்­தப் பெயர் 2024ல் பொங்­கோ­லில் செயல்­ப­டத் தொடங்­கும் பல்­க­லைக்­க­ழ­கத்­தின் நூல­கத்­துக்கு மாற்­றப்­படும்.

நேற்­றைய பெய­ரி­டும் விழா­வில் பங்­கேற்ற கல்வி அமைச்­சர் சான் சுன் சிங், "நீ ஆன் கொங்சி அமைப்­பைப் போல, மற்ற அற­நி­று­வ­னங்­களும் வெற்­றி­க­ர­மான வர்த்­த­கங்­களும் சிங்­கப்­பூர் தொழில்­நுட்­பக் கழ­கம் மட்­டு­மல்­லா­மல் சிங்­கப்­பூ­ரில் உள்ள மற்ற உயர்­கல்வி நிலை­யங்­க­ளுக்­கும் கூட்டு கற்­றல் வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­திக் கொடுக்க வேண்­டும்.

"வேலைப் பயிற்­சி­கள், தொழி­லி­யல் ஒத்­து­ழைப்பு போன்ற வாய்ப்­பு­கள்­தான் நமது மாண­வர்­கள் எதிர்­கால சவால்­களை எதிர்­கொள்­ளக்­கூ­டிய ஆற்­றல்­களை ஏற்­ப­டுத்­திக் கொடுக்­கும்," என்று தெரி­வித்­தார்.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!