மறதிநோய் உள்ளோருக்கு உதவி

மற­தி­நோய் இருப்­ப­தால் வீட்­டில் சொல்­லிக்­கொள்­ளா­மல் வெளியே சென்று தொலைந்­து­போகும் ஆபத்தில் உள்ளோருக்கு உதவ வழி பிறந்­துள்­ளது. தோபாயோ பேருந்து முனை­யத்­தில் பாதை­யைக் கண்­ட­றி­வ­தற்­காக ஓவி­யங்­க­ளைக் கொண்ட வழி­காட்­டி­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.

'ஃபைண்ட் யுவர் வே' எனும் 'உங்­கள் வழியை அறி­யுங்­கள்' எனும் புதிய திட்­டம் இதனை அமைத்­துள்­ளது.

முதி­யோர், மற­தி­நோய் உள்­ள­வர்­கள் போன்­றோ­ருக்­குப் பொதுப் போக்­கு­வ­ரத்­துச் சேவை­களைப் பயன்­ப­டுத்த உத­வு­வது இத்­திட்­டத்­தின் இலக்கு.

வண்­ண­ம­ய­மான வழி­காட்­டி­கள் இத்­த­கை­யோர் தொலைந்­து­போகாமல் இருக்­கக் கைகொ­டுக்­கும். பாலர் பரு­வத்­தில் இவர்­கள் ஈடு­பட்­டி­ருக்­கக்­கூ­டிய விளை­யாட்டு­க­ளைச் சித்­தி­ரிக்­கும் ஓவி­யங்­கள் நினை­வாற்­றலை மேம்­படுத்தி உத­விக்­க­ரம் நீட்­ட­லாம்.

எஸ்­பி­எஸ் டிரான்­ஸிட் போக்­கு­வ­ரத்து சேவை நிறு­வ­னம், மற­தி­நோய் சமூக சேவை அமைப்­பான 'டிமென்­ஷியா சிங்­கப்­பூர்' ஆகிய இரண்­டும் 'உங்­கள் வழியை அறி­யுங்­கள்' திட்­டத்தை நடத்­து­கின்­றன.

மற­தி­நோய் உள்­ள­வர்­க­ளின் கருத்­து­க­ளின் அடிப்படையில் இவ்விரு அமைப்புகளும் வழி­காட்டி­க­ளை உரு­வாக்­கி­யுள்­ளன.

'உங்கள் வழியை அறியுங்கள்' திட்­டம் நேற்று தொடங்­கப்­பட்­டது. அதை­யொட்டி செய்­தி­யா­ளர்­க­ளுக்கு தோபாயோ பேருந்து முனை­யம் சுற்­றிக் காட்டப்­பட்­டது.

இந்­தப் பேருந்து முனை­யம் ஐந்து பகு­தி­க­ளா­கப் பிரிக்­கப்­பட்டுள்­ளது.

ஒவ்­வொன்­றி­லும் வெவ்வேறு வண்­ணத்­தில் பழைய நினை­வு­க­ளைக் கொண்­டு­வ­ரக்­கூ­டிய சிறு­வர் விளையாட்­டு­க­ளைச் சித்­திரிக்­கும் ஓவி­யங்­கள் இடம்­பெ­று­கின்­றன. 'சாப்தே', கோலி விளை­யாட்டு உள்­ளிட்­ட­வற்றை ஓவி­யங்­கள் சித்­திரிக்­கின்­றன.

போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் இத்திட்டத்தைத் தொடங்கிவைத்தார்.

"2040 நிலப் போக்­கு­வ­ரத்­துப் பெருந்­திட்­டத்­தின்­கீழ் பய­ணி­க­ளின் பல­த­ரப்­பட்ட தேவை­க­ளைப் பூர்த்தி­செய்­யும் வகை­யில் நமது பொதுப் போக்­கு­வ­ரத்து முறையை மேம்­படுத்­தும் முயற்­சி­யில் ஈடு­பட்­டுள்­ளோம்," என்று பீஷான்-தோபாயோ குழுத்­தொ­குதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அவர் குறிப்­பிட்­டார்.

அங் மோ கியோ, பூன் லே, ஹவ்காங் சென்ட்ரல் ஆகியவற்றில் உள்ள பேருந்து முனையங்களிலும் இந்த வழிகாட்டி ஓவியங்களை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும், சைனா­ட­வுன், பூன் கெங், கோவன், கேலாங் பாரு உட்­பட ஐந்து பெரு­வி­ரைவு ரயில் நிலை­யங்­களில் இத்­திட்­டம் நீட்­டிக்­கப்­ப­ட­வுள்­ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!