முதியோருக்கு உதவும் திட்டத்துக்குப் பேருதவி 31,500 பேர் பூஸ்டர் தடுப்பூசி போடவில்லை

பூஸ்­டர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்ள தகுதி இருந்­தும் இன்­ன­மும் 31,500 பேர் அதற்­குப் பதிந்­து­கொள்­ள­வில்லை என்று சுகா­தார அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

திங்­கட்­கி­ழமை வரை­யி­லான இந்த நில­வ­ரத்தை வெளி­யிட்ட அமைச்சு, இம்­மா­தம் 14ஆம் தேதி­யி­லி­ருந்து அவர்­கள் முழு­மை­யா­கத் தடுப்­பூசி போட்­டுக்கொண்­ட­தாக எடுத்­துக்கொள்­ளப்­ப­டாது என்று தெரி­வித்­தது. அவர்­க­ளு­டைய தடுப்­பூ­சித் தகுதி 'கூடு­தல் தடுப்­பூசி தேவைப்­ப­டு­கிறது' என்ற நிலைக்கு மாற்­றப்­படும். இவர்­கள் அனை­வரும் தேசிய தடுப்­பூசி இயக்­கத்­தின்கீழ் ஃபைசர்-பயோ­என்­டெக்/கமிர்­நாட்டி அல்­லது மொடர்னா தடுப்­பூசி போட்டு 270 நாட்­க­ளுக்கு மேல் ஆகி­விட்­டது என்று அமைச்சு தெரி­வித்­தது.

தடுப்­பூ­சித் தகுதி மாற்­றம், மூன்று முறை சினோ­வேக்-கொரோ­னா­வேக் அல்­லது சினோ­ஃபார்ம் தடுப்­பூசி போட்­ட­வர்­க­ளுக்­கும் அல்­லது அவ­ச­ர­கால பயன்­பாட்­டுக்கு உலக சுகா­தார நிறு­வ­னம் அனு­ ம­தித்த தடுப்­பூ­சி­க­ளுக்­குப் பொருந்­தும். ஜான்­சன் அண்ட் ஜான்­சன் தடுப்­பூ­சியை ஒரு முறை போட்­ட­வர்­கள், ஆஸ்ட்­ர­ஸெ­னகா, கொவி­ஷீல்ட், கோவேக்­ஸின் அல்­லது நோவாவேக்ஸ் தடுப்­பூசி போட்­ட­வர்­களும் இதில் அடங்­கு­வர் என்று அமைச்சு குறிப்­பிட்­டது.

முன்­ப­திவு செய்­யாத இவர்­ களுக்­குத் தொடர்ந்து நினை­வூட்டு குறுந்­த­க­வல் அனுப்பி வைக்­கப் ­ப­டு­கிறது. "இவர்­கள் அனை­வ­ரும் பூஸ்­டர் தடுப்­பூ­சிக்கு பதிந்­து­கொள்ள வலி­யு­றுத்­து­கி­றோம். தடுப்­பூசி நிலை­யங்­க­ளுக்கு நேர­டி­யாக வந்­தும் தடுப்­பூசி ேபாட­லாம்," என்று அமைச்சு மேலும் கூறி­யது.

ஆஸ்­டி­யோ­பரோ­சிஸ் (Osteoporosis) எனும் எலும்பு பல­வீ­ன­ம­டை­தல் அல்­லது எளி­தில் எலும்பு உடை­யும் பிரச்­சி­னை­களில் முதி­யோர்­க­ளுக்கு உத­வும் முன்­னோ­டித் திட்­டத்­துக்கு பேரு­தவி கிடைத்­துள்­ளது.

அதி­பர் அறப்­பணி சவால் மூலம் கடந்த ஆண்டு திரட்­டப்­பட்ட நிதி­யி­லி­ருந்து ஒரு பகுதி, அதா­வது 250,000 வெள்ளி அத்­திட்­டத்­துக்கு வழங்­கப்­பட்­டுள்­ளது.

'வலு­வான எலும்­பு­கள்' எனும் முன்­னோ­டித் திட்­டத்தை கடந்த ஆண்டு 'சாட்டா காம்­ஹெல்த்' என்ற தொண்டு நிறு­வ­னம் அறி முகப்­ப­டுத்­தி­யது.

'ஆஸ்­டி­யோ­பரோசிஸ்' பிரச்­சி­னை­க­ளால் பாதிக்­கப்­படும் முதி­யோ­ருக்கு ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட சிசிச்­சை­களை வழங்­கு­வது அதன் நோக்­க­மா­கும்.

2011ஆம் ஆண்­டி­லி­ருந்து முதி­யோர்­க­ளி­டம் 'ஆஸ்­டி­யோ­போ­ர­சிஸ்' பிரச்­சி­னை­களை பரி­சோ­த­னை­கள் மூலம் 'சாட்டா காம்­ஹெல்த்' கண் டறிந்து வரு­கிறது. ஆனால் அதன் பிறகு முதி­யோர்களுக்கு அந்­நி­று­ வ­னத்­தால் தொடர்ந்து சிகிச்சை அளிக்க முடி­ய­வில்லை.

எலும்பு அடர்த்­தி­யைக் கண்­டு­பி­டிக்­கும் பரி­சோ­த­னை­களை அது நோயா­ளி­க­ளி­டம் நடத்­தி­னா­லும் உடற்­ப­யிற்சி சிகிச்சை உள்­ளிட்ட மருத்­துவ சேவை­க­ளுக்கு மற்ற இடங்­க­ளை முதி­யோர் நாட வேண்­டி­யி­ருந்­தது.

தற்­போது வழங்­கப்­பட்­டுள்ள நிதி யால் கடந்த நவம்­பர் மாதத்­தி­ல்­இருந்து கண்­ட­றி­யப்­பட்ட ஆஸ்­டி­யோ­பரோசிஸ் நோயா­ளி­க­ளுக்கு தேவை­யான சிகிச்­சை­களை அளிக்க முடி­யும்.

'சாட்டா காம்­ஹெல்த்' சமூ­கத் திட்­டங்­க­ளுக்­கான தலை­வ­ரும் இயக்­கு­நருமான ஷெர்­மன் சான், அதி­பர் சவால் நிதி­யால் இத்­திட்­டத்­துக்­கென சிறப்புப் பயிற்சி பெற்ற ஒரு­வரை முழுநேர பணி­யில் அமர்த்த முடி­யும் என்­றார்.

"புதிய திட்­டத்­தைத் தொடங்கு வதற்­கான செல­வு­களை சமா­ளிக்க முடி­யும். மூப்­ப­டை­யும் மக்­கள்­தொகை அதி­க­ரித்து வரும் வேளை­யில் அவர்­க­ளைப் பாதிக்­கும் முக்­கி­யப் பிரச்­சி­னை­களில் உதவ முடி­யும்," என்­றும் அவர் தெரி­வித்­தார்.

மூப்­ப­டை­தல் விவ­கா­ரங்­க­ளுக்­கான அமைச்­சர்­நி­லைக் குழு, 2030ஆம் ஆண்­டில் சிங்­கப்­பூ­ரில் உள்ள நால்­வ­ரில் ஒரு­வர் 65 வய­துக்கு மேல் இருப்­பார் என்று கூறி­உள்­ளது.

அது மட்­டு­மல்­லா­மல், கீழே விழு­தலும் அத­னால் ஏற்­படும் காயமும் முதி­யோருக்கு முக்­கிய பிரச்­சி­னை­யாக இருக்­கும் என்­றும் காயம் தொடர்­பான முதி­யோர் இறப்­பு­களில் நாற்­பது விழுக்­காடு தவறி விழுந்­த­தால் இருக்­கும் என்­றும் அது தெரி­வித்­தது. சாட்டா காம்­ஹெல்த் திட்­டத்­தால் பல­ன­டைந்­த­வர்­களில் 80 வயது திரு­மதி ஹாஜ்ஜா சல்மா மாவோ­னும் ஒரு­வர். அண்­மை­யில் கீழே விழுந்து காய­ம­டைந்த அவ­ருக்கு திட்­டத்­தின் மூலம் உடற்­ப­யிற்சி சிகிச்சை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

"இப்­போது என்­னால் ஓர­ளவு நடக்க முடி­கிறது. என்­னால் தனி­யா­கச் செயல்­ப­ட­வும் முடி­கிறது," என்று அவர் கூறி­யுள்­ளார்.

கடந்த செவ்­வாய்க்­கி­ழமை எண் 351 சாய் சீ ஸ்தி­ரீட்­டில் அமைந்­துள்ள சாட்டா காம்­ஹெல்த் தலை­மை­ய­கத்­துக்கு அதி­பர் ஹலிமா யாக்­கோப் வரு­கை­ய­ளித்­தார்.

சமூ­கத் திட்­டங்­களை அறிந்­து­கொள்­ளும் நோக்­கத்­தில் அமைந்த பய­ணத்­தின்­போது, சாட்டா காம்­ஹெல்த் நிறு­வ­னத்­துக்­கும் அதன் முன்­கள ஊழி­யர்­க­ளுக்­கும் அதி­பர் ஹலிமா நன்றி தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!